பசியின்மைபசியின்மை (Loss of appetit) இரண்டு வகைப்படும். ஒன்று உணவு உண்ட பின் ஏற்படும் பசியின்மை. இது வழக்கமான ஒன்றுதான். ஆனால் உணவு உண்பதற்கு முன்பே பசியின்மை anorexia ஏற்பட்டால் அது ஒரு நோயாகவோ அல்லது நோயின் அறிகுறி(symptom)யாகவோ இருக்கலாம். உணவுக்குழாயில் உள்ள சுருக்கித் தசைகள் உணவை வயிற்றுக்கு உள்ளே அனுப்புவதற்குப் பெரிதும் துணைபுரிகின்றன. அதீத மகிழ்ச்சி, மன வருத்தம், பயம் அல்லது இது போன்ற பல பல உளவியல் காரணங்களால் இந்த சுருக்கித் தசை வேலை செய்வதை நிறுத்தி விடுகிறது. இதற்கு எதிராக சரியான மருத்துவ நடவடிக்கைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில நோய்களின் அறிகுறியாகக்கூட இந்தப் பசியின்மை இருக்கலாம். சில நோய்கள் வந்ததால் கூட பசியின்மை ஏற்படலாம். அவற்றில் சில பாதிப்பில்லாதவையாக இருக்கலாம். மற்றவைகள் தீவிர நோய் நிலையைக் குறிக்கின்றன அல்லது குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்துகின்றன. காரணங்கள்மகிழ்ச்சி, இன்பம், ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்பு,ஆர்வத்துடன் செய்யக்கூடிய பணிகள், ஆழ்ந்த சிந்தனைகள், தூக்கமின்மை இது போன்ற காரணங்களால் ஏற்படும் பசியின்மை சில மணி நேரங்களில் தானாகவே சரியாகிவிடும். இதனால் உடல் களைப்பு போன்ற இன்னல்கள் ஏற்படாது. மருத்துவ நடவடிக்கைகள் தேவைப்படும் காரணங்கள்கடுமையான கதிர்வீச்சு நோய் அறிகுறி, கடுமையான ஹெபடைடிஸ் தாக்கம், வகையிலி வளியியம், எயிட்ஸ், உள நோய், குடல்வால் அழற்சி , நாட்பட்ட வலி, நாட்பட்ட சிறுநீரக நோய், உடற்குழி நோய்,[1] சாதாரண சளி, இதய செயலிழப்பு, குரோன் நோய் , உடல் வறட்சி, போதைப் பழக்கம், மறதி நோய், இபொல்லா, உணவுவழிப் பரவும் நோய்கள், உயிர்ச்சத்து டி யின் அசாதாரண அதிகரிப்பு , சிறுநீரக செயலிழப்பு[2], மனநல கோளாறுகள், கணைய அழற்சி , காசநோய் , தலசீமியா, பெருங்குடல் , புண் தூத்தநாக குறைப்பாடு, மஞ்சள் காமாலை , புற்று நோய், காய்ச்சல், அதீத பயம் மருந்துகள்தூண்டும் மருந்துகளான எபிட்ரின், ஆம்பெடமைன், மெத்தாம்பேட்டமைன், எம்.டிஎம்.ஏ, கேத்தினோன், மெத்தில்பெனிடேட், நிகோடின், கோகேயின், காபின் போதைப் பொருட்களான ஹெராயின், மார்பின், கோடீன், ஹைட்ரோகோடோன், ஆக்சிகோடொன் உளச்சோர்வு போக்கிகளும் பக்க விளைவாக பசியின்மையை ஏற்படுத்தும். வகை 2 நீரிழிவு மருந்து பைட்டா மிதமான குமட்டலையும் பசியின்மையையும் ஏற்படுத்தும். பினெதிலாமைன் வகை வேதி பொருட்கள் (உடல் வந்துவிடுமோ என அஞ்சி உண்ணாமலிருக்க நாடும் மருந்துகள் டோபிராமேட் பக்கவிளைவாக பசியின்மையை ஏற்படுத்தக் கூடும். அறுவை சிகிச்சைகளுக்கு முன் நோயாளிக்கு முன்கூட்டிய உண்ணாநிலைக்கு இருக்க உதவுவதற்காக சில மருந்துகள் பசியற்ற தன்மையை ஏற்படுத்த பயன்படுத்தப்படலாம். நுரையீரல் அறுவை சிகிச்சைக்கு முன் அபாயத்தைத் தணிக்க உணவைத் தவிர்ப்பது முக்கியம். பிற காரணிகள்வயதுவந்த நோயாளிகளுக்கு அடி நாக்குச் சதை அறுவை சிகிச்சைக்கு பிந்தைய மீட்பு காலத்தில் தொண்டை கணிசமாக குணமடையும் வரை (பொதுவாக 10-14 நாட்கள்) பசியின்மை ஏற்படுவது பொதுவானது.[3] குறிப்பிடத்தக்க நிகழ்வால் உணர்ச்சிப்பூர்வமான வலி- நபரொருவருக்கு உணவில் உள்ள அனைத்து ஆர்வத்தையும் தற்காலிகமாக இழக்கச் செய்யலாம். உளவியல் மன அழுத்தம் கோரமான அல்லது விரும்பத்தகாத எண்ணங்கள் அல்லது உரையாடல்களை அனுபவித்தல் அல்லது பார்த்தல் கழிவுப்பொருள், இறந்த உயிரினங்கள் அல்லது துர்நாற்றம் போன்ற விரும்பத்தகாத விஷயங்களின் முன்னிலையில் இருத்தல். சிக்கல்கள்பசியின்மை என்பது நோயாளிகளுக்கு ஆபத்தான மின்பகுளி சமநிலை குலைவுக்கு வழிவகுக்கும் பொதுவான நிலையாகும். இதனால் திடீர் இதய இறப்பு ஏற்படலாம். இது நீண்ட காலத்திற்குள் உருவாகக்கூடும். மேலும் நுகர்வுக்கு விலகிய ஒரு காலத்திற்குப் பிறகு மீண்டும் உணவளிக்கும் போது ஆபத்து மேலும் அதிகரிக்கிறது. இத்தகைய சூழ்நிலைகளில் அபாயகரமான சிக்கல்களைத் தவிர்க்க கவனமாக இருக்க வேண்டும்.[4] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia