பங்கஜவல்லி
பங்கஜவல்லி 1947 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். எஸ். சௌந்தரராஜன் ஐயங்கார், ஜித்தன் பானர்ஜி ஆகியோரின் இயக்கத்தில்[1] வெளிவந்த இத்திரைப்படத்தில்[2] பாபநாசம் சிவன் பாடல்களுக்கு இசையமைத்திருந்தார். பு. உ. சின்னப்பா, டி. ஆர். ராஜகுமாரி[3], குமாரி ருக்மணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இதன் திரைக்கதை ஆண்களை அடிமைகளாகத் தனது நாட்டில் வைத்திருந்த அல்லி இராணியின் கதையைக் கருவாகக் கொண்டது.[4] இத்திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.[5][6] திரைக்கதைபாண்டவர்களில் ஒருவனான அருச்சுனன் (பி. யு. சின்னப்பா) அழகி பங்கஜவல்லியை (டி. ஆர். ராஜகுமாரி) அடைய நினைக்கிறான். ஆனாலும், பங்கஜவல்லி அர்ச்சுனனை சிறைப் பிடிக்கிறாள். அர்ச்சுனன் கிருஷ்ணனிடம் (குமாரி ருக்மணி) முறையிடுகிறான். அர்ச்சுனனை கிருஷ்ணன் பெண்ணாக மாற்றுகிறான். திரைக்கதையின் இறுதியில் உண்மைகள் வெளிவர, கதையும் மகிழ்ச்சியுடன் முடிவடைகிறது.[4] பாடல்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia