பதார்காட்
பதார்காட் (Badharghat) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் உள்ள மேற்கு திரிப்புரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். புவியியல் அமைப்பு23.79° வடக்கு 91.28° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் பதார்காட் நகரம் பரவியுள்ளது[1]. மக்கள்தொகையியல்இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[2] பதார்காட் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 47,660 ஆகும் இம்மக்கள் தொகையில் 51% பேர் ஆண்கள் மற்றும் 49% பேர் பெண்கள் ஆவர். நகரத்தின் கல்வியறிவு சதவீதம் 80% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். மக்கள் தொகையில் ஆண்களில் 53 சதவீதத்தினர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் பெண்களில் 47 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் 9% அளவில் உள்ளனர். அரசியல்இந்திய நாட்டின் திரிபுரா மாநிலத்தில் உள்ள மேற்கு திரிப்புரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக பதார்காட் சட்டப்பேரவைத் தொகுதி இருக்கிறது.[3] [4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia