பத்திரிகையாளர் மாநாடுபத்திரிகையாளர் மாநாடு அல்லது செய்தியாளர் சந்திப்பு (press conference or news conference) என்பது ஒரு ஊடக நிகழ்வு ஆகும். இதில் செய்தி உருவாக்குபவர்கள் தாங்கள் நிலைப்பாட்டையும், பேசுவதையும் கேட்க ஊடகவியலாளர்களை அழைக்கிறார்கள். ஊடகவியலாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்கள். இதில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பேசும் தரப்புகளுக்கு இடையே ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படுகிறது. நடைமுறைபத்திரிகையாளர் சந்திப்பில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பேச்சாளர்கள் சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிடுவதுண்டு. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படுவர். சில நேரங்களில் அறிக்கை இல்லாமல் கேள்விகளுக்கான பதில்கள் மட்டுமே தெரிவிக்கப்படும்; சில நேரங்களில் எந்த கேள்வியும் அனுமதிக்கப்படாமல் அறிக்கை மட்டுமே வழங்கப்படும். எந்த அறிக்கையும் வெளியிடப்படாத, எந்த கேள்வியும் அனுமதிக்கப்படாத ஊடக நிகழ்வானது ஒளிப்படத் தேர்வு (போட்டோ ஆப்) என்று அழைக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தால் செனட் சபையில் ஒரு சட்டம் இயற்றப்படுவது போன்ற நிகழ்வுகளை ஊடகங்கள் பார்த்து ஒளிப்படங்களை எடுக்க அனுமதித்தல் போன்றவை இதில் அடங்கும்.[1] அமெரிக்க தொலைக்காட்சி நிலையங்கள் மற்றும் வலைப்பின்னல்கள் பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றன: ஏனென்றால் இன்றைய தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியாக, எப்போதும் அதிக அளவு காட்சிகளும் செய்திகளும் தேவைப்படுகின்றன. காட்சியகம்
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia