பன்றிகள் விரிகுடா படையெடுப்பு
1961 பன்றிகள் விரிகுடா படையெடுப்பு (Bay of Pigs Invasion) என்பது கியூபாவினால் நாடுகடத்தப்பட்ட இராணுவத்தினரால் கியூபா மீது மேற்கொள்ளப்பட்ட ஒரு தோல்வியடைந்த தாக்குதலைக் குறிக்கும். இப்படையெடுப்பு பிடெல் காஸ்ட்ரோவின் அரசைக் கவிழ்ப்பதற்காக ஜோன் எஃப். கென்னடி அதிபராக வந்தவுடன் ஐக்கிய அமெரிக்காவினால் திட்டமிடப்பட்டு அவர்களின் நிதிப் பங்களிப்பினால் மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதலை அடுத்து கியூபா-அமெரிக்க உறவுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டது. இத்தாக்குதலை நடத்தியவர்கள் தென்மேற்கு கியூபாவின் பன்றிகள் விரிகுடாவில் தரையிறங்கியமையினால் இது "பன்றிகள் விரிகுடா படையெடுப்பு" என அழைக்கப்படுகிறது. முற்றுகைஏப்ரல் 15, 1961, காலையில் மூன்று சிறியரக விமானங்கள் அண்டோனியோ மக்கேயோ விமானநிலையம், மற்றும் முக்கிய தளங்கள் மீது குண்டுகளை வீசின. தீவு முழுமையும் 48 மணிநேரத்துக்கு விமானத் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனாலும் திட்டமிட்டபடி வான் தாக்குதல் நடத்தப்படவில்லை. காஸ்ட்ரோவின் வான்படைத் தளங்களைத் தாக்கும் இரண்டாவது திட்டம் இடைநிறுத்தப்பட்டது[4]. ஏப்ரல் 17 இல் 1,511 பேரை ஏற்றிக் கொண்டு நான்கு கப்பல்கள் கியூபாவின் பிக்ஸ் விரிகுடாவில் இறங்கின. இவற்றுடன் சிஐஏயின் இரண்டு கப்பல்கள் தாக்குதல்களுக்குத் தேவையான இராணுவத் தளபாடங்களை ஏற்றி வந்தன. இந்த சிறிய படையினர் உள்ளூர் மக்களின் ஆதரவுடன் ஹவானாவுக்குள் புகுவதற்குத் திட்டமிட்டிருந்தனர். இந்த முற்றுகையினால் காஸ்ட்ரோவுக்கு எதிராக மக்கள் அணி திரள்வார்கள் என சிஐஏ எதிர்பார்த்திருந்தது. ஆனாலும், முற்றுகை தொடங்க முன்னரே உள்ளூர் அமெரிக்க ஆதரவாளர்கள் பலரை சிறைகளில் அடைத்தது காஸ்ட்ரோ அரசு[5][6],[7]. சோவியத் ஒன்றியத்தின் கனரக பீரங்கிகள் கியூபா இராணுவத்தினரால் பாவிக்கப்பட்டன.[8]. ![]() வான் தாக்குதலின் போது 10 கியூபா எதிராளிகளும், நான்கு அமெரிக்க விமானிகளும், 6 கியூபா விமானிகளும் இறந்தனர். ஏப்ரல் 21 இல் தாக்குதல் நிறைவடைந்தபோது 68 கியூபா நாடுகடத்தப்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மீதியானவர்கள் அனைவரும் கைப்பற்றப்பட்டனர். கைப்பற்றப்பட்ட 1,209 பேர்கள் மீதான விசாரணைகள் உடனேயே ஆரம்பிக்கப்பட்டு சிலர் தூக்கிலிடப்பட்டனர். மீதமானோர் 30 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை பெற்றனர். ஐக்கிய அமெரிக்காவுடன் 20 மாதங்கள் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் இவர்கள் விடுவிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டனர். பதிலுக்கு கியூபா $53 மில்லியன் பெறுமதியான உணவு மற்றும் மருந்து வகைகளைப் பெற்றுக் கொண்டது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia