பத்மாவதி ( மத்தியப் பிரதேசம் )
![]() ![]() பத்மாவதி (Padmavati) என்பது மத்தியப் பிரதேசத்தில் உள்ள நவீன பவாயாவுடன் அடையாளம் காணப்பட்ட ஒரு பண்டைய இந்திய நகரமாகும். இது எட்டாம் நூற்றாண்டின் சமசுகிருத மொழி நாடகங்கள் மற்றும் கவிதைகளால் நன்கறியப்பட்ட அறிஞரான பவபூதியின் மாலதிமாதவன் (மாலதி – மாதவனின் காதல் கதை)[1] பாணபட்டரின் ஹர்ஷசரிதம்,[2] போஜ மன்னனின் சரசுவதிகண்டபாரணம் போன்ற பல சமசுகிருத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாரா மற்றும் சிந்து நதிகளுக்கிடையில் அமைந்துள்ள சிகரங்கள் மற்றும் வாயில்கள் கொண்ட உயரமான மாளிகைகள் மற்றும் கோயில்கள் கொண்ட நகரத்தை பவபூதி விவரிக்கிறார். கஜுராஹோவின் கொக்கலா கிரகபதி கல்வெட்டு போன்ற கல்வெட்டுகளிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. [3] இந்நகரில் பலம் வாய்ந்த குதிரைகள் ஓடுவதால் புழுதி எழுந்ததாகவும், உயரமான மாளிகைகள் வரிசையாக இருந்ததாகவும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.[4] அடையாளம்அலெக்சாண்டர் கன்னிங்காம் பத்மாவதியை குவாலியர் அருகே தற்போதைய நார்வாருடன் அடையாளம் காட்டினார். [5] எம்.பி கார்டே 1924-25, 1933-34 மற்றும் 1941 இல் பவாயாவில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டார். அவர் பவாயாவை பண்டைய பத்மாவதியுடன் அடையாளப்படுத்துகிறார். கன்னிங்காமின் நார்வாருடனான அடையாளத்தை நிராகரித்தார். [6] [7] கி.பி 210-340 க்கு இடைப்பட்ட காலகட்டம் கொண்ட பல நாக மன்னர்களின் நாணயங்கள் பவாயாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பழங்காலப் பொருட்கள்பவாயாவில் கிடைத்த பழங்காலப் பொருட்களில் இயட்சனான மணிபத்ரனின் உருவமும் உள்ளது. [8] இது சிவனந்தி மன்னனின் நான்காம் ஆட்சியாண்டில் நிறுவப்பட்டதாகவும், கோஸ்தர்கள் அல்லது வணிகர்களால் வழிபட்டதாகவும் குறிப்பிடும் கல்வெட்டும் உள்ளது. இதனையும் பார்க்கவும்சான்றுகள்
வெளிப்புற ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia