பச்சைக்கிளி முத்துச்சரம்

பச்சைக்கிளி முத்துச்சரம்
திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரம் இருவரின் காட்சி
இயக்கம்கௌதம் மேனன்
தயாரிப்புஆஸ்கார் ரவிச்சந்திரன்
கதைகௌதம் மேனன் (கதை மற்றும் வசனம்)
இசைஹாரிஷ் ஜெயராஜ்
நடிப்புசரத் குமார்
ஜோதிகா
ஆண்ட்ரியா ஜெரெமையா
மிலிந்த் சோமன்
ஒளிப்பதிவுஅரவிந்த் கிருஷ்ணா
நீரவ் ஷா
படத்தொகுப்புஅன்டனி
விநியோகம்ஆஸ்கார் பிலிம்ஸ்
வெளியீடுபெப்ரவரி 16 2007
மொழிதமிழ்

'பச்சைக்கிளி முத்துச்சரம்' 2007 ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாகும்.இப்படத்தின் கௌதம் மேனன் இயக்கியுள்ளார்.முக்கிய கதாபாத்திரங்களாக சரத்குமார்,ஜோதிகா,மிலிந்த் சோமன்,ஆந்திரே நடித்துள்ளார்கள்.இத்திரைபடத்தின் இசைவட்டு வெளியீடு சனவரி 20, 2007 இலும்,திரைப்படம் பெப்ரவரி 2007 இலும் வெளிவந்தது.

ஜேம்ஸ் சீகல் (James Siegel) என்பவரின் டிரேயில் (Derailed ) எனும் நாவலினை மையமாக வைத்து தமிழ் சூழலுக்கு பொருந்தும்வகையில் திரைப்படமாக்கப்படுள்ளது.

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

சரத் ஒரு மருந்துக்கம்பெனியில் விற்பனைப்பிரதிநிதி.இவருக்கு மனைவியும் குழந்தை ஒன்றும் உள்ளது. மகிழ்ச்சியான இவர்களின் வாழ்க்கையில் பூகம்பமாக மகனுக்கு நீரிழிவு நோய் என்று தெரியவருகிறது. மகனின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கவேண்டி மூன்று வேளையும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளவேண்டிய சூழ்நிலை.இதனிடையில் சரத் வழக்கமாய் பயணிக்கும் ரயிலில் ஜோதிகாவும் பயணிக்கின்றார்.இவர்களிவருக்குமிடயே காதல் ஏற்படுகின்றது.இதனால் ஏற்படும் பிரச்சனைகளை சரத்குமார் எவ்வாறு சமாளிக்கின்றார் என்பதே கதையாகும்,

நடிகர்கள்

நடிகர்கள் பாத்திரம்
சரத் குமார் வெங்கடேஷ்
ஜோதிகா கீதா
ஆண்ட்ரியா ஜெரெமையா கல்யானி வெங்கடேஷ்
மிலிந்த் சோமன் லாரன்ஸ்

தகவல்கள்

  • இத்திரைப்படத்திற்கு விலை உயிரென்றாலும்,சிலந்தி,பருந்து என முன்பு தலைப்பிடப்பட்டிருந்தது.
  • ஆந்திரே நடித்த கதாபாத்திரத்திற்கு முன்பு தெரிவானவர்கள் முதலில் சிம்ரன்,பின்பு சோபனா,பின்பு தபு ஆகும்,இரண்டாவது கதாநாயகியாக நடிக்க மூவரும் மறுத்துவிட்டனர்
  • இத்திரைபடத்தில் மிலிந்த் சோமனுற்காக இயக்குநர் கௌதம் குரல் கொடுத்துள்ளார்.
  • இத்திரைப்படத்தின் கதை ஆங்கில படமான "டிரைல்டு" ("Derailed" - [1]) படத்தின் தழுவல்

இசை

ஹரிஷ் ஜெயராஜ் இந்தப் திரைப்படத்தில் 5 பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார்.

  • உனக்குள் நான் - பாம்பே ஜெயசிறி , கிரிஷ்
  • உன் சிரிப்பினில் - சௌமியா ரே,ராபி
  • காதல் கொஞ்சம் - நரேஸ் அய்யர்
  • கரு கரு - கார்த்திக்,கிறிஸ்,நரேஸ் அய்யர்
  • உனக்குள் நான் - மதுசிறி

விமர்சனம்

ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "பலவீனங்கள் நிறைந்த ஒரு கேரக்டரை தைரியமாக ஏற்ற சரத்குமாருக்கு சபாஷ்! எப்போதும் சின்னதொரு சிந்தனையும் கவலையுமாகவே அடிபட்டதனத்தோடு பேசிப் பழகுகிற பாத்திரத்தை அணு அணுவாகப் பிரமாதப்படுத்திவிட்டார். கண்களாலேயே ஈட்டி சொருகிற கலையில் கை தேர்ந்த ஜோதிகா... 'சிலந்தி' என்று முதலில் வைத்திருந்த டைட்டிலுக்கு செம பொருத்தம்! தவணை முறையில் வரிவரியாகத் தன் 'கதை'யைச் சொல்லி சரத்குமாரின் அனுதாபத்தை அவர் திரட்டும் காட்சிகளில் ஜோர்திகா!" என்று எழுதி 43/100 மதிப்பெண்களை வழங்கினர்.[1]

மேற்கோள்கள்

  1. "சினிமா விமர்சனம்: பச்சைக்கிளி முத்துச்சரம்". விகடன். 2007-02-28. Retrieved 2025-05-23.

வெளி இணைப்பு

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya