பயனர் பேச்சு:செல்வா/தொகுப்பு 2
1000 கட்டுரைகள் - பெப்ரவரி 22, 2007 முதல் மார்ச் 19, 2007 க்குள் !!கட்டுரை எண்ணிக்கையில் நல்ல முன்னேற்றம். 8000 ஐத் தாண்டியாயிற்று. யார் யாருக்கு எந்த எந்தத் துறையில் ஈடுபாடு உள்ளதோ அவற்றிலெல்லாம் இயன்றவரை நல்ல கட்டுரைகள் எழுதவேண்டும். இப்பொழுது புதிதாக சேர்ந்திருக்கும் பல பயனர்களும் ஆளுக்கு ஓரிரண்டு கட்டுரைகள் எழுதினாலும் நாம் மிக நல்ல முறையில் முன்னேறலாம். விரைவுந்தத்தைத் தளராமல் இன்னும் பலரையும் சேர்த்து தொடர்ந்து எழுதினால் 2 மாதங்களுக்கு முன் 10,000 கட்டுரை இலக்கை எட்டுவோம். தரம், கட்டுரைக் கருத்து பரட்சி, தொடர்புடைய கட்டுரைகள் திரட்சி, அடிப்படைக் கருத்துக்கள் வளர்ச்சி என்று பல்முனை நோக்கும் கருத்தில் கொள்வோம்.--செல்வா 02:37, 19 மார்ச் 2007 (UTC) பன்மொழி விக்கிகளில் ஒராண்டாக 70-71 ஆம் இடத்திலேயே இருந்த தமிழ் இப்பொழுதுதான் 66க்கு வர இருக்கின்றது. முன்னே இருந்த மராத்தி மொழியைத் தாண்டும் வாய்ப்புள்ளது. நமக்கு மிகப்மிகப் பின்னே இருந்த வங்காளி, இந்தி மொழி விக்கிகள் இப்பொழுது மிக மிக முன்னே உள்ளது. தரத்தில் தமிழே இந்திய மொழிகளில் அனைத்திலும் முன்னிருந்தாலும், கட்டுரை எண்ணிக்கையில் பின்னிருந்தது உண்மை. புதிதாக வந்து சிறப்பாக பங்களிக்கும் ஒரு சிலரோடு இன்னும் பதிவு செய்துள்ள பலரும் பங்களித்தால் நாம் இன்னும் எவ்வளவோ முன்னேறலாம். மேலும் பல பயனர்கள் முன்வருவார்கள் என நம்புவோமாக!--செல்வா 02:55, 19 மார்ச் 2007 (UTC) sustainability, tide, solarsustainabilityக்குத் தற்போது தமிழ் விக்கியில் பேண்தகுநிலை, தாங்குவளர்ச்சித் திறன் என்று வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் இரண்டு சொற்களும் திருப்தியாக இல்லை. பேண்த்தகைமை என்று சொன்னால் சரி வருமா? தமிழ் மரபுக்கு ஏற்ற சுருக்கமான சொல் உண்டா? என் ஆய்வுப் படிப்பே sustainability குறித்துத் தான் :) இந்த ஒரு சொல் தடுக்குவதால் பல கருத்துக்களைத் தமிழில் தர இயலவில்லை. tide என்பதற்கு tvuல் ஓதம், ஏற்றவற்றம் என்றிருக்கிறார்கள். ஏற்றவற்றம் காரணப்பெயராக இருக்கிறது. ஓதம் - சொல் மூலம் என்ன? solar energy குறித்த எழுதலாம் என்று இருக்கிறேன்? சூரிய ஆற்றல் என்றால் அனைவருக்கும் புரியும். சூரியன் தமிழ்ச் சொல் என்பதில் குழப்பமாக இருக்கிறது. ஞாயிறாற்றல் என்று எழுதலாமா?--ரவி 19:38, 20 மார்ச் 2007 (UTC)
சூரியன் என்பது தமிழ்தான், சுர்-சுர-சுரம் (சுடு பாலை), சுரீர், சூரன், சூரியன் எல்லாம் தமிழ்தான். எனினும், பலர் தயங்குகின்றனர். சில இடங்களில் கதிரவன், பகலவன் என்றும் பயன்படுத்தலாம், ஆங்கிலத்தில் solar, helios, sun என்று கூறுவதில்லையா, அது போல். தமிழில் 20 சொற்களாவது இருக்கும். ஞாயிற்றின் ஆற்றல் என்று எழுதுவதால் தவறில்லை. கதிரவன் ஆற்றல் என்றும் எழுதலாம். --செல்வா 20:13, 20 மார்ச் 2007 (UTC) சூரியன் தமிழென்றால் அதையே பயன்படுத்தலாம். அதுவே எளிமையான சொல். தகைமை தகுதி, merit, worth என்பது போல் பொருள் தருவதால் பேண்தகைமை என்றால் பேணத் தகுந்த தகுதி உடையது என்று பொருள் வருகிறதோ? sustainability is the ability / possibility to sustain some thing not the qualification to sustain something..பேணியலுகை அல்லது பேணியல்கை? இல்லை, மொத்தமாய் சுருக்கி பேணுகை என்று சொல்லலாமா? ஓதத்துக்கான சொல் விளக்கம் திருப்தி அளிக்கிறது. அதையே பயன்படுத்துகிறேன். எங்களைப் போன்ற ஆர்வமுடைய இளைஞர்களுக்கு வழிகாட்டுதலாய் கலைச்சொல்லாக்கம் குறித்த உங்கள் அனுபவங்கள், வழிமறைகளை உங்கள் வலைப்பதிவில் எழுதினால் மிகந்த உதவியாக இருக்கும். நீங்கள் சொல்வது போல் பாடத்திட்டத்தை உருவாக்குபவர் எல்லாம் தமிழ் விக்கிக்கு வந்தால் அருமை தான். நீங்கள் வந்தபோதும் இன்னும் சிலரை அழைத்திருப்பதாகவும் இணைவர் என்று எதிர்ப்பபார்ப்பதாகவும் கூறி இருந்தீர்கள்!! தமிழ் விக்கிக்கு வந்து பங்களிக்க ஏதோ ஒரு கண்ணுக்குப் புலனாகாத உந்து சக்தி இருக்க வேண்டும் போல :) !! தமிழ் இணையப் பல்கலையில் mass, weight இரண்டுக்கும் நிறை கொடுத்திருக்கிறார்கள். massக்குப் பொருண்மை, திணிவு, நிறை என்று பட்டியல் நீளுகிறது. :( :( தமிழ் இணையப் பல்கலை தள வடிவமைப்பில் ஏராளமான மாற்றங்கள் தேவை. உங்களுக்கு அறிந்தவர்கள் இருந்தால் முயற்சி எடுக்க வேண்டுகிறேன். பொடிப் பசங்களால் அணுக முடியாத இடம் போல் இருக்கிறது!!!--ரவி 20:39, 20 மார்ச் 2007 (UTC) கட்டுரை ஆக்கம்போதிய அளவு விரைவில் கட்டுரைகள் ஆக்கவில்லை என்றால் மீண்டும் 70 ஆம் இடத்திற்கே தள்ளப்படுவோம். --செல்வா 14:54, 21 மார்ச் 2007 (UTC) தமிழ் 99செல்வா, பழகினால் எதிலும் வேகமாகத் தட்டச்சலாம் என்பது உண்மை தான். ஆனால், தமிழ் 99 பழகவும் எளிது. அயர்ச்சியும் அளிக்காது. தயவுசெய்து இது குறித்த என் வலைப்பதிவுக் கட்டுரையைப் படித்துக் கருத்துப் பகிர வேண்டுகிறேன். ஏற்கனவே பாமினி போன்ற முறையைப் பயின்றவர்கள் தமிழ் 99க்கு மாறுவது சற்று சிரமம். ஆனால், ammaa = அம்மா என்று தமிங்கில விசைப்பலகையில் எழுதுபவர்கள் மிக எளிதாக தமிழ் 99க்கு மாற முடியும். --ரவி 22:13, 21 மார்ச் 2007 (UTC) அம்பர்செல்வா, அம்பர் என்பது தமிழ்ச் சொல்லா? தமிழெனில் இங்கிருந்து ஆங்கிலத்திற்குச் சென்றதா? பார்க்க பேச்சு:அம்பர்--Sivakumar \பேச்சு 22:37, 23 மார்ச் 2007 (UTC) மறுமொழிசிவகுமார், போதிய ஆய்வு செய்யாமல் எங்கிருந்து எங்கு சென்றது என்று கூறுவது தவறாகும். எனக்குத் தெரிந்தவற்றைக் கூறுகிறேன். முதலில் தமிழில் அம் என்றால் நீர். அம்பரம் என்றால் கடல். அம்பணம் என்றாலும் நீர், கடல். அம்பா என்றால் நீராடல் (அம்பா ஆடல் என்றும் கூறுவர்). அப்பை = கொன்றை (மஞ்சள் நிறப்பூ). ம-ப சில இடங்களில் மருவி வரும். எ.கா: அமரம்=அபரம் = பின் பக்கம் (முதுகு). இதன் தொடர்பாய் அம்பர் என்பது கடலில் கிடைக்கும் பொருள் என்று வந்திருக்க வேண்டும். இவை மரப்பிசினாயினும், பால்ட்டிக் நாடு போன்ற நாடுகளில் கடற்கரையில் கிடைப்பது -இன்றும் கிடைப்பது. இது திமிங்கிலத்தின் உறுப்பில் சுரக்கும் ("Ambergris, a morbid secretion of the liver or intestines of the spermaceti whale") என்றும் கருதப்படுகின்றது. எப்படியாயினும் கடலோடு தொடர்பு கொண்டது. கடல்-படு-திரவியம் என்றே அறியப்படுகின்றது. தமிழ்வழிப் பொருள் தொடர்பு புரிகின்றது. எப்பொழுதிருந்து இச்சொற்கள் தமிழில் ஆளப்படுகின்றன என்பனவற்றையும் பார்த்தல் வேண்டும். இப்பொழுது ஆங்கிலத்துக்கு வருவோம். ஆக்ஸ்போர்டு அகராதியில் amber என்பதற்குக் கீழ்க்காணும் குறிப்பு உள்ளது (சற்று நீளமானது): அதன் படி கி.பி. 1400ல் இருந்து ஆங்கிலத்தில் வழங்கி வருகின்றது. (கிரேக்க மொழியில் electron Greek name {hlenisacu}{lambda}{epsilon}{kappa}{tau}{rho}{omicron}{nu}).") . The resin. 3. a. A yellowish translucent fossil resin, found chiefly along the southern shores of the Baltic. It is used for ornaments; burns with an agreeable odour; often entombs the bodies of insects, etc.; and when rubbed becomes notably electric (so called from its Greek name {hlenisacu}{lambda}{epsilon}{kappa}{tau}{rho}{omicron}{nu}). (See also LAMBER.) c1400 Destr. Troy v. 1666 Bourdourt about all with bright Aumbur. c1450 Bk. Curtasye III. 481 The wardrop he herbers, and eke of chambur Ladyes with bedys of coralle and lambur. 1463 in Bury Wills 15 A peyre bedys of ambyr with a ryng of syluir. a1529 SKELTON Elynour Rummyng 603 But my bedes of amber, Bere them to my chamber. 1552 HULOET, Ambre called lambre or yelow Ambre. 1556 Richmond. Wills (1853) 89 One paire of long beads of awmer. 1602 SHAKES. Ham. II. ii. 200 Thicke Amber, or Plum-Tree Gumme. 1658 SIR T. BROWNE Hydriot. ii. 18 That Romane Urne..wherein were found an Ape of Agate, an Elephant of Ambre. 1735 POPE Ep. Arbuthnot 169 Pretty! in amber to observe the forms Of hairs, or straws, or dirt, or grubs, or worms! 1794 SULLIVAN View Nat. II. 27 Amber, when rubbed, was observed to attract bits of straw, down, and other light bodies. 1847 BLACKWELL Malet's North. Antiq. 374 Byron caught him up, and..preserved him, like a fly in amber, for future generations to wonder at. 1865 CARLYLE Fredk. Gt. I. II. ii. 54 Amber, science declares, is a kind of petrified resin, distilled by pines that were dead before the days of Adam. மெரியம்-வெப்ஸ்ட்டர் அகராதி, "Etymology: Middle English ambre, from Anglo-French, from Medieval Latin ambra, from Arabic 'anbar ambergris" என்று தருகின்றது. எனவே அராபிக் மொழித்தொடர்பும் இருக்கும். --செல்வா 00:11, 24 மார்ச் 2007 (UTC)
உரை திருத்த வேண்டல்செல்வா, 10, 000 கட்டுரை இலக்கை விரைவில் அடைந்து விடுவோம் என்ற நிலையில் ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் உள்ள பிழைகள் மிகவும் உறுத்தலாக இருக்கிறது. குறிப்பில்வழிப் பக்கம் மூலமோ உங்களுக்குப் பிடித்த பகுப்புகள், தலைப்புகளில் உள்ள கட்டுரைகள் ஆகியவற்றில் உள்ள பிற பயனர்களின் கட்டுரைகளை கவனித்து, குறைந்தபட்சம் எழுத்துப் பிழைகளையாவது களைந்து, உரை திருத்தித் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஒரு நாளைக்கு 5 கட்டுரைகள் என்று திருத்தித் தர இயலுமானாலும் நன்று. --ரவி 11:04, 30 மார்ச் 2007 (UTC)
விரிவாக்கக் கோரிக்கைசெல்வா, நேரங் கிடைக்கும்போது நெடுங்கணக்கு கட்டுரையை விரிவாக்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --கோபி 16:06, 30 மார்ச் 2007 (UTC)
ஒரு சிறிய உதவிசெல்வா, வணக்கம். நான் தற்போது சிறுத்தை பற்றிய கட்டுரையைப் பதிவிட்டுள்ளேன். அதில் படங்கள் சரியாகத் தெரியவில்லை. தாங்கள் சரிசெய்கிறீர்களா?. நன்றி. --யோகேஸ் 16:30, 1 ஏப்ரல் 2007 (UTC) புதிய பங்களிப்பாளர்கள்செல்வா, நீங்கள் தேடிக்கொண்டிருந்த இன்னும் 5,6 புதுப் பங்களிப்பாளர்களில் இருவராக மதுவும் யோகேசும் வாய்த்து இருக்கிறார்கள் :) --ரவி 19:41, 4 ஏப்ரல் 2007 (UTC) கட்டுரை ஆக்கத்தில் தொய்வுமார்ச் 28 ஆம் நள் தொடங்கி இப்பொழுது வரை (8 நாட்களில்) 95 கட்டுரைகள்தான் எழுதியுள்ளோம். இது பழைய நிலையான தொய்வுநிலை. நாளொன்றுக்கு 30 கட்டுரைகள் (10 பேர் x3 என்னும் வீதத்தில்) எழுத வேண்டும். ஒரு சிலரால் எழுத இயலாவிடில் பிற பயனர்கள் வந்து கைகொடுக்க வேண்டும்- இயன்ற அளவு. கட்டுரை விரிவாக்கம், உரைத்திருத்தம், செப்பனிடுதல் எல்லாமும் செய்துகொண்டே இதனையும் விடாது செய்தல் வேண்டும். இப்பொழுது யோகேஸ், மது, காயத்திரி போன்ற அருமையாக எழுதும் பயனர்களும் சேர்ந்திருப்பதால், மற்ற பயனர்களும் கைகொடுக்க வேண்டுகிறேன். நிரோ சற்று ஓய்வு எடுக்கட்டும். 9,000க்கு இன்னும் 97 கட்டுரைகள்தாம் உள்ளன. மூன்றே நாட்களில் எட்ட முடியும். அதன் பின் ஒரு மாதத்தில் 10,000 கட்டுரைகளை எட்டிவிடலாம். பயனர்கள் முன்வருவார்களா?!!--செல்வா 22:00, 4 ஏப்ரல் 2007 (UTC) 62 ஆம் இடத்தில் இருந்து 63 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.--செல்வா 12:34, 5 ஏப்ரல் 2007 (UTC) செல்வா, frankly speaking, இந்த எண்ணிக்கைத் தர வரிசை, தினக் கட்டுரை இலக்கு ஆகியவற்றைக் குறித்து அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என்று என்னளவில் தோன்றுகிறது. எந்த வித இலக்கும் இல்லாமல் அன்றாட வேலைப்பளு, moodக்கு ஏற்ப பங்களிப்பாளர்கள் செயற்படும்போது இன்னும் மேம்பட்ட, இயல்பான, தரமான கட்டுரைகள் வரும் என்று தோன்றுகிறது. நாளுக்கு இவ்வளவு என்று முனைந்தால் சில சமயம் குறுங்கட்டுரைகளாவே தொடர்ந்து எழுதத் தூண்டுதலாக இருக்கக்கூடும். தொடர்ந்து இரு ஆண்டுகளாகப் பங்களிக்கும் சிலருக்கு ஒரு வித அயர்ச்சியும் வருவது உண்டு. எனவே கட்டுரை உருவாக்கத் தொய்வு புரிந்துகொள்ளத்தக்கதும் எதிர்ப்பார்க்கத்தக்கதுமே என்று நினைக்கிறேன்.--ரவி 13:56, 5 ஏப்ரல் 2007 (UTC)
FARCTamil Language article to be removed of its FA, even after extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language --Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC) ஒரு கேள்விஅந்த V. கிருஷ்ணமூர்த்தி நான் இல்லை. எனக்கு ஒரு Graph Theory கிருஷ்ணமூர்த்தியைத் தெரியும். அவராகத்தான் இருக்கும் நீங்கள் சொல்பவர். --Profvk 03:11, 15 ஏப்ரல் 2007 (UTC) நன்றிபாராட்டுகளுக்கு நன்றி செல்வா.--டெரன்ஸ் \பேச்சு 11:26, 20 ஏப்ரல் 2007 (UTC) தயவு செய்து வாக்களிக்கவும்பார்க்க - http://meta.wikimedia.org/wiki/Requests_for_new_languages/Wikisource_Tamil --ரவி 12:49, 21 ஏப்ரல் 2007 (UTC) மொழிபெயர்ப்பு உதவி தேவைபார்க்க: பேச்சு:பகடிப்பட இயற்பியல். -- Sundar \பேச்சு 11:50, 25 ஏப்ரல் 2007 (UTC)
Wikipedia:எழுத்துப் பெயர்ப்பு முறைகள்Wikipedia:எழுத்துப் பெயர்ப்பு முறைகள் செல்வா தங்களது கவனத்தை இந்த பக்கத்துக்கு வேண்டுகிறேன். முடியுமான போது வந்து பங்களிக்கவும்.--டெரன்ஸ் \பேச்சு 02:03, 26 ஏப்ரல் 2007 (UTC) Your welcome messageThank you for the welcome. Actually a Malayali/Tamil hybrid is my native language, but I am hampered by poor tamil reading skills. I hope to promote content flow between Indian language wikipedias.ராஜா ராம் 02:05, 29 ஏப்ரல் 2007 (UTC) மார்ச் மாதத்திற்கான புதிய புள்ளியியல் குறிப்புகள்பார்க்கவும். தர ஒப்பீடுகள் செய்ய எனக்கு நேரம் இல்லை. பல்வகைப் பொறுப்புகள் அண்மையில் மிகுந்துள்ளதால் இன்னும் 6-7 நாட்கள் சரிவர பங்கு கொள்ள இயலாது. அயராது உழைக்கும் தமிழ் விக்கி அன்பர்களுடன் இணைந்து பங்களிக்க இயலாமல் இருப்பது கண்டு வருந்துகிறேன். ஒப்பரிய பயன் பெருக்கும் இந்த விக்கி முயற்சி. வேண்டிய அளவு செப்பம் தீட்டி பெரும் அறிவுக்களஞ்சியமாய்த் திகழும். தமிழே இன்னும் பெருமளவிலும் முன்னணியில் உள்ளது. கட்டுரை எண்ணிக்கையில் 5 ஆவ்து இடத்தில் இருந்தாலும். எல்லாத் தர அளவீடுகளிலும் முதலிடத்தில் உள்ளது. கட்டுரை எண்ணிக்கையில் தெலுங்கு (27K 36 ஆவது இடம்), வங்காளி (15.6K 47 ஆவது இடம்), மணிப்ப்புரி (12.3K 57 ஆவது இடம்), இந்தி (10.4K 60 ஆவது இடம்), தமிழ் (10.2K 61 ஆவது இடம்). தமிழ் விக்கியின் தரவுப் பருவளவு 33M, வங்காளி 30 M, தெலுங்கு 24 M, இந்தி 17 M, மராத்தி 14 M. நீளமான கட்டுரைகள் முதலான எல்லாத் தர அளவீடுகளிலும் தமிழே முதலிடம். யாரேனும் இவைகளை தொகுத்து அட்டவனைப் படுத்துங்கள்.--செல்வா 14:11, 2 மே 2007 (UTC)
தரக் குறிப்புகள் ஒப்பீட்டு அட்டவனைஎந்த ஒரு நெடுங்குழுவின் அடிப்படையிலும் ஏறுவரிசை இறங்குவரிசையாக வரிசைப்படுத்திப் பார்க்க வசதியுள்ள அட்டவணை. டெரன்ஸ் துடுப்பாட்டப் போட்டிக் கட்டுரையில் இருந்ததைத் தழுவி ஆக்கப்பட்டது. நன்றி டெரன்ஸ்!
தங்கள் ஒலிக்குறியீடுசெல்வா, தாங்கள் அறிமுகப்படுத்தியத்தற்கு ஒத்த ஒலிக்குறிப்பு இப்பக்கத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது :)--Sivakumar \பேச்சு 19:39, 14 மே 2007 (UTC) ஓராண்டு நிறைவுமே 24 ஆம் நாளாகிய இன்றோடு நான் விக்கியில் இணைந்து ஓராண்டு நிறைவு பெறுகின்றது. இது வரையிலும் 316 கட்டுரைகள் தொடங்கியுள்ளேன். கட்டுரைகளில் எழுதியதைவிட உரையாடல் பக்கங்களிலே எழுதியது அதிகம் இருக்கும் :) மொத்தத் தொக்குப்புகள் 4480. பல கட்டுரைகளை விரிவாக்கியுள்ளேன். என்றாலும் ஒரு கட்டுரையேனும் எனக்கு நிறைவு தடுமாறு எழுதவில்லை. பட்டாம்பூச்சி கட்டுரையை "விரைவில்" சரி செய்து நிறைவு செய்ய எண்ணியுள்ளேன். இதுபோல இன்னும் ஒரு 100 கட்டுரையாவது சற்றேனும் நிறைவு தருவதாக எழுத வேண்டும் என்னும் அவா உள்ளத்துள் கங்கு போல் உள்ளது! இரண்டாம் ஆண்டு இதனினும் சிறந்ததாக அமைய வேண்டும் என்பது என் அவா. எனக்கு ஊக்கம் அளித்த, என் குறைகளைப் பொருத்தருளிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்--செல்வா 16:32, 24 மே 2007 (UTC)
செல்வா உங்கள் வருகையும் தொடர்ச்சியான பங்களிப்பும் விக்கிபீடியாவுக்குக் கிடைத்தமையால் நாமெல்லோரும் பெற்ற பயன்கள் ஏராளம். உங்கள் பங்களிப்பும் வழிகாட்டுதலும் தொடர்ந்து கிடைக்க வேண்டும். நன்றிகள்; பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள். கோபி 16:22, 25 மே 2007 (UTC) பேராசிரியரே இவ் ஒருவருடகாலத்தில் நீங்கள் ஆற்றிய பங்களிப்பு எம்போன்ற கத்துகுட்டிகளுக்கு வழிகாட்டியாக இருந்தது என்பது மிகையல்ல உங்களின் பணிதொடர வாழ்த்தும் மகிழ்ச்சியும் தெரிவிகின்றேன்.--கலாநிதி 17:02, 25 மே 2007 (UTC)
--Profvk 23:01, 25 மே 2007 (UTC) பாராட்டுக்கள்.--நிரோஜன் சக்திவேல் 23:38, 25 மே 2007 (UTC)
dctionaryIs there a good english to tamil dictionary online that uses romanized tamil?ராஜா ராம் 01:17, 5 ஜூன் 2007 (UTC) ஏன் இந்தத் தொய்வு?!விக்கி நண்பர்களே, விக்கியாக்கத்தில் ஏன் இந்தப் பெரும் தொய்வு?! கனகு, மயூரநாதனும், உமாபதி (நாயன்மார்கள் பற்றி), Profvk அவர்களும்,சிவகுமார் நற்கீரன், சிந்து ஆகியோரும் இன்னும் சிலரும் இடையறாது பணியாறியுள்ளனர். கடந்த மாதத்தில் 192 கட்டுரைகள்தான் ஆக்கப்பட்டுள்ளன. குறைந்தது 30 கட்டுரைகள்எழுதவேண்டிய நானே மூன்றுதான் எழுதினேன் (வண்டு, பிநாஸ், அ.பொ.நூ). விடுபட்டவற்றில் எவ்வளவு ஈடுகட்ட இயலும் என்று பார்க்கின்றேன்! இன்னும் புதிய பயனர்கள் வந்து பங்களிப்பார்களா என்று முயன்று வருகின்றேன். இதுவரை பயன் ஏதும் இல்லை! ஹரிகிருஷண் போன்ற சிறந்த தமிழறிஞர்கள் வருகை தந்திருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகின்றது. புது முடுக்கத்துடன் கட்டுரைகள் ஆக்குவோம் வாரீர் :) கடந்த ஒரு மாதத்தில் ('சூன் 6, 2007 முதல்) பங்களித்தவர்கள் ஆக்கிய புதிய கட்டுரைகள்:
--செல்வா 15:34, 6 ஜூலை 2007 (UTC)
மற்றும் பலரும் பங்கு கொண்டு ஆக்கம் அளித்துள்ளனர். தோராயமாக என்ன நடந்துள்ளது என்ற ஒரு கணிப்புதான் இது. யாரும் தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம். --செல்வா 15:41, 6 ஜூலை 2007 (UTC)
செல்வா, தனிப்பட்ட காரணங்களால் விக்கி போன்றவற்றுக்கு அதிக நேரம் ஒதுக்க முடியவில்லை. ஆயினும் அண்மைய மாற்றங்களைத் தொடர்ந்து பார்வையிட்டு வருகிறேன். கனக சிறீதரன், மயூரநாதன் ஆகியோர் தொடர்ச்சியாகக் கட்டுரையாக்கத்தில் பங்களித்துவருவது மகிழ்ச்சியளிக்கிறது. அண்மையில் உமாபதியும் வேகமாக எழுதி வருகிறார். அதிகம் பங்களித்து வந்த நிரோ, ரவி போறோரது பங்களிப்புக் குறைந்துள்ளது. நற்கீரனது பங்களிப்பும் ஓரளவு குறைந்துள்ளது. புதியவர்கள் வரவு எதிர்பார்த்த அளவு இல்லாதது ஏமாற்றமளிப்பது உண்மைதான். எனினும் மீண்டும் த.வி வேகம் பெறுமென்ற நம்பிக்கை நிச்சயம் உள்ளது. நன்றி. கோபி 17:56, 6 ஜூலை 2007 (UTC) என் சொந்த வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் (நல்லவைதான்!) இன்னும் ஓரிரு திங்கள் என்னால் சரிவர பங்களிக்க இயலாது என்றெண்ணுகிறேன். -- Sundar \பேச்சு 11:10, 10 ஜூலை 2007 (UTC) செல்வா, தொய்வுக்குப் பல காரணங்கள். 0. 10, 000 கட்டுரைகள் என்ற ஈராண்டு இலக்குக்காக தொடர்ந்து உழைத்த பலரும் கொஞ்சம் அசதியில் ஓய்வெடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன் :) 1. நான், கோபி, மயூரன் போன்றோர் பல இணையத் தமிழ்க் களங்களில் (பிற தமிழ் விக்கி திட்டங்கள் உட்பட) கவனம் செலுத்துகிறோம். தவிர, தமிழ் விக்கிபீடியாவில் கவனித்துக் கொள்ள நம்பகமான ஆட்கள் இருக்கும் நிலையில், தொடக்க முனைப்பு தேவைப்படும் இன்னும் பல களங்களுக்கும் நாங்கள் நகர்ந்து முடுக்கி விடுவது பொருத்தமாக இருக்கும். தமிழ், இணையத்தமிழ் வளர்ச்சிக்குப் பல முனைகளில் செயல்பட வேண்டி உள்ளதால் விக்கியில் மட்டும் முழுமையாகக் கவனத்தைக் குவிக்க இயலவில்லை. 2. முனைப்பு குறையும் பழைய பங்களிப்பாளர்கள் பலரும் இளைஞர்கள். பல்கலைக்கழகப் படிப்பில், வாழ்வில், பணிச்சூழலில் முக்கியக் கட்டத்தில் இருக்கிறோம். சுவரைப் பலப்படுத்த கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. 3. நான், கோபி போன்றோர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் விக்கியில் உழன்று இருக்கிறோம். இதனால் வரும் ஒரு வித monotony. சோர்வு, சலிப்பு என்று ஒரு மாற்றத்துக்காகவேணும் சிறிது ஒதுங்கி இருந்து விக்கியை அவதானிக்க வேண்டி இருக்கிறது. விக்கி பைத்தியம் :) முற்றி விடக்கூடாது அல்லவா? தவிர, அன்றாடம் விக்கியைக் கவனிப்பது ஒரு விதமான உணர்வுப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்தி விடுகிறது. விக்கியில் உள்ள நல்ல விசயங்கள் ஆனந்தம் தரும் வேளை, எதிர்மறையான விசயங்கள் தேவையில்லாத மனச்சோர்வு, குழப்பத்தைத் தரலாம். எடுத்துக்காட்டுக்கு, நீண்ட பேச்சுப் பக்க உரையாடல்கள். சிறிது ஒதுங்கி இருந்து விட்டு வருவது விக்கியுடனான உணர்வுப் பிணைப்பை ஆக்கப்பூர்வமான வழியில் மாற்றி அமைக்க உதவும் என்று நம்புகிறேன். எனினும், ஈராண்டுகளுக்கு முன் நாங்கள் நிறைய பேர் வந்தது போல் புதிது புதிதாகத் தொடர்ந்து பங்களிப்பாளர்கள் வந்து சேர்வார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம். --ரவி 21:31, 10 ஜூலை 2007 (UTC)
செல்வா, நீங்கள் முன்னர் ஒருமுறை பரிந்துரைத்த ' குறியீட்டு முறைக்கும் தமிழ்நெற் தளம் பரிந்துரைக்கும் முறைக்கும் ஒற்றுமைகள் நிறைய இருப்பது போல தெரிகின்றது. ஒப்பிட்டு விளக்கம் தர முடியுமா? --Natkeeran 12:55, 14 ஜூலை 2007 (UTC) திருவல்லிக்கேணிநீங்கள் திருவல்லிக்கேணி என்னும் கட்டுரையில் இருந்த வரைபடம் மற்றும் புள்ளியியல் குறிப்புகளை நீக்கியிருந்தீர்கள். இவ்வாறு இரு முறை செய்துள்ளீர்கள். ஏன் என்று விளங்க வில்லை. Kanags என்னும் பயனர் ஒரு முறை நீங்கள் நீக்கிய பகுதியை மீண்டும் சேர்த்தார். இப்பொழுது நானும் செய்திருக்கின்றேன். சோதனை செய்து பார்க்கவேண்டும் எனில், மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.--செல்வா 13:21, 4 ஆகஸ்ட் 2007 (UTC) நான் விக்கிப்பிடியாவிற்க்கு புதியதாக சேர்ந்திருப்பதால் இத்தவருகள் நடக்கின்றன. நான் புதிய கட்டுரைகளை சேர்க்க தொடர்ந்து தந்கள் அறிவுரையை நாடுகிறேன். .--குருப்பிரசாத் 11:59, 4 ஆகஸ்ட் 2007 (EST)
நுண்புலஒருவேளை கவனிக்கத் தவறியிருந்தால் -- Sundar \பேச்சு 09:17, 2 ஆகஸ்ட் 2007 (UTC)
தமிழ் அறிஞர்கள்இக்கட்டுரை தொடர்பாக உங்கள் கருத்துக்களை அறிய ஆவல். பார்க்க பேச்சு:கால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள் --Sivakumar \பேச்சு 04:15, 13 ஆகஸ்ட் 2007 (UTC) மறுமொழி: வட்ட விலகல்சீரற்ற திடக்கோளவடிவங்களின் பிறழ்வையளக்க quadrupole moment என்பதுவும் உண்டு (ஆனால், அது மின்னூட்டுப் பெற்ற கோளங்களுக்கே பொறுந்துமென நினைக்கின்றேன், இருபினும்) அவ்விலகளினின்று இதை வேறுபடுத்திக்காட்டவே வட்ட விலகல் எனக்கொண்டாள வேண்டியதாயிற்று!
