பத்தும் நிசங்க Pathum Nissanka தனிப்பட்ட தகவல்கள் முழுப்பெயர் பத்தும் நிசங்க சில்வா பிறப்பு 18 மே 1998 (1998-05-18 ) (அகவை 27) காலி , இலங்கை மட்டையாட்ட நடை வலக்கை பங்கு துடுப்பாளர் பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி ஒரே தேர்வு (தொப்பி 155 ) 21 மார்ச் 2021 எ. மேற்கிந்தியத் தீவுகள் ஒநாப அறிமுகம் (தொப்பி 194 ) 10 மார்ச் 2021 எ. மேற்கிந்தியத் தீவுகள் கடைசி ஒநாப 14 மார்ச் 2021 எ. மேற்கிந்தியத் தீவுகள் இ20ப அறிமுகம் (தொப்பி 86 ) 3 மார்ச் 2021 எ. மேற்கிந்தியத் தீவுகள் கடைசி இ20ப 7 மார்ச் 2021 எ. மேற்கிந்தியத் தீவுகள்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி 2017–2018 பதுரெலியா 2019–இன்று நொண்டசுகிரிப்ட்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை
தே
ஒநாப
ப20இ
மு.த
ஆட்டங்கள்
1
3
3
33
ஓட்டங்கள்
112
42
81
3,445
மட்டையாட்ட சராசரி
112
14.00
27.00
67.54
100கள்/50கள்
1/0
0/0
0/0
13/13
அதியுயர் ஓட்டம்
103
24
39
217
வீசிய பந்துகள்
–
–
–
–
வீழ்த்தல்கள்
–
–
–
–
பந்துவீச்சு சராசரி
–
–
–
–
ஒரு முறையில் 5 வீழ்த்தல்கள்
–
–
–
–
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள்
–
–
–
–
சிறந்த பந்துவீச்சு
–
–
–
–
பிடிகள்/இலக்கு வீழ்த்தல்கள்
0/0
0/0
1/–
18/–
பத்தும் நிசங்க (Pathum Nissanka , சிங்களம் : පැතුම් නිස්සංක , பிறப்பு: 18 மே 1998) இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்காகத் தனது முதலாவது பன்னாட்டுப் போட்டியில் 2021 மார்ச் மாதத்தில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடினார்.[ 1]
உள்நாட்டுப் போட்டிகள்
பத்தும் தனது முதலாவது பட்டியல் அ போட்டியில் அம்பாந்தோட்டை மாவட்ட அணியில் 2017 மார்ச் 17 இல் விளையாடினார்.[ 2] முதலாவது இருபது20 போட்டியை பதுரெலிய விளையாட்டுக் கழகத்திற்காக 2018 இல் விளையாடினார்.[ 3]
2018 இல், இவர் 2017-18 சூப்பர் 4 மாகாணச் சுற்றிலும்,[ 4] [ 5] 2018 மாகாண ஒருநாள் தொடரிலும் கண்டி அணியில் விளையாடினார்.[ 6] தொடர்ந்து, 2019 மாகாண ஒரு-நாள் சுற்றிலும் கண்டி அணிக்காக விளையாடினார்.[ 7]
பன்னாட்டுப் போட்டிகள்
2019 சனவரியில், பத்தும் இலங்கை-ஏ அணியில் முதல்-தரப் போட்டிகளில் அயர்லாந்து -ஏ அணியுடன் விளையாட சேர்க்கப்பட்டார். இரண்டு ஆட்டங்களில் இவர் 258 ஓட்டங்களை இலங்கை அணிக்காகப் பெற்றுக் கொடுத்தார்.[ 8] 2019 பெப்ரவரியில் இவர் தனது 1,000-வது ம்,உதல்-தர ஓட்டங்களைப் பெற்றார்.[ 9] [ 10] 2019 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 2019 நவம்பரில் விளையாடினார்.[ 11] [ 12]
2021 பெப்ரவரியில், இலங்கையின் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வரையிட்ட நிறைவுகள் அணியில் சேர்க்கப்பட்டார்.[ 13] தனது முதலாவது பன்னாட்டு இருபது20 (ப20இ) போட்டியில் 2021 மார்ச் 3 இல், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடினார்.[ 14] பின்னர், இலங்கையின் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் சேர்க்கப்பட்டார்.[ 15] தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியை 2021 மார்ச் 10 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடினார்.[ 16] தனது முதலாவது தேர்வுப் போட்டியை 2021 மார்ச் 21 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடி,[ 17] ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் 103 ஓட்டங்களை எடுத்து, முதலாவது தேர்வுப் போட்டியில் சதம் எடுத்த நான்காவது இலங்கை வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.[ 18]
மேற்கோள்கள்
↑ "Pathum Nissanka" . ESPN Cricinfo . Retrieved 7 April 2017 .
