பயனர்:இ.பு.ஞானப்பிரகாசன்
அறிமுகம்: சார்பற்ற (Freelance) மொழிபெயர்ப்பாளர். தீவிரமான தமிழ்ப் பற்றாளர். எழுத்தாளர். தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் போன்றோரின் நன்மதிப்பைப் பெற்ற தமிழ்ப் பிழை திருத்துநர். கீற்று, நிலாச்சாரல், வார்ப்பு, அகரமுதல என இணைய இதழ்களிலும் மங்கையர் மலர், பாக்யா, கோகுலம், தமிழ் கம்ப்யூட்டர் என அச்சு இதழ்களிலும் எழுதியவர். 2019ஆம் ஆண்டு 13ஆம் உலகில் ஒரு காதல் எனும் தலைப்பில் தன் முதல் புதினத்தை எழுதி ‘அமேசான் கிண்டில்’ இணையத்தளத்தில் வெளியிட்டுப் பலரின் பாராட்டைப் பெற்றவர். ‘நிலாச்சாரல்’, ‘அகரமுதல’ ஆகிய இணைய இதழ்களிலும் ‘நிலா புக்சு’ எனும் இணையப் பதிப்பகத்திலும் பிழை திருத்துநராகப் பணியாற்றியவர். ‘நமது களம்’ இணைய இதழில் துணையாசிரியராக இருந்தவர். 2013ஆம் ஆண்டு முதல் ‘அகச் சிவப்புத் தமிழ்’ எனும் வலைப்பூவை நடத்தி வருபவர். தற்பொழுதைய பணிகள்: ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு, தமிழ்ப் பிழைதிருத்தம், தமிழ்ப் படைப்புகள் இயற்றல், சொல்லாராய்ச்சி, கலைச் சொல்லாக்கம். இடம்: மடிப்பாக்கம், சென்னை. விக்கியனாகத் தோற்றமெடுத்த நாளும் நேரமும்: மார்ச் 2, 2010 அன்று மாலை 5:35. தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்: தினமலர்-கம்ப்யூட்டர் மலரில் வெளிவந்த கட்டுரை வாயிலாக. தமிழ் விக்கிப்பீடியாவில் விருப்பத்திற்குரிய பணி: பிழைதிருத்தம். தமிழ் விக்கிபீடியாவில் தொடங்கிய கட்டுரைகள்: ஓரெழுத்தொருமொழி, ஆல்ஃபிரட் ராசசேகரன் தியாகராசன்.
|
Portal di Ensiklopedia Dunia