இதையும் சற்று கவனிக்கவும்இங்கேயுள்ள சுற்றுக்கால வகைப்பெயர்களுக்கு தீந்தமிழ் நிகரிகள் வேண்டும்! -நரசிம்மவர்மன்10 06:35, 10 செப்டெம்பர் 2007 (UTC) மறு: விளக்கம்செல்வா, நான் வேண்டியது சுற்றுக்காலம் என்ற இப்பக்கத்தில் உள்ள Sidereal, Synodic, Draconitic, Anomalistic, Tropical ஆகியவற்றை தமிழில் தந்தருள! மேலும், "தீந்தமிழ் நிகரி" என்ற என் சொல்லாட்சியை பற்றி தாங்கள் குறிப்பிட்டீர்கள், விக்கிபீடியாவில் நான் உழற்ற காரணம் இங்கு வீசும் தேன்தமிழ் தென்றலேயாகும்! தமிழ்நாடிலேயே வாழ்ந்தாலும் தூய்மையான தமிழை சுவாசிக்கும் வாய்ப்பு குறைவுதான்! இன்னும் கூட பத்திக்கு ஒரு பிழையேனும் நேராமல் என்னால் எழுத முடிவதில்லை! இங்கு தமிழின் தூய்மையும் இனிமையும் எனக்கு மிட்டாய் கடையில் நுழைந்த குழந்தயாய் குதூகலப்படுத்துகின்றன! :-) -நரசிம்மவர்மன்10 06:19, 17 செப்டெம்பர் 2007 (UTC) COBOLCOBOL ஐ கோபோல் அல்லது கோபால் என்றா பலுக்குவது (ஒலிப்பது)? கிட்டிய ஒலிபெயர்பு பற்றி நேரம் இருந்தால் உங்களின் கருத்தைத் தெரிவிக்கவும். ஏனையவற்றிற்கு வழிமாற்றுப்பக்கம் உருவாக்கலாம். --Umapathy (உமாபதி) 15:40, 11 செப்டெம்பர் 2007 (UTC)
நன்றிசெல்வா, Year in other calendars வார்ப்புருவில் திருவள்ளுவர் ஆண்டையும் சேர்த்து மேம்படுத்தியமைக்கு நன்றிகள்.--Kanags 08:42, 12 செப்டெம்பர் 2007 (UTC) மூலிகைகள்செல்வா, மூலிகைகள் தொடர்பான குறுங்கட்டுரைகள் உருவாக்கப்பட்டு இரண்டாண்டுகளாகின்றன. ஏறத்தாழ 100 கட்டுரைகள் உருவாக்கப்பட்டிருந்தன. தகவல்கள் என்னவோ மூலிகைகள் பட்டியல் என்ற ஒன்றில் கொடுக்கக் கூடியவை. இரண்டாண்டில் அக்கட்டுரைகளை விரிவாக்குவதில்/நீக்குவதில் போதிய கவனம் செலுத்தியது அதிகம் பேரில்லை. தொடர்பான உரையாடல்களில் ரவியும் பங்குகொண்டார். அறிவியற் பெயர் தரப்படாத ஆக்கங்கள் சில நீக்கப்பட்டன. பல மூலிகைக் கட்டுரைகளை நானே விரிவாக்கினேன். எஞ்சி ஓரிருவரிகளாயிருந்த கட்டுரைத் தகவல்களைப் பட்டியலுக்கு நகர்த்திவிட்டு நீக்கினேன். மூலிகைகள் பட்டியல் பக்கத்தில் தகவல்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டுள்ளன. தகவல்கள் எவையும் நீக்கப்படவில்லை. குறும்பக்கங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. குறுங்கட்டுரைகள்செல்வா, குறுங்கட்டுரைகள் பக்கத்தை ஓராண்டாக கவனித்து வருகிறேன். குறுங்கட்டுரைகள் இருப்பது எந்த விதத்திலும் பிழையில்லைத்தான். ஆனால் கட்டுரை எண்ணிக்கை அதிகரிக்கவெனவே உருவாக்கப்பட்ட கட்டுரைகளால் பயனில்லை. தம்மளவில் முழுமையான மிகச் சிறு கட்டுரைகள் அவ்வாறே இருக்கின்றன. பார்க்க பொருள் இலக்கணம். அக்கட்டுரையை விரிவாக்க உங்களை நான் முன்பொருமுறை கேட்டிருந்தேன். [1] நான் இதைக் குறிப்பிடுவது குறுங்கட்டுரை விரிவாக்கத்தில் மிகவும் பொறுப்புணர்வுடன் செயற்படுகிறேன் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ளவேயாகும். பல மூலிகை தொடர்பான கட்டுரைகளை நானே விரிவாக்கியுள்ளேன். சற்றுப் பெரிய மூலிகைக் கட்டுரைகளின் வரலாற்றைப் பார்வையிட்டால் எனது விரிவாக்கங்களைக் கண்டு கொள்ளலாம். மூலிகைகள் தொடர்பான கட்டுரைகளை விரிவாக்கவெனவே தமிழ்நாட்டு மூலிகைகள் (க. ரத்னம்), மூலிகைகள் - ஓர் அறிமுகம் - (சித்தமருத்துவ கலாநிதி சே. சிவசண்முகராஜா) இரு நூல்களை வாங்கியிருந்தேன். இன்றும் பல குறுங்கட்டுரைகளை விரிவாக்கினேன். அப்பணியைப் பொறுமையாகத்தான் செய்து வருகிறேன். என் செயற்பாடுகள் பிழையானவைதான் என்று நீங்கள் கருதினால் தெரியப்படுத்தி உதவுங்கள். உங்களுக்கு மனவருத்தமளித்தமைக்கு வருந்துகிறேன். நன்றி. --கோபி 12:45, 12 செப்டெம்பர் 2007 (UTC)
நன்றி செல்வா. பொருள் இலக்கணம் பற்றிக் குறிப்பிட்டமைக்குக் காரணம் ஒருவரியேயாயினும் தம்மளவில் முழுமையான கட்டுரைகளுக்கு speed-delete வார்ப்புரு கூட நான் இட்டதில்லை என்பதைச் சுட்டிக் காட்டவே; நீக்கக் கோரி அல்ல. தம்மளவில் முழுமையான எந்தச் சிறு கட்டுரையையும் 1-2 வரி என்றாலும் நான் நீக்கவில்லை. நன்றி. கோபி 13:37, 12 செப்டெம்பர் 2007 (UTC) வேண்டுகோள்செல்வா, நேரமிருந்தால் உயரம் கட்டுரையைச் சற்று விரிவாக்க் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. கோபி 16:07, 12 செப்டெம்பர் 2007 (UTC)
கணேஷ்பாட்காட்டுப்புத்தூர் கட்டுரையை விரிவாக்கிய பயனரைப் பார்க்கையில் கணேஷ்பாட் பயந்தரத் துவங்கியுள்ளது தெரிகிறது. -- Sundar \பேச்சு 10:25, 13 செப்டெம்பர் 2007 (UTC)
கணோஷ்பாட் இன் மூலநிரல் கிடைக்குமா? மொழிபெயர்ப்புத் தானியங்கியை உருவாக்க இயலுமா? இதே போன்ற ஒரு தானியங்கியை உருவாக்க விரும்புகின்றேன் அதற்கு என்ன செய்யவேண்டும் ?--உமாபதி \பேச்சு 09:17, 4 ஜனவரி 2008 (UTC)
ஆண்டுகள்செல்வா, பதினைந்தாம் என்பதை 15ம், 15-ம், 15ஆம், 15 ஆம், 15-ஆம்... இவற்றில் எவ்வாறு எழுதுவது பொருத்தமானது? இந்த எல்லா வகைகளைம் நூல்களில் இப்பொழுது கண்டேன். 15ம் என எழுதுவது உறுத்துவதாக இருததால் இந்தத் தேடல்.. --கோபி 04:53, 15 செப்டெம்பர் 2007 (UTC)