↑ "Districts One Day Tournament, Southern Group: Matara District v Hambantota District at Colombo (Bloomfield), Mar 17, 2017" . இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ . Retrieved 7 April 2017 .
↑ "Group D, SLC Twenty-20 Tournament at Katunayake, Feb 24 2018" . ESPN Cricinfo. http://www.espncricinfo.com/ci/engine/match/1137445.html .
↑ "Cricket: Mixed opinions on Provincial tournament" . Sunday Times (Sri Lanka). 26 March 2018. http://www.sundaytimes.lk/article/1041112/cricket-mixed-opinions-on-provincial-tournament .
↑ "All you need to know about the SL Super Provincial Tournament" . Daily Sports. 26 March 2018 இம் மூலத்தில் இருந்து 27 மார்ச் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180327213128/https://dailysports.lk/all-you-need-to-know-about-the-sl-super-provincial-tournament/ .
↑ "SLC Super Provincial 50 over tournament squads and fixtures" . The Papare . http://www.thepapare.com/slc-super-provincial-50-tournament-squads-fixtures/ .
↑ "Squads, Fixtures announced for SLC Provincial 50 Overs Tournament" . The Papare . Retrieved 19 March 2019 .
↑ "Ireland A tour of Sri Lanka : Most runs in first-class matches" . ESPN Cricinfo . Retrieved 16 January 2019 .[தொடர்பிழந்த இணைப்பு ]
↑ "Pathum Nissanka reaches magical 1000 run mark" . The Papare . Retrieved 10 February 2019 .
↑ "Premier League Tournament Tier A, 2018/19 - Nondescripts Cricket Club: Batting and bowling averages" . ESPN Cricinfo . Retrieved 10 February 2019 .
↑ "SLC Men's and Women's squads for SAG 2019 announced" . The Papare . Retrieved 30 November 2019 .
↑ "South Asian Games: Bangladesh secure gold in men's cricket" . BD News24 . Retrieved 9 December 2019 .
↑ "Shanaka named as Sri Lankan T20I captain for West Indies tour" . BD Crictime . Retrieved 21 February 2021 .
↑ "1st T20I (N), Coolidge, Mar 3 2021, Sri Lanka tour of West Indies" . ESPN Cricinfo . Retrieved 3 March 2021 .
↑ "Nissanka earns maiden Test call-up, fit Karunaratne back to lead Sri Lanka for West Indies Tests" . ESPN Cricinfo . Retrieved 6 March 2021 .
↑ "1st ODI, North Sound, Mar 10 2021, Sri Lanka tour of West Indies" . ESPN Cricinfo . Retrieved 10 March 2021 .
↑ "1st Test, North Sound, Mar 21 - 25 2021, Sri Lanka tour of West Indies" . ESPN Cricinfo . Retrieved 21 March 2021 .
↑ "Pathum Nissanka slams a Test Century on Debut" . Knews . Archived from the original on 21 ஏப்ரல் 2021. Retrieved 24 March 2021 .
வெளி இணைப்புகள்