பகவத் சிங் (திரைப்படம்)
பகவத் சிங் (Bhagavath Singh) என்பது 1998 ஆம் ஆண்டு வெளியான தமிழ் அதிரடி நாடகத் திரைப்படம் ஆகும். இதை சந்திரகுமார் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் நெப்போலியன், சங்கவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், கவுண்டமணி, செந்தில் ஆகியோர் துணை வேடங்களில் தோன்றினர். இப்படத்திற்கான தேவா இசை அமைத்தார். படமானது 31 திசம்பர் 1998 இல் கலவையான விமர்சனங்களுடன் வெளியானது.[1][2] நடிகர்கள்
தயாரிப்புதிரைப்பட தயாரிப்பாளர் சந்திர குமாரின் இரண்டாவது தயாரிப்பாக இந்த படம் குறிக்கப்பட்டது, நெப்போலியன், சங்கவி, சங்கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தேர்வானார்கள். சங்கீதாவின் முதல் படமான பூஞ்சோலை நிறுத்தப்பட்டதால், இது சங்கீதாவின் அறிமுகப் படமாக ஆனது.[3][4] இசைபடத்திற்கு தேவா இசையமைக்க, பாடல் வரிகளை காளிதாசன் எழுதினார்.[5]
வெளியீடுபடம் நவம்பர் 1997 இல் வெளியிடத் தயாராக இருந்தது. ஆனால் அச்சமயத்தில் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்ததால் வெளியீடு தாமதமானது.[6] இந்த படம் டிசம்பர் 1998 இல் வெளியானது. இந்தோலிங்க்.காமின் விமர்சகர் இப்படத் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை வெளியிட்டார். இந்த படம் சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பெயரைக் கெடுப்பதாகக் குறிப்பிட்டது. அதே நேரத்தில் படத்தின் முன்னணி நடிகர் "ஒரு காவல் துறை அதிகாரியின் உடலமைப்பைக் கொண்டிருக்கிறார், ஆனால் அவரது பேச்சும் தொனி அதற்கு ஒத்துவராமல் உள்ளது ".[7] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia