பட்டு![]() பட்டு (Silk) என்பது ஒரு நூல், இது பட்டு ஆடைகளை தயாரிக்க பயன்படுகின்றது.[1][2][3] பட்டு உற்பத்திபட்டுப்புழு வளர்ப்பை "பட்டுப்புழு வேளாண்மை" என்று கூறுவர். முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் பட்டுப்புழு வளர்ப்பை செய்கின்றனர். இதில் அதிக உற்பத்தி செய்யும் நாடுகள் இந்தியாவும் (14%), சீனாவுமாகும் (54%).
வளர்ப்பு முறைபட்டுப்புழுவை அதன் வாழ்நாள் காலம் முழுவதிலும் மிக கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். தரமான இலை வெற்றிகரமான புழு வளர்ப்பிற்கு வழிவகுக்கிறது. நல்ல சுத்தமான சுற்றுச்சூழலும், பூச்சிகள் மற்றும் நோய்களிடம் இருந்து பாதுகாப்பும் மிகவும் அவசியம். சீரான சுற்றுச்சூழலை ஏற்படுத்திக்கொடுக்க, ஒரு தனி புழு வளர்ப்பு மனையும் அதற்கு தேவையான வளர்ப்பு சாதனங்களும் அவசியமாகும். ஒரு வருடத்தில் 5-10 முறை அறுவடை செய்யலாம். இதன் இடைவுளி 70-80 நாட்கள் ஆகும். பட்டுப் புழுக்களால் தோற்றுவிக்கப்படும் நூல் போன்ற ஒரு பொருள், பட்டாகும். இது செரிசின் (sericin ) மற்றும் ஃபய்போராயின் (Fibroin) என இரு புரதங்களால் ஆனது. இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia