பதமாக்கி அமிலம்(டானிக் அமிலம்)
![]() டானிக் அமிலம் என்பது தனினின் ஒரு குறிப்பிட்ட வடிவமே ஆகும். இது குறைந்த அமிலத்தன்மை (காடித்தன்மை எண் 10) உடையது. இதன் வடிவமைப்பில் கணக்கற்ற பீனால் தொகுதிகளை பெற்றிருப்பதே இதற்கு காரணமாகும். இதன் மூலக்கூற்று வாய்பாடு C76H52O46 . ஆகும். இது டெக்காஅல்லைல் குளுக்கோசை ஒத்துள்ளது. டானிக் அமிலத்தின் ஒது குறிப்பிட்ட வகையே டானின் (தாவர பாலிபினால்). தனின் மற்றும் டானிக் அமிலம் என்ற இரண்டு சொற்களும் சில நேரங்களில் (தவறாக) மாற்றிப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பச்சைத் தேநீர், கருப்புத் தேநீர் ஆகியவை தொடர்பான பயன்பாடுகளில் இந்தக் குழப்பம் பெரிய அளவில் உள்ளது. இந்த இரண்டிலுமே தனின் உள்ளது. ஆனால், டானிக் அமிலம் இல்லை.[1]
குவார்சிடானிக் (Quercitannic) மற்றும் கலோடானிக் (gallotannic) அமிலங்கள்குவார்சிடானிக் அமிலம், டானின் அமிலத்தின்[2] இரண்டு வடிவங்களில் ஒரு வடிவமே. இது ஓக் பட்டை மற்றும் இலைகளில்[3] இருந்து பெறப்படுகிறது. மற்றொரு வடிவம் கலோடானிக் அமிலம் என்று அழைக்கப்படுகிறது. இது ஓக் வேர்முடிச்சுகளில் இருந்து பெறப்படுகிறது. குவார்சிடானிக் அமிலம் குவர்சிட்ரனில் உள்ளது. இதிலிருந்து மஞ்சள் நிற சாயம் பெறப்படுகிறது. வட அமெரிக்காவின் பழங்குடி காடுகளில் உள்ள கிழக்கு கருப்ப ஓக் (''Quercus velutina''),, மரப்பட்டைகளில் இருந்து இது பெறப்படுகிறது.இது படிகவடிவமற்ற, மஞ்சள் கலந்த செம்பழுப்பு நிறத்தைக் கொண்டுள்ளது. 1838 ல், சான் சாகோப் பெர்சிலியசு(Jöns Jacob Berzelius) மார்பினை[4] கரைப்பதற்கு குவார்சிடானேட்டு பயன்படுகிறது என்று எழுதியுள்ளார். 1912 இல ஆலன் என்பவரால் வெளியிடப்பட்ட "Commercial Organic Analysis", என்பதில் இதன் மூலக்கூறு வாய்ப்பாடு C19H16O10.[5] என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிற ஆசிரியர்கள் C28H26O15, மற்றும் C28H24O11[6] என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டைக் கொடுத்துள்ளனர். லோவ் கூற்றுப்படி, இரண்டு வடிவங்களும் சில கொள்கைக்கு உட்படுகின்றன. ஒன்று நீரில் கரையக்கூடியது. இதன் மூலக்கூறு வாய்ப்பாடு C28H28O14. மற்றொன்று அரிதாக நீரில் கரையக்கூடியது. இதன் மூலக்கூறு வாய்பபாடு C28H24O12. இரண்டு வடிவங்களும் நீர் மூலக்கூறினை இழந்து கருவாலி மரத்தின் சிவப்பு நிறத்தைப் பெறுகின்றன. இதன மூலக்கூறு வாய்ப்பாடு C28H22O11.[7] அதில் உலகின் பல பகுதிகளில், போன்ற பயன்படுத்தும் அனுமதிக்கப்படும். உள்ள அமெரிக்கா, tannic அமிலம் உள்ளது, பொதுவாக பாதுகாப்பான அங்கீகரிக்கப்பட மூலம் உணவு மற்றும் மருந்து நிர்வாகம். மருத்துவத்தில் பயன்பாடு 19 ஆம் நுாற்றாண்டிற்கு முன்னரும் மற்றும் 20 ஆம் நுாற்றாண்டின் ஆரம்பத்திலும் சிடிரைசின், நச்சுக் காளான் மற்றும் ஊன்ஊசி நஞ்சாதல் போன்ற நச்சுத்தன்மை வாய்ந்தவைகளின் நச்சுத்தன்மையை நீக்க மக்னீசியத்துடன் இணைந்து டானிக் அமிலம் பயன்படுத்தப்பட்டுள்ளது.[8]
முதலாம் உலகப்போரின் போது ஏற்பட்ட தீக்காயங்கள், எரிகுண்டுகளால் ஏற்பட்ட காயங்கள், கடுகுவாயு இவைகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு சிகிச்சை செய்வதற்கு டானிக் அமிலம் பரிந்துரைக்கப்பட்டது. போருக்குப் பின்னர் நவீன வளர்ச்சியின் காரணமாக இம்முறை கைவிடப்பட்டது. மேற்குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia