நைட்ரமைடு
நைட்ரமைடு (Nitramide) என்பது H2NNO2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நைட்ரமைடுகளின் கரிம வேதியியல் வழிபொருட்கள் நைட்ரோ அமீன்கள் எனப்படுகின்றன. இவை பரவலாக வெடிபொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, ஆங்கிலத்தில் ஆர்.டி.எக்சு எனப்படும் ஆய்வுத் துறை வெடிபொருள் மற்றும் எச்.எம்.எக்சு எனப்படும் ஆக்டோசன் உள்ளிட்ட வெடிபொருள்கள். கட்டமைப்புவாயு நிலையில் நைட்ரமைடு மூலக்கூறானது தளமில்லா அமைப்பை கொண்டிருக்கிறத[2]ஆனால் படிகநிலையில் தள அமைப்பைப் பெற்றுள்ளது.[1] தயாரிப்புபொட்டாசியம் நைட்ரோகார்பமைடை நீராற்பகுப்பு செய்து நைட்ரமைடு தயாரிக்கும் முறை தையீல் மற்றும் லாக்மான் அசல் தொகுப்பு முறை எனப்படுகிறது:[1]
நைட்ரோகார்பமிக் அமிலத்தை நீராற்பகுப்பு செய்யும் மாற்றுத் தயாரிப்பு வழிமுறைகளும் அறியப்பட்டுள்ளன.
சோடியம் சல்பமேட்டுடன் நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்து நைட்ரமைடு தயாரிக்கும் முறை:
இருநைட்ரசன் ஐந்தாக்சைடுடன் இரண்டு சமப்பங்கு அமோனியா சேர்த்து நைட்ரமைடு தயாரிக்கும் முறை போன்ரவை இதர முறைகளாகும்.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia