பச்சை சிட்டு
பச்சை சிட்டு (Golden-fronted leafbird)(குளோரப்சிசு ஆரிப்ரன்சு) என்பது பச்சைக்குருவி சிற்றினம் ஆகும். இது இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்மேற்கு சீனாவிலிருந்து தென்கிழக்காசியா மற்றும் சுமத்ரா வரை காணப்படுகிறது.[2] இது ஒரு மரத்தில் கூடு கட்டி 2-3 முட்டைகளை இடுகிறது. இந்த சிற்றினம் பூச்சிகள் மற்றும் பெர்ரிகளை சாப்பிடுகிறது. வகைப்பாட்டியல்முன்பு, சுமத்ரான் இலைப்பறவை ஒரு துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் இந்த இரண்டு பச்சைக்குருவிகளும் உருவவியல் மற்றும் பிற பண்புகளில் நன்கு வேறுபடுகின்றன. விளக்கம்முதிர்ச்சியடைந்த குருவி பச்சை நிற உடலுடன் கருமுகமும் தொண்டையும் மஞ்சள் நிற ஓரங்களுடன் காணப்படும். இது அடர் பழுப்பு நிற கருவிழிகளுடன் மற்றும் கருமையான பாதங்கள் மற்றும் அலகுகளுடன் கூடியது.[2] இது மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிற நெற்றி மற்றும் நீல வரிகளைக் கொண்டுள்ளது (ஆனால் நீல நிற பறக்கும் இறகுகள் மற்றும் நீல-சிறகு இலைப்பறவையின் வால் பக்கங்கள் இல்லை). இளம் பறவையின் தலை பச்சை நிறத்துடன் முகம் மற்றும் தொண்டை கருப்பு நிறமின்றி காணப்படும். பெண் குருவியின் முகம் மற்றும் தொண்டையின் நிறம் மங்கலான கருமை நிறத்துடன் காணப்படும். தென்னிந்திய இனமான, சி. ஆ. பிரண்டாலிசின் முகம் கருப்பு நிறத்துடன் ஓரங்களில் மஞ்சள் நிற குறுகிய கோட்டுடன் காணப்படும். தொண்டை கருப்பாகவும் நீல பட்டையுடன் மற்றும் மந்தமான ஆரஞ்சு முன்னெற்றியுடன் காணப்படும். இந்தியாவின் தென்கடைக்கோடி பகுதியிலும் இலங்கையிலும் காணப்படும் துணையினமான இன்சுலாரிசு பிரண்டலிசை விடச் சற்று சிறியதாக உள்ளது.[3] குரல்இதன் ஓசை கொண்டைக்குருவியின் ஓசை போன்று காணப்படும். இவை மற்ற பறவை இனங்களின் அழைப்புகளைப் பிரதிபலிப்பதாகவும் உரத்த குரலில் ஒலிப்பதாகவும் அறியப்படுகிறது.[2] வாழிடம்பச்சைச் சிட்டு இலைக்குருவி இந்தியா, வங்காளதேசம், இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் வசிக்கும் பொதுவான குருவி வகையாகும். இதன் வாழிடம் காடு மற்றும் புதர்கள் ஆகும். நடத்தைபச்சைச்சிட்டு தனது கூடுகளை மரத்தில் கட்டி, கூடுஒன்றில் 2 முதல் 3 முட்டைகள் வரை இடும். இந்த சிற்றினம் பூச்சிகள் மற்றும் பெர்ரிகளை சாப்பிடுகிறது. படங்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia