நோயாளி காப்பு மற்றும் தாங்கத்தகு கவனிப்பு சட்டம் (Patient Protection and Affordable Care Act, PPACA),[1][2] பரவலாக ஒபாமாகேர்,[3][4][5]மார்ச் 23, 2010 அன்று ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்பராக் ஒபாமாவால்ஐக்கிய அமெரிக்காவின் கூட்டாட்சி சட்டமாக ஒப்பிடப்பட்டது. 111வது ஐக்கிய அமெரிக்க காங்கிரசின் முதன்மை உடல்நலக் கவனிப்பு சீர்திருத்தமாக (உடல்நல கவனிப்பு மற்றும் கல்வி ஒத்திசைவு சட்டம்,2010 உடன்) இச்சட்டம் உள்ளது. பிபிஏசிஏ என குறுக்கப்படும் இச்சட்டம் பணியமர்த்துவோர் அல்லது அரசு வழங்கும் காப்புறுதித் திட்டங்களால் காக்கப்படாத தனிநபர் குறைந்த மிகத்தேவையான உடல்நல காப்புறுதித் திட்டம் ஒன்றில் பங்கேற்க வேண்டும் எனவும் இல்லையெனில் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் வரையறுக்கிறது. தனிநபர் உரிமைக்கட்டளை எனப்படும் சமய நம்பிக்கைகள், நிதி நெருக்கடிகள் போன்ற சில காரணங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இந்தச் சட்டம் தனியார் உடல்நலக் காப்புறுதி தொழிலையும் அசின் உடல்நல காப்புறுதித் திட்டங்களையும் பாதிப்பதுடன் முன்னரே இருந்த உடல்நிலைகளுக்கான காப்புறுதியை கூடுதலாக்குகிறது; கூடுதலான 30 மில்லியன் அமெரிக்கர்களுக்கு காப்புறுதி அணுக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.[6][7] மேலும் இச்சட்டத்தினால் தேசிய மருத்துவச் செலவை கூடுதலாக்கி தேசிய பற்றாக்குறையை குறைக்கும் என்றும் உடல்நலக் கவனிப்புச் செலவு ஏறுவதைக் மட்டுப்படுத்தும்,[8][9] என்றும் எதிர்நோக்கும் மெடிகேர் செலவு குறையும் என்றும்[10] கூறப்படுகின்றன.
பிபிஏசிஏ மேலவையில் திசம்பர் 24, 2009 அன்று 60–39 வாக்குகளில் நிறைவேற்றப்பட்டது.[11]கீழவையில் மார்ச் 21, 2010 அன்று 219–212 வாக்குகளில் நிறைவேற்றப்பட்டது.[12]
பெரும்பான்மையான மாநிலங்களும் பல்வேறு அமைப்புகளும் தனிநபர்களும் கூட்டாட்சி நீதிமன்றத்தில் இச்சட்டத்தின் சில அங்கங்களும் அல்லது முழுமையாகவும் அரசியலமைப்பிற்கு முரணானது என்று வழக்குத் தொடர்ந்தனர்.[13] சூன் 28, 2012 அன்று ஐக்கிய அமெரிக்காவின் உச்சநீதிமன்றம் இந்தச் சட்டம் செல்லுபடியாகும் என தீர்ப்பளித்தது. எனினும் இத்தீர்ப்பு இந்தச் சட்டத்தை செயல்படுத்தாத மாநிலங்களுக்கு கூட்டாட்சி அரசு மெடிக்கேர் திட்டத்திற்கான நிதி வழங்கலை நிறுத்திவைக்க இருந்ததையும் நிறுத்தி உள்ளது.[14][15][16][17]
↑"CBO's 2011 Long-Term Budget Outlookபரணிடப்பட்டது 2012-02-20 at the வந்தவழி இயந்திரம்" June 2011. p. 44. Quote: "Through those changes and numerous others, the 2010 legislation significantly decreased Medicare outlays relative to what they would have been under prior law."