நோசன் அச்சகம்
நோசன் அச்சகம் (Notion Press) என்பது இந்தியாவின் சென்னையினை மையமாகக் கொண்ட ஒரு இந்திய சுய வெளியீட்டு நிறுவனம். இந்த நிறுவனம் உலகளவில் புத்தகங்களை வெளியிடுதல், அச்சிடுதல் மற்றும் விநியோகப் பணிகளை மேற்கொள்கிறது. ஆரம்பத்திலிருந்தே இது 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் படைப்புகளை வெளியிட்டுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் புத்தகங்களை விற்பனைச் செய்கின்றது. நவம்பர் 2018இன் பிற்பகுதியில், நிறுவனம் வருங்கால ஆசிரியர்களுக்காக விரைவுச் சேவையை அறிமுகப்படுத்தியது.[1] வரலாறுநோசன் அச்சகத்தினை பிரசினை நவீன் வலசகுமார் என்பவர் அவரது பள்ளி தோழர்கள் ஜனார்த்தனன் மற்றும் பார்கவா ஆகியோருடன் இணைந்து நிறுவினர்.[2] ஜனவரி 1, 2012 அன்று இது நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் ஆரம்ப முதலீடு ₹ 3.67 லட்சம் ஆகும். 2016ஆம் ஆண்டில், இது எச் என் ஐ யிடமிருந்து (HNI) 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியைப் பெற்றது.[3] சேவைகள்வெளியீட்டாளர் 2013இல் இலவச வெளியீட்டைத் தொடங்கினார்.[4] புத்தகங்கள் மற்றும் விமர்சனங்கள்விருது பெற்ற புனைகதை மற்றும் புனைகதை அல்லாத பல்வேறு வகையான புத்தகங்கள் நோஷன் பிரஸ்ஸில் வெளியிடப்பட்டுள்ளன. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் விமர்சனத்தின் படி "இந்தியாவில் முதல் சுய வெளியீட்டு நிறுவனம்" என்பது இதுதான். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia