பண்பாட்டுச் சூழலியல்

பண்பாட்டுச் சூழலியல் (Cultural ecology) என்பது, குறிக்கப்பட்ட ஒரு சமூகத்துக்கும், அதன் வாழ்வுக்கு அடிப்படையான உயிர்வகைகள், சூழ்நிலைமண்டலம் ஆகியவற்றை உள்ளடக்கிய இயற்கைச் சூழலுக்கும் இடையிலான தொடர்புகளை ஆய்வு செய்யும் ஒரு துறையாகும். இது எடுத்துக்கொண்ட சமூகத்தைப் பல்வேறு காலகட்டங்களுக்கு ஊடாகக் கருதியோ அல்லது தற்காலத்து நிலையையும் அதன் கூறுகளையும் எடுத்தோ ஆய்வு செய்யலாம். சிறிய அளவிலான அல்லது கீழ்மட்ட பிழைப்புநிலைச் சமூகங்களில் இயற்கைச் சூழல், அச் சமூகங்களின் சமூக அமைப்பு, மனித நிறுவனங்கள் ஆகியவற்றின் உருவாக்கத்தில் பெரும் பங்களிப்புச் செலுத்துகின்றது.

இவற்றையும் பார்க்கவும்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya