பயனர்:மோகன்தாஸ்
இடம்: பெங்களூரு, கர்நாடகா, இந்தியா பிறந்த இடம்: திருச்சி, தமிழ்நாடு, இந்தியா
சிறு அறிமுகம்நான் பிறந்தது வளர்ந்தது படித்தது அனைத்துமே திருச்சியில் தான். தாய் தந்தை இருவருமே ஆசிரியர்கள்; தந்தை உடற்பயிற்சி ஆசிரியர் தாயார் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை எடுக்கும் ஆசிரியை. இதன் காரணமாக விளையாட்டுத் துறையிலும் படிப்புத் துறையிலும் இயற்கையிலேயே ஆர்வம் இருந்தது. எனக்கு புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது எட்டாம் வகுப்பு படித்த பொழுது என்று நினைக்கிறேன். அதற்கு முன்பிருந்தே வார இதழ்களும் தினசரிகளும் படிக்கும் பழக்கம் உண்டு. எங்கள் குடும்ப விளையாட்டு என்று சொல்லத்தக்க "கைப்பந்தாட்டத்தை" நானும் விளையாடுவேன்; என்னுடைய பள்ளி, கல்லூரி, அலுவலகத்திற்காக கைப்பந்தும் கிரிக்கெட்டும் விளையாடியிருக்கிறேன். விருப்பங்கள்புத்தகம்புத்தகம் படிப்பதில் தொடங்கிய ஆர்வம் என்னை தீவிரமான புத்தகப் புழுவாக்கியிருந்தது. சரியான வரிசையில் சொல்லவேண்டுமானால் சுஜாதா, எண்டமூரி வீரேந்திரநாத்(எழுதியது தெலுங்கில் - மொழிபெயர்ப்பு நாவல்கள்), கல்கி, சாண்டில்யன், பாலகுமாரன், தி.ஜானகிராமன், அகிலன், இந்திரா பார்த்தசாரதி, நாஞ்சில் நாடான், ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி என்று நீண்டு பின்னர் ஆதவன், சு.ரா, எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, ரமேஷ் - பிரேம், சாணக்யா என்று தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. படித்ததில் பிடித்த புத்தககங்கள்இந்தப் பிரிவில் எழுத நிறைய விஷயங்கள் இருந்தாலும் முன்பே நான் விமர்சனம் என்ற பெயரில் எழுதிய நூல்களை மட்டும் இப்பொழுது குறிப்பிடுகிறேன். இந்தப் பகுதி நிறைய மாறுபாடுகளை சந்தித்துக்கொண்டேயிருக்கும். புலிநகக் கொன்றை ஓவியம்சிறு வயதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வமுண்டு தனியாய் கற்றுக் கொள்ளாவிட்டாலும் பொன்னியின் செல்வன் புத்தகத்தில் இருந்த ஓவியங்களைப் பார்த்தே வரையப் பழகிக் கொண்டேன். இடையில் ஆனந்த விகடனில் ம.செ(மணியம் செல்வம்) வரைந்த ஓவியங்களை பார்த்து என் ஓவிய நீட்சியை வளர்த்துக் கொண்டேன். நான் வரைந்த சில ஓவியங்கள்
பயணம்பயணம் செய்வதில் ஆரம்பக்காலங்களில் அத்தனை பிரியம் இல்லாமல் இருந்திருக்கிறேன், ஆனால் பொருளாதார நிலை அதற்கு ஒரு காரணமாகச் சொல்லலாம் என்றாலும். தற்பொழுது பயணப்படுவதில் அதிக ஆர்வமாய் இருக்கிறேன். இந்தியாவைச் சுற்றிப் பார்த்துவிட வேண்டும் என்பது பெருங்கனவாய் இருந்தாலும் செய்யவேண்டும் என்ற ஆசையும் ஆவலும் நிச்சயம் உண்டு. சோழர்கள்பொன்னியின் செல்வன் படித்ததில் இருந்துதான் சோழர்களின் மீதான காதல் ஆரம்பித்தது என்பது முழுக்க முழுக்க உண்மை. ஆனால் பொன்னியின் செல்வனையும் இன்னும் பாலகுமாரன் எழுதிக் கொண்டிருக்கும்(முடித்துவிட்ட) உடையாரையும் தாண்டி சோழர்களை அடைய நினைத்தேன். அவர்களை அடைய இவர்கள் முதலில் பாலமாய் இருந்ததை மறுப்பதற்கில்லை ஆனால் புனைவில் அவரவர்களுக்கு விருப்பமானவற்றைச் சேர்த்தும் மறைத்தும் மிகைபடுத்தியும் எழுதியது தான் என்னை சோழர்களைப் பற்றிய K.A. நீலகண்ட சாஸ்திரி புத்தகத்திற்கு அடிப்போட்டது. பின்னர் இராஜராஜேஸ்வரத்துக்கும், கங்கை கொண்ட சோழீஸ்வரஸ்த்துக்கும் சென்று வந்து மனதை ஆறப்போட்டிருக்கிறேன் சோழர்களின் விஷயத்தில். இன்னும் இறங்கி நிறைய விஷயம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நிச்சயமாய் நினைக்கிறேன். சோழர்கள் பற்றி எழுதியதுஅறிமுகம் சினிமாஎந்தச் சூழ்நிலையில் ஆரம்பித்தது என்று தெரியாவிட்டாலும், சினிமா பார்ப்பதில் எனக்கு ஆர்வம் சிறுவயதில் இருந்தே இருந்தது. கொஞ்சம் போல் மெலோட்ட்ராமாவா இருக்கும் சினிமாக்களுக்கான அழுகையுடன் தொடங்கியது என் ஆர்வம். பாபெல்(Babel) படத்திலிருந்து தான் தரமான ஆங்கிலப் படங்கள் பார்க்கவேண்டும் என்ற என்னுடைய தேடல் தொடங்கியது. அந்த வகையில் அலெஜாண்ட்ரோ கன்ஸாலஸ் இன்னாரித்துவிற்கு நன்றிகள். இன்று என்னுடைய உலக சினிவாவிற்கான எல்லைகள் விரிந்து இருக்கின்றன. ஈரான், ப்ரான்ஸ், ஸ்பெயின், மெக்ஸிகோ, ப்ரேசில், ஜப்பான், சீனா என்று எல்லைகள் நாளொரு வண்ணமாய் விரிவடைகின்றன. கொஞ்சம் போல் உலக சினிமாக்களை தமிழ் விக்கிபீடியாவிற்கு அறிமுகப்படுத்தும் ஆவலும் உண்டு. விமர்சனம் எழுதிய சில ஆங்கில படங்கள்Marooned in Iraq இயங்கும் இடங்கள்இணையத்தளம்: http://mohandoss.in வலைபதிவு: http://imohandoss.blogspot.com, http://baavaa.blogspot.com, http://alaithal.blogspot.com தொடர்புக்குமின்னஞ்சல்: mohandoss.i@gmail.com
|
Portal di Ensiklopedia Dunia