பனிவிழும் மலர்வனம் (திரைப்படம்)
பனி விழும் மலர் வனம், 2014ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை ஜேம்ஸ் டேவிட் இயக்க, அபிலாஷ், சான்யதாரா மற்றும் வர்ஷா அஸ்வதி நடித்துள்ளார்கள்.[1] இந்த திரைப்படத்தை பாலாஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் விநியோகம் செய்கின்றது. இந்த திரைப்படம் பெப்ருவரி 21ம் திகதி வெளியானது. கதைச்சுருக்கம்அபிலாசும் (உதய்) சானியாதாராவும் (காயத்திரி) முகநூல் மூலம் காதல் செய்கிறார்கள். இருவரும் ஒருநாள் நேரில் சந்தித்து தங்களுடைய காதலை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கின்றனர். இவர்களுடைய காதலுக்கு இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதனால், ஊரைவிட்டு செல்ல முடிவெடுத்து அதன்படி வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். எங்கு செல்வதென்று தெரியாமல், முதலில் வரும் பேருந்தில் ஏறி தேனிக்கு செல்கிறார்கள். தேனி வந்து சேர்ந்தவர்கள் அடர்ந்த காட்டுக்குள் நுழைந்து செல்லும் போது மர்ம கும்பல் ஒன்று இவர்களை தாக்குகிறது. அப்போது அங்கு வரும் ஒரு பெண் (வர்சா அசுவதி), அந்த கும்பலிடமிருந்து இவர்களைக் காப்பாற்றி தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள். மர்ம கும்பலுடனான மோதலில் தன் மகனின் மருத்துவ செலவுக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை அப்பெண் (வர்சா அசுவதி) பறிகொடுக்கிறார். தங்களைக் காப்பாற்றிய அப்பெண்னுக்கு உதவ அபிலாசும் சானியாதாராவும் தாங்கள் கொண்டுவந்த பொருட்களையெல்லாம் விற்று அவருக்குப் பணத்தை கொடுக்கின்றனர். பணத்தை எடுத்துக்கொண்டு காட்டு வழியாக அனைவரும் பயணிக்கும் பொழுது ஒரு புலியின் கண்ணில் இவர்கள் அனைவரும் பட்டுவிடுகிறார்கள். புலி அவர்களைத் துரத்த அனைவரும் ஓடிச்சென்று ஒரு மரத்தின் மேலே உட்கார்ந்து விடுகிறார்கள். புலி அவர்களை விட்டு செல்லாமல் அங்கேயே சுற்றிச் சுற்றி வருகிறது. மறுபுறம், அப்பெண்னின் மகன் நோயின் தாக்கத்தால் ரொம்பவும் சிரமப்படுகிறான். இறுதியில் புலியை விரட்டி அந்த சிறுவனைச் காப்பாற்றினார்களா அல்லது புலிக்கு இரையானார்களா என்பதை இயக்குநர் திகிலோடு சொல்லியிருக்கிறார். மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia