நைனிதால் வங்கி
நைனிதால் வங்கி வரையறுக்கப்பட்டது (NTB) மற்றும் நைனிதால் வங்கி[1] என அறியப்படுவது, இந்தியாவில் செயற்பட்டுவரும், பட்டியலிடப்பட்ட தனியார்த் துறையைச் சார்ந்த வணிக வைப்பகம் ஆகும். இவ்வைப்பகம், கோவிந்த் வல்லப பந்த் மற்றும் ஷா சமூகத்தினரால் 1922ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. மேலும் இவ்வைப்பகமானது, இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியின் துணை வங்கியாகும். பரோடா வங்கியானது, 1975ஆம் ஆண்டு முதல் நைனிதால் வங்கியின் 98.6 விழுக்காடு பங்குகளைக் (தோராயமாக 99%) கொண்டுள்ளது. இவ்வைப்பகம் தனது கிளைகளை உத்தராகண்ட மாநிலத்திலிருந்து உத்தரப் பிரதேச மாநிலத்திற்கும் விரிவாக்கி வருகிறது. இவ்வைப்பகமானது இராச்சசுத்தான், தில்லி, அரியானா மாநிலங்களில் 130இற்கும் அதிகமான கிளைகளைக் கொண்டுள்ளது.[2] 2012ஆம் ஆண்டு நிலவரப்படி உரூபாய் 55 பில்லியன் அளவிற்கு வணிக நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மேலும் இது இந்திய ரிசர்வ் வங்கியால், பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாக அறிவிக்கப்பட்டது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia