நேர்த்திக் கடன்நேர்த்திக் கடன் என்பது தன்னுடைய கோரிக்கை நிறைவடைந்தால், இறைவனிடம் பொருள் தருவதாகவும், சில சடங்குகள் செய்வதாகவும் பக்தர்கள் வேண்டிக்கொள்ளுதல் ஆகும். இந்து சமயம்இந்து சமயத்தில் எண்ணற்ற நேர்த்திக் கடன்கள் உள்ளன. இவற்றை நிறைவேற்ற எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படுவதில்லை. [1] கோரிக்கைகள் நிறைவேறியதும் நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செய்கின்றார்கள். இவ்வகையான நேர்த்திக் கடன்களை மூன்றாக பிரித்துக் கொள்கின்றனர். [2]
உடலை வருத்தும் நேர்த்திக் கடன்கள்பெரு தெய்வ வழிபாட்டில் தங்கத்தேர் இழுத்தல், இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் செய்வித்தல், துலாபாரம் இடுதல் போன்ற நேர்த்திக் கடன்கள் உள்ளன. இந்த வகை நேர்த்திக் கடன்கள் பெரும்பாலும் உடல் துயருரா நிலையில் இருக்கும். ஆனால் சிறு தெய்வ வழிபாட்டிற்கென உள்ள சில நேர்த்திக் கடன்கள் உடலை வருத்தி செய்யப்படுபவனவாகும். சிறு மற்றும் பெரு தெய்வ வழிபாட்டிற்கு பொதுவான நேர்த்திக் கடன்களும் உள்ளன. மண்சோறு சாப்பிடுதல், அலகு குத்துதல், பால்குடம், காவடி எடுத்தல், கிடா வெட்டுதல் போன்ற எண்ணற்ற நேர்த்திக் கடன்கள் உள்ளன.[3]
பொருளாக அளி்க்கப்படும் நேர்த்திக் கடன்கள்
உயிர்ப்பலியாக அளிக்கப்படும் நேர்த்திக் கடன்கள்
ஆதாரங்கள் |
Portal di Ensiklopedia Dunia