பகேலா பைசாக்
பகேலா பைசாக் ( Pahela Baishakh ) என்பது பெங்காலி நாட்காட்டியின் முதல் நாளாகும். இது ஏப்ரல் 14 அன்று வங்காளதேசத்தில் ஒரு தேசிய விடுமுறையாகவும், ஏப்ரல் 14 அல்லது 15 ஆம் தேதிகளில் இந்திய மாநிலங்களானமேற்கு வங்காளம், திரிபுரா மற்றும் அசாமின் சில பகுதிகளில் வங்காள பாரம்பரிய மக்களால் மத நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல் கொண்டாடப்படுகிறது. இந்திய வங்காளிகள் (வங்கதேச வங்காளிகளுக்கு எதிராக) பொகேலா பைய்சாக் என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர். [2] திருவிழாவின் தேதி அதன் முதல் மாத பைசாக்கின் முதல் நாளாக லூனிசோலர் பெங்காலி காலண்டரின் படி அமைக்கப்பட்டுள்ளது. [3] எனவே இது எப்போதும் கிரிகோரியன் நாட்காட்டியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 அல்லது அதற்கு மேல் வருகிறது. அதே நாள் பாரம்பரிய சூரிய புத்தாண்டு மற்றும் அறுவடை திருவிழா என வேறு இடங்களில் அனுசரிக்கப்படுகிறது. இது மத்திய மற்றும் வட இந்தியாவில் வைசாக்கி என்வும், கேரளாவில் விஷு எனவும் மற்றும் தமிழ்நாட்டில் தமிழ்ப் புத்தாண்டு போன்ற பிற பெயர்களால் அறியப்படுகிறது. [4] [5] [6] திருவிழா ஊர்வலங்கள், கண்காட்சிகள் மற்றும் குடும்பங்களுடன் கொண்டாடப்படுகிறது. பெங்காலி புத்தாண்டுக்கான பாரம்பரிய வாழ்த்து "சுபோ நோபோபோர்சோ" என்பதாகும். இது உண்மையில் "புத்தாண்டு வாழ்த்துக்கள்" எனப் பொருள்படும். மங்கல் சோபாசத்ரா என்ற ஒரு பண்டிகையும் வங்காளதேசத்தில் கொண்டாடப்படுகிறது. 2016 ஆம் ஆண்டில், டாக்கா பல்கலைக்கழகத்தின் நுண்கலை பீடம் ஏற்பாடு செய்த இந்த விழாவை மனிதகுலத்தின் கலாச்சார பாரம்பரியமாக யுனெஸ்கோ அறிவித்தது. [7] பெயரிடல்பெங்காலி மொழியில், பகேலா என்பது 'முதல்' என்றும் மற்றும் பைசாக் என்பது வங்காள நாட்காட்டியின் முதல் மாதம் எனப் பொருள்படும். [3] பெங்காலி புத்தாண்டு என்பது வங்காள மொழியில் 'நோபோபோர்சோ' என்றும்,' நோபோ 'என்றால் 'புதியது' என்றும்,' போர்சோ 'என்றால் 'ஆண்டு' என்றும் பொருள்படும். [5] ![]() தோற்றம்முகலாய ஆட்சியின் போது, இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின்படி வங்காள மக்களிடமிருந்து நில வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நாட்காட்டி ஒரு சந்திர நாட்காட்டியாக இருந்தது. அதன் புதிய ஆண்டு சூரிய விவசாய சுழற்சிகளுடன் ஒத்துப்போகவில்லை. சில ஆதாரங்களின்படி, இந்த விழா முகலாய பேரரசர் அக்பரின் ஆட்சிக் காலத்தில் வங்காளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பாரம்பரியமாகும். இது அறுவடைக்கு ஆண்டு வரி வசூலுக்கு இணக்கமாக இருந்தது. மேலும் பங்களா ஆண்டு பங்கப்தா என்றும் அழைக்கப்பட்டது. ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள சந்திர இசுலாமிய நாட்காட்டியுடன் இந்து நாட்காட்டியை இணைத்து புதிய நாட்காட்டியை உருவாக்குமாறு அக்பர் தனது அவையின் வானியலாளர் பதுல்லா ஷிராஜியிடம் கேட்டுக்கொண்டார். இது பவ்சோலி சான் (அறுவடை நாட்காட்டி) என்று அழைக்கப்பட்டது. சில வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, இந்கிருந்து பெங்காலி நாட்காட்டி தொடங்கியது. [8] வங்காளதேச கல்வியாளரும், நாட்டுப்புறவியளாருமான சம்சுசாமான் கான் என்பவரின் கருத்துப்படி, முகலாய ஆளுநரான நவாப் முர்சித் குலி கான், புன்யாகோவின் பாரம்பரியத்தை முதலில் "நில வரி வசூல் செய்வதற்கான ஒரு நாள்" என்று பயன்படுத்தினார். மேலும் பங்களாவின் நாட்காட்டியைத் தொடங்க அக்பரின் நிதிக் கொள்கையைப் பயன்படுத்தினார் . [9] சம்சுசாமான் கான், [10] மற்றும் நிதீசு சென்குப்தா ஆகியோரின் கூற்றுப்படி, பெங்காலி நாட்காட்டியின் தோற்றம் தெளிவாக இல்லை. [11] சம்சுசாமனின் கூற்றுப்படி, "இது முறையே அரபு மற்றும் பார்சியன் சொற்களான பங்களா சான் அல்லது சால் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு முஸ்லீம் மன்னர் அல்லது சுல்தானால் அறிமுகப்படுத்தப்பட்டது என்று கூறுகிறது." இதற்கு மாறாக, செங்குப்தாவின் கூற்றுப்படி, அதன் பாரம்பரிய பெயர் பங்கப்தா என்பதாகும். [12] மேலும் காண்ககுறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia