இந்திய வரலாறு என்பது நவீன மனிதர்கள் இந்தியத் துணைக் கண்டத்திற்குக் குறைந்தது 55,000 ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் வந்ததில் இருந்து தொடங்குகிறது. தெற்காசியாவில் நிலையான வாழ்க்கையை வாழும் முறையானது பொ. ஊ. மு. 7,000-ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கியது.இது படிப்படியாக சிந்துவெளி நாகரிகமாகப்பரிணாமம் அடைந்தது. அன்றைய மூன்று தொடக்கால நாகரிகத் தொட்டில்களில் இதுவும் ஒன்றாகும். பொ. ஊ. மு. இரண்டாம் ஆயிரமாண்டின் தொடக்கத்தில் தொடர்ச்சியான வறட்சியானது சிந்துவெளி மக்கள் பெரிய நகர மையங்களிலிருந்து சிறிய கிராமங்களாகச் சிதறுவதற்குக் காரணமானது. பொ. ஊ. மு. 600 வாக்கில் ஒரு புதிய, பகுதிகளுக்கு இடையிலான பண்பாடானது உருவானது. பிறகு தலைவர்களால் ஆளப்பட்ட சிறிய அரசுகள் பெரிய அரசுகளாக ஒருங்கிணைக்கப்பட்டன. இரண்டாவது நகரமயமாக்கலானது நடைபெற்றது. புதிய துறவு இயக்கங்கள் மற்றும் சமயக் கருத்துருக்களின் வளர்ச்சியுடன் இது நடைபெற்றது. இதில் சைனம் மற்றும் பௌத்தத்தின் வளர்ச்சியும் அடங்கும். பௌத்தமானது துணைக் கண்டத்தின் ஏற்கெனவே இருந்த சமயப் பண்பாடுகளுடன் கலந்து இந்து சமயத்தின் வளர்ச்சிக்குக் காரணமானது. மேலும்...
துட்டு என்பது தற்போது வழக்கில் இல்லாத குறைந்த மதிப்பு கொண்ட பழைய டச்சு செப்பு நாணயம் ஆகும். இது தமிழில் குறைந்த மதிப்புள்ள பணத்தைக் குறிக்கும் ஒரு பேச்சு வழக்காக உள்ளது.
242 பேருடன் சென்ற ஏர் இந்தியா வானூர்தி 171 (படம்) இந்தியா, அகமதாபாதில் தரையில் மோதி வெடித்ததில் 241 பயணிகளும், தரையில் குறைந்தது 28 பேரும் உயிரிழந்தனர்.
தமிழ், தமிழர்களின் தாய்மொழி. தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். தென்னிந்தியாவில் தமிழ் நாடு, பாண்டிச்சேரி மாநிலங்களிலும், இலங்கையிலும், சிங்கப்பூரிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, துபாய், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரீசியசு, பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 85 மில்லியன் மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது. 2,300 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும்.
1889 – பாரிசில் கூடிய சோசலிசத் தொழிலாளர்களின் "பன்னாட்டுத் தொழிலாளர் நாடாளுமன்ற" நிகழ்வுகளில் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி வேலை-நேரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என முடிவாகியது.