பயனர்:Sundar/விக்சனரி தானியங்கித்திட்டம்விக்சனரி தானியங்கித்திட்டம் என்பது தன்னியக்கமாக சொல்-பொருள் விளக்கங்களை தமிழ் விக்சனரியில் சேர்க்கும் திட்டமாகும். நானும் ரவியும் இணைந்து துவக்கிய இந்தத் திட்டத்தின்வழி இதுவரை ஒரு இலட்சத்திற்கும் கூடுதலான கலைச்சொற்கள் மற்றும் சொற்றொடர்களுக்கு விளக்கங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.[1] இன்னமும் பல பணிகள் இதைத்தொடர்ந்து செயல்படுத்த வேண்டியுள்ளன. இதில் பங்களிக்க விரும்புபவர்கள் தங்கள் பெயரைப் பங்களிப்பாளர்கள் பட்டியலில் இணைத்துக் கொள்ளவும். வரலாறு2004-ம் ஆண்டு இறுதியில் தமிழ் விக்கிப்பீடியாவில் மயூரநாதன் மட்டுமே தொடர்ச்சியாக பங்களித்து வந்தார். அந்த நேரம் ஆங்கில விக்கிப்பீடியாவில் ஒரு தமிழ் கற்கும் செருமன் பயனர் ஒருவர் சொல்லக்கேட்டு நானும், வேறு வழிகளில் ரவி, நற்கீரன், சிவகுமார் மற்றும் சிலரும் வந்து இணைந்தோம். அப்போது எங்களுக்கிருந்த சிக்கல்களில் தலையானவை தமிழில் உள்ளீடு செய்வதிலிருந்த இடர்களும் தமிழ் கலைச்சொற்களை அறிந்து பயன்படுத்துவதும்தான். கட்டுரை ஆக்கம் தொடர்பான எங்கள் உரையாடல்கள் கலைச்சொற்கள் தொடர்பிலேயே இருந்தன. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் வெளியிட்ட கலைச்சொல் அகரமுதலிகள்[2] ஒருங்குறியில் இல்லாமலும் எளிதில் தேடுபொறிகளைக் கொண்டு தேட முடியாத நிலையிலும் இருந்தன. சிக்காகோ பல்கலைக்கழகத்தினர் தொகுத்து வெளியிட்ட தெற்காசிய மொழிகளுக்கான அகரமுதலிகளைப்[3] பற்றி எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. பின்னர் சில திங்கள்கள் கழிந்து ரவி தமிழ் விக்சனரியைத் துவக்குவதில்/உயிர்ப்பிப்பதில் முனைந்தார். அப்போது இந்தக் கலைச்சொற்களை அங்கு ஒருங்குறியில் பதிவேற்றினால் பயனுள்ளதாக இருக்கும் என தோன்றியது. இதற்காக பெர்ள் நிரலாக்கமொழியில் சில செய்நிரல்கள் எழுதினேன். அவற்றைக் கொண்டு த.இ.ப. அகரமுதலி ஒன்றை பதிவிறக்கி நிரல்வழியாகவே ஒருங்குறிக்கு மாற்ற முயன்றேன். ரவி அவற்றை மெய்ப்பார்க்கையில் பல வழுக்கள் இருப்பதைக் கண்டறிந்தார். பின்னர் இந்தத் திட்டத்தில் பெரிதும் முன்னேற்றம் ஏற்படவில்லை. சில மாதங்கள் முன்பு இதை மீண்டும் தூசி தட்டி புதிப்பித்தோம். புதிதாக நிரல்கள் எழுதினேன். ரவி குறிமாற்றத்திற்கென ஒரு திறந்தநிலைக் கருவியை[4] எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்படியும் எஞ்சியிருந்த வழுக்களை நிரல் கொண்டும், மெய்ப்பார்த்தல் மூலமும் திருத்தினோம். இன்னமும் மிஞ்சியிருப்பவற்றை பங்களிப்பாளர்களே திருத்த வேண்டும். முதல் கட்டமாக காதலர் நாளன்று வெள்ளோட்டம் விடப்பட்டு மற்ற பயனர்களின் கருத்துக்களைப் பெற்றோம்.[5] என் கணினியிலிருந்து விக்சனரிக்குப் பதிவேற்றத் துவங்கினோம். ஆனால், தொடர்ச்சியான இணைய அணுக்கம் இல்லாமையால் மெதுவாக நடைபெற்றுக் கொண்டிருந்த இப்பணியை ரவி தனது கணினியிலிருந்து செலுத்த முன்வந்தார். தேவையான நிரல்களைப் பொறுமையாக நிறுவி பின் ஒரு இலட்சம் சொற்றொடர்களையும் பதிவேற்றி முடிக்கும்வரை நிரல்களைச் செலுத்தினார். தானியங்கிப் பணிகள்
இனி
பங்களிப்பாளர்கள்
வெளி இணைப்புகள்
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
|
Portal di Ensiklopedia Dunia