Cantorஉங்கள் செய்தியை இன்றுதான் கண்டேன். இருப்பினும் நீங்களும் பேராசிரியர் வீ.கே. அவர்களும் கட்டுரையை விரிவுபடுத்தியுள்ளதைக் கண்டேன். நானும் என் பங்கிற்கு ஏதாவது செய்கிறேன். -- Sundar \பேச்சு 12:48, 16 செப்டெம்பர் 2007 (UTC) மறு:Albedo-நிகரிகள்தாங்கள் பரிந்துரைத்துள்ள நிகரிகளுள், வெண்ணெகிர்வு பொருத்தமாய் இருப்பதாய் எண்ணுகின்றேன் (albus-வெண்மை albus->albedo) , இதையே அக்கட்டுரையின் தலைப்பாய் சூட்டுவதை பற்றி தங்கள் கருத்தையும் பகர்க! -நரசிம்மவர்மன்10 07:30, 17 செப்டெம்பர் 2007 (UTC) மாழைக் கலவைதங்களின் வெண்கலம் கட்டுரையில் "மாழைக் கலவை"யென்ற சொல்லாட்சி கண்டேன், அஃது alloy என்பதன் நிகர்ப்பதம் என உனர்ந்தாலும், "மாழை" என்பதன் பொருளும் அப்பதத்தின் மூலம் (etymology) பற்றியும் அறிய விழைகின்றேன்! -நரசிம்மவர்மன்10 06:36, 18 செப்டெம்பர் 2007 (UTC)
இக்கட்டுரையில்,
-நரசிம்மவர்மன்10 10:41, 19 செப்டெம்பர் 2007 (UTC)
விலக்கம் -> வீச்சு/மையம் -> நடுவிலிருந்துதங்களின் கருத்துக்களை ஏற்று அவற்றை செயலாக்கியும் விட்டேன். "மையவிலக்கம்" எனப்பெயரிட முதலில் தயக்கம் இருந்தபோதிலும் "வட்டவிலகல்" கட்டுரை இருப்பதனால் குழப்பம் நேர வாய்ப்பில்லை எனவென்னினேன், பொறியியலில் இச்சொல் ஆளப்படுவதை உணர்த்தியமைக்கு நன்றி! -நரசிம்மவர்மன்10 05:51, 20 செப்டெம்பர் 2007 (UTC) வார்ப்புரு சரி செய்தாயிற்றுசரி செய்தாயிற்று வேறு பிரச்சினைகள் வருகிறதா என கவனித்து சொல்லவும். (ஒக்டோபர் 30 வரை சீனா செல்வதால் விக்கிபீடியா பக்கம் வர வாய்ப்பிலை.) நீங்கள் உருவாக்கிய இரண்டு வார்ப்புருக்களை ஏற்கனவே வேறு பெயரில் இருக்கும் இரண்டு வார்புருக்களுக்கு வழிமாற்றியுள்ளேன். அவை கீழே உள்ளன: இவற்றில் நீங்கள் கட்டுரையில் பயன்படுத்திய இந்தோ-ஐரோப்பியம் என்பதை நான் வார்ப்புருவில் இணைத்ததைப் போல 1 2 மேலதிக எழுத்து முறைகளை "| XXXXX " என்றவாறு பொருத்தமான வரியில் இணைத்துக் கொள்ளலாம்.--டெரன்ஸ் \பேச்சு 15:50, 20 செப்டெம்பர் 2007 (UTC) தவறுதலாய் குறிப்பிட்டுவிட்டேன்!செல்வா, நான் Meridian என்பதற்க்கு உச்சிவட்டம் (இப்பொழுது முதல்நெடுவரையென மாற்றிவிட்டேன் )என்பதையே பயன்படுத்தி யிருந்தேன், Equator என்பதற்க்குதான் நடுவரை எனக்கொண்டேன், ஆனால் கலைச்சொல்-ஆங்கில நிகரி எனவட்டவனைத் தருகையில் தவறுதலாய் குறிப்பிட்டுவிட்டேன்!
தனிமங்களின் தகவற்சட்டங்கள்செல்வா, தனிமங்களின் தகவல்கள் அடங்கிய தகவற்சட்டங்கள் சில தனித்தனி வார்ப்புருக்களாக உள்ளன. அவை கட்டுரைப் பக்கங்களில் இருப்பதுவே கூடுதற் பொருத்தமானதாகத் தோன்றுகிறது. அவற்றை நகர்த்துவதில் உங்களுக்கு ஆட்சேபணை உண்டா? --கோபி 06:35, 24 செப்டெம்பர் 2007 (UTC)
செல்வா, பைட் அளவு சிறிதாக உள்ளதென்பதற்காக நான் வார்ப்புருக்களை இணைக்கக் கேட்கவில்லை. ஒரு கட்டுரையில் மாற்றம் செய்ய இன்னொரு பக்கத்துக்குச் (வார்ப்புருவுக்கு) செல்ல வேண்டியிருப்பது சாதாரண கட்டுரைப் பக்கங்களுக்குப் பொருத்தமில்லை போல இருக்கிறது. வார்ப்புருக்களின் பயன்பாடு தொடர்பில் எனக்குத் தெளிவில்லை. --கோபி 13:00, 24 செப்டெம்பர் 2007 (UTC)
சற்று தெளிவிக்கவும்!சுழற்சிக் காலம் என்ற இக்கட்டுரையில், leap என்பதற்க்கு "எச்சம்" எனப் பயன்படுத்தியுள்ளேன் (leap year -> எச்ச வருடம்), அது பொருத்தமா? "எச்சம் பெற்ற" (leap year -> எச்சம்பெற்ற வருடம்)என்றுக் கொள்ளலாமா? தங்கள் கருத்துக்களை பகிரவும்! -நரசிம்மவர்மன்10 07:44, 24 செப்டெம்பர் 2007 (UTC)
Moment: செந்தமிழ் நிகரி?செல்வ, எக்காரணத்தினாலோ யான் இதுவரை Moment மற்றும் Momentum இவற்றிர்க்கிடையிலான வெறுபாட்டை உணராமல் இரண்டிற்க்கும் "உந்தம்" என்ற பதத்தையே வழங்கி வந்துள்ளேன்! Moment of inertia என்பதற்க்கு "நிலைமாறு உந்தம்" எனக்கொண்டேன், இஃது தவறு என்று உணர்ந்தேன். Momentum என்பதற்க்கு உந்தம் எனவழங்குவதைப் போல் Moment (Moment of a force) என்பதர்க்கு விசையின் வினை (அல்லது அதையொத்த ஒரு பதம், அதை தாங்கள்தான் வழங்க வேண்டும்!) எனக்கொள்ளலாமா? மேலும், Moment of inertia என்பதற்க்கு "நிலைமாறா வினை" அல்லது "சுழற்சிமாறா வினை" என்றோ, கோணத் திணிவு (இஃது கருத்துருவில் சரியென்றாலும், வழக்கில் பொருந்துமா என்று தெரியவில்லை!) என்றோ கொள்ளலாமா? -நரசிம்மவர்மன்10 05:31, 25 செப்டெம்பர் 2007 (UTC)
Moment of Inertia என்பதைத் தமிழில் பலவாறு கூறலாம். (ஆனால் Moment என்னும் கருத்து பொதுமையானது, கணிதத்தில் பல ஆழமான கருத்துக்களையும் சுட்டுவது. இங்கு இருப்பது எளிமையான ஒரு கருத்து) விளக்கத்தோடு சொல் பதிந்தால்தான் பொருந்துமா பொருந்தாதா என்பதும் தெளிவாகும். கருத்தளவிலே எப்படித் "திணிவு" அல்லது "நிறை" (எடை அல்ல, நிறை) என்பது ஒரு பொருளுக்குத் தரப்படும் ஒரு குறிப்பிட்ட விசைக்கு அப்பொருள் பெறும் முடுக்கத்தை கட்டுறுத்தும் ஒரு அடிப்படையான பொருளின் பண்போ (F = m a), அதே போல ஒரு பொருள் சுற்றிக்கொண்டிருக்கும் பொழுது, ஒரு பொருளுக்குத் தரப்படும் ஒரு குறிப்பிட்ட முறுக்குவிசை (torque)க்கு அப்பொருள் பெறும் கோண முடுக்கத்தைக் கட்டுறுத்தும் அடிப்படையான பண்பு சுழல்நிறை எனலாம் (அதாவது, முறுக்கு விசை = சுழல்நிறை x கோணமுடுக்கம்). நில் => நிற்றல் => நிறை. இங்கு "தங்குதல்" "இருத்தல்" என்னும் பொருளும் கொள்ளும். இருப்பு = நிலை (நிலை பெற்று இருத்தல்) என்னும் பொருள் இருப்பதையும் உணர வேண்டும். இது தவிர, இழுவல், இருத்தல். வல்லின று -> இறுகுதல் (இறுப்ப = கிடக்க, இறுக்க = தங்க, இறுகுதல் = உறைதல்), உறைதல் முதலான சொற்கள் வழியும் பல சொற்கள் ஆக்கலாம். "திணிவு" என்னும் சொல் இங்கு பொருந்துவது கடினம். இழு என்றால் பின்வாங்கு, இழுகுணி என்றால் சோம்பேறி (இதுதான் inertia), இழுகுதல் என்றால் தாமதித்தல். எனவே சுழலிழுவை, சுழலிழுக்கம், சுழலிழுவம் சுழலிழுகுணி (="inertia for angular motion") என்றும் கூறலாம். --செல்வா 03:47, 26 செப்டெம்பர் 2007 (UTC) moment of inertia, moment மற்றும் பல இயல்பியல் கலைச்சொற்களுக்கும் ஏற்கனவே தமிழ் இணையப் பல்கலை அகரமுதலியில் நல்ல தமிழ்ச் சொற்கள் தரப்பட்டுள்ளன. இவை ஏற்கனவே தமிழ் அறிவியில் பாடநூல்களில் உள்ள சொற்கள். தயவு செய்து அவற்றுக்கு முன்னுரிமை கொடுத்துப் பயன்படுத்தலாம். மாணவர்கள் தமிழ் விக்கி கட்டுரைகளைப் புரிந்து கொள்ள இதுவே இலகுவான வழி. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள சொல் வட சொல்லாகவோ மிகவும் தவறான பொருள் தருவதாக இருந்தாலோ மட்டுமே புது சொல் ஆக்கலாம். நற்கீரன், தமிழகத்திலும் இளங்கலை அறிவியல் வரை முழுக்கத் தமிழ் வழிக் கல்வி உண்டு. முதுகலையில் ஆங்கிலத்தில் தேர்வுகள் அமையும்போது கூட மாணவர்களின் புரிதல் பெரிதும் தமிழ் வழியே தான் இருக்கிறது. --Ravishankar 10:56, 26 செப்டெம்பர் 2007 (UTC) மறுமொழிபாடநூல்களில் இருக்கும் சொற்களையும், ஏற்கனவே தரம் செய்யப்பட்ட சொற்களையும் எடுத்தாள்வது நல்லது, உடன்படுகின்றேன். ஆனால், பல சொற்கள் (பொருள்) தவறாகவும், முன்னுக்குப் பின் முரணாகவும் உள்ளன. மேலும், வளர்ந்துவரும் அறிவியலில், புது சொல்லாட்சிக்கள், புதிய கோணத்தில் பார்வைகள் எழுகின்றன. இவற்றையெல்லாம் உறைந்து போன சொற்பட்டியல்கள், முறைப்படி அலசி ஆராய்தமைக்காத பட்டியல்கள், பல-தொடர்பான-கருத்துக்களுக்கு ஏற்ப முரண் இயைபு பார்த்தமைக்காத பட்டியல்கள் பயன் தராது. இதில் உண்மையான பல இடர்ப்பாடுகள் உள்ளன. பொதுச்சீர்மை வேண்டும் என்று மன்றாடுபவர்களில் நானும் ஒருவன், ஆனால் அதனைக் காக்கவேண்டியவர்கள், போற்ற வேண்டியவர்கள், எடுத்து வளர்க்க வேண்டியவர்கள் நாம் அறிய செயல்படாமல் இருப்பது வருந்தத்தக்கது. ஏன் இணைய பல்கலையில் இருப்பவர்கள் இங்கு வந்து உதவலாகாது? ஏன் பலதுறை பல்கலை ஆசிரியர்களும்,கல்வியாளர்களும் வந்து இங்கு சிறிதளவாவது பங்கு கொள்ளலாகாது? பொது கருத்தாடல் சற்று நி்ற்கட்டும். Moment of Inertia என்பதற்கு TVU தரும் சொற்கள்: சடத்துவ திருப்புத்திறன் (வே.பொறி, மின்.பொறி, இயற்.,), சடத்துவ திருப்புமை (வேதியியல்), நிலைமத் திருப்புத்திறன்,(கணிதம்), உறழ்மை திருப்புமை (இயற்., இயங்கியல் பொறி.) பிறகு Moment என்பதற்கு திருப்புத் திறன் திருப்பு விசை, திருப்புமை, விலக்களவு ஆகிய சொற்கள் தரப்பட்டுள்ளன. "சடத்துவம்" என்னும் சொல்லாட்சி, இலங்கை வழக்காக இருக்கும் என்று நினைக்கிறேன். இச்சொற்களில் திறன் என்பது பொருந்துமா என்று கேட்கவேண்டும் (யாரிடம்??!). அதே பட்டியலில் efficiency என்பதற்கு திறன் என்றும், வினைத்திறன், செயல்திறன் என்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பட்டியல்கள், அகராதிகள் எல்லாம், போதிய அளவு அலசப்படாமலும், தக்காரைக் கொண்டு முறைசெய்து, செப்பம் பார்க்கப்படாமலும், இங்கொன்றும் அங்கொன்றுமாக எடுக்கப்பட்டும் (பொறுக்கப்படாமல் - பொறுக்குதல் என்பது தேர்ந்து எடுத்தல்) ஆக்கப்பட்டதாகத்தான் தோன்றுகின்றது. இருப்பதைக் குறைகூற விரும்பவில்லை, ஆனால் நம் தேவையை நாம் நன்கு உணரவேண்டும். பொதுவாக சொற்களைத் தனித்தனியாக ஒருபோதும் மொழிபெயர்க்கவோ, புதிதாக ஆக்கவோ கூடவே கூடாது. கருத்துச் சூழலில், அல்லது சிறப்பாக பொருள் தரும் இயல்பான சொற்றொடர்களில் அமைத்தே ஆளத்தொடங்க வேண்டும். செயற்கையாக சொற்றொடர்களில் அமைத்துக் கூறுவதும் தவறு. இவை அனைத்தும் என் பட்டறிவின் பயனாய் கூறும் என் தனிப்ப்ட்ட கருத்துக்கள். பகிர்வதே என் நோக்கம். Moment என்பதற்கு திருப்புமை என்பது பல இடங்களில் பொருந்தும். "சடத்துவம்" என்பது inertia என்பதின் நேரடி மொழிபெயர்ப்பு (வடமொழி, ஜடம், ஜடத்துவம்) ஆனால் கருத்தளவில் பொருந்தாது. சடத்துவம் என்பதற்கு மாறாக "நிலைம" என்று சொல்லலாம், அதாவது நிலைகொண்டிருக்கும் திருப்புமை என்பது பொருள் பொருந்துவது. Moment of Inertia என்பதற்கு "நிலைம திருப்புமை" என்பது பொருந்தும். ஆனால் அது திரும்பும், சுழலும் வினையில் பொருண்மைக்கு (நிறை, திணிவு, mass) ஈடான ஒன்று என்பதை உணர்த்தவில்லை (அதனால் தவறு இல்லை). --செல்வா 14:35, 26 செப்டெம்பர் 2007 (UTC) செல்வா, உங்கள் மறுமொழியை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். இணையப் பல்கலை பட்டியலில் போதாமைகள், பிழைகள் உள்ளனவே. அவற்றை உருவாக்கியவர்கள், அறிஞர்கள் விக்கிபீடியாவுக்கு வர வேண்டும் என்று எதிர்ப்பார்க்கும் நிலை தற்போது இல்லை. தற்போதைய நிலையில் தமிழ் விக்கிபீடியாவில் எடுக்கப்படும் முயற்சிகள் குறித்த அறிவே அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம். இல்லை தெரிந்தும் நாம் just another website என்று பார்க்கப்படலாம். வருங்காலத்தில் அந்த அளவு தமிழ் விக்கிபீடியா வலு மிக்கதாக வளர்ந்தால் ஒரு வேளை வரலாம். இல்லை, தனித்தோ அரசு ஊதியம், கட்டளையின் அடிப்படையிலோ மட்டும் அவர்கள் செயல்பட விரும்பலாம். தற்போதையய என் கருத்துக்கான பின்புலம்: ஒரு வேளை தமிழ் இணையப் பல்கலையில் நீங்கள் உட்பட அனைவரும் ஏற்றுக் கொள்ளும் சொல் இருந்தும் கூட அறியாமையின் காரணமாகப் புதுச்சொல்லை விக்கிபீடியர் எவரும் உருவாக்கி விடக்கூடாதே என்பதற்காகத் தான். inertiaவுக்கு நீங்கள் பரிந்துரைப்பது போல் இன்னும் சிறந்த சொல் இருக்கும் பட்சத்தில் தயவு செய்து இக்குறிப்புகளைப் பேச்சுப் பக்கத்தில் தாருங்கள். ஒவ்வொரு சொல்லுக்கும் இப்படி செய்வது சிரமமாக இருக்கலாம். ஆனால், பழைய சொல் மூலம் தேடுபவர்கள், இச்சொல்லின் சிறப்பு அறிய விரும்புபவர்களுக்கு உதவும் ஆவணப்படுத்தலாக இருக்கும். சிறந்த சொற்களைக் கையாள வேண்டும் என்ற நிலைப்பாட்டை நான் ஆதரிக்கிறேன். அதேவேளை, ஏற்கனவே பழைய சொற்களில் படித்து வரும் மாணவர்களுக்குப் புரிய வேண்டு்மே என்ற கவலையையும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.--Ravishankar 15:20, 26 செப்டெம்பர் 2007 (UTC) TamilVuவில் Torque, Torsion ஆகியச் சொற்களுக்குக் ஒரே சொல்லான "முறுக்கம்/முறுக்கல்/முறுக்கு" கொடுத்துள்ளனர். Torqueற்கு இச்சொல் பொறுந்தாது. Torque என்பதற்கு "Moment of Force" என்பதே வரையறு. ஆகையால் Torqueற்கு "விசைத்திருப்பம்" என்பதே பொறுத்தம். Torsion/முறுக்கம் என்பது Torque/விசைத்திருப்பத்தால் ஏற்படும் உருக்குலைவு. அது ஒரு விளைவு. தமிழ் வழி கல்வி மாணவர்கள் இப்படிப்பட்ட முரணான சொற்கள் கொண்ட பாடநூல்களை படித்துவிட்டு அவர்கள் கதி என்னவென்று யோசிக்க வேண்டும். இப்போது உள்ள கலைஞரரசுக்கு தமிழ் மீது சற்றும் அக்கரை இல்லை. தமிழக உள்நாட்டுப் பறப்பகங்களில் இப்போது தமிழே காணோம். இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டும் உண்டு. இவர்கள் இதற்கே சற்றும் எதிர்ப்பு தெரிவிக்காத இருக்கும் போது, தமிழ் கலைச்சொல் தரப்படுத்தல் போன்ற தமிழ் வளர்ப்புச் செயல்களில் இவர்களை நம்பிக்கை வைக்கக்கூடாது. தமிழ் கலைச்சொற்கள் தரமாக்கப்பட வேண்டும் என்கிற பரிந்துரை நீண்ட நாள் காலமாக உள்ளது. அது தனியார் முனைவால் தான் நடை பெற இயலும். இதன் பொருட்டு, www.geocities.com/tamildictionary/physics போன்ற அகராதிகள் ஒரு துவக்கம் தான். - Raj / thozhilnutpam.com
பொறுத்தருளுங்கள்!செல்வ, ரவி, தங்களின் கருத்துகளுக்கு முதற்க்கண் நன்றி. செல்வாவின் கருத்துகளை ஏற்பதோடல்லாமல், அவர் அதை பகர்வதர்க்கு முன்னமே என் நிலைபாடும் அதான். விக்கிபீடியா எந்த ஒரு தமிழ்ச்சார் ஆக்க குழுவிற்க்கும் சளைத்தது அல்ல. சொல்லப்போனால், அரசியல் மற்றும் பிற சார்புகள் பற்றி தமிழ்த் "தொன்டாற்றும்" இயக்கங்களை விட, தமிழ்நாட்டு தமிழர் மட்டுமின்றி அனைத்து ("த.நா" தமிழரை விட "இல" தமிழர் இங்கே அதிகம் என்பது தாங்கள் அறியாததல்ல!) தமிழரும் பங்களிக்கும் த.வி. ஓர் உண்மையான தமிழ் இயக்கம். உழுதுண்டு வாழ்வோராய் நாம் முன்செல்வோம் மற்றவர் தொழுதுண்டு பின் தொடரட்டும்! ஆயினும், தோழர் ரவியின் கவலை நியாயம்தான்! இலைமறை காயாய் சில (பல?) நல்ல சொற்கள் த.இ.ப. போன்றவற்றிலும் இருக்கத்தான் இருக்கும். அவற்றை அறவே ஒதுக்குதல் மடமை. இங்கே நான் செய்யும் பிழையும் அஃதே! த.இ.ப. என் உலவியில் சரியாய் படிக்கபடாததால் அதனை நான் ஒப்புவதில்லை! மற்றபடி, அதனை ஒப்பக் கூடவேகூடாது என்ற பிடிவாதம் எதுவும் இல்லை! உலவியில் உள்ள பிரச்சனை தீரும்வரை த.வி-யில் பங்களிக்காமல் இருப்பதை விட, செய்ய முனைந்ததை செய்துவிட்டு பின்னர் (தவறோ அஃதில் மேலும் சிறப்பாய் செய்ய வாய்ப்போ இருப்பின்) திருத்திக்கொள்ளலாம் என்ற மனப்பாங்கில்தான் நான் பனியாற்றுகிறேன்! இதை பொறுத்தருளி, த.வி-க்கு சிறப்பாய் பங்களிக்க எனக்கு மேலும் உதவுமாறும் தங்களை கேட்டுக்கொள்கிறேன் :-) (செல்வாவுக்கு, தயைகூர்ந்து தாங்கள் (தங்கள் பேச்சு பக்கத்தில் நான் இடும்) என் கருத்துக்களுக்கு அளிக்கும் மறுமொழிகளை என் பேச்சு பக்கத்திலும் இடும் சிரமத்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள் :-) ) -நரசிம்மவர்மன்10 04:50, 1 அக்டோபர் 2007 (UTC)
தமிழ்நாட்டு பாட நூல்கள் இணையத்தில், இலவசமாக--Natkeeran 23:58, 26 செப்டெம்பர் 2007 (UTC) நன்றிசெல்வா, எனது பேச்சுப் பக்கத்தில் நீங்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு நன்றி. செய்ய வேண்டியதென்று உள்ளவை ஆயிரமாயிரம். பங்களிப்பதோ நாம் 10-15 பேர்தான். இப்போதுள்ள எல்லாக் குறுங்கட்டுரைகளும் ஓரளவேனும் விரிவாக்கப்படக் கூடியவை. சில நீங்கள் குறிப்பிட்டதுபோல நன்கு விரிவாகவும் எழுத வேண்டியவை. த.வி.யில் என் பங்களிப்பு முடிந்தவரை மற்றவர்கள் கவனிக்காதவற்றைக் கவனிப்பதாகவே இருந்துவருகிறது. கட்டுரை அதிகரிப்பு வேகம் போதியதாக இல்லாதபோது நிறையக் குறுங்கட்டுரைகள் எழுதினேன்; படிமங்களுக்கான உரிமங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியதைச் சுட்டிக் காட்டினேன்; தேவையற்ற வழிமாற்றிகளை நீக்கினேன்; மிகச்சிறு கட்டுரைகள், கலைக்களஞ்சியத்துக்குப் பொருத்தமற்றவற்றை நீக்கினேன். இந்த வரிசையில் இப்பொழுது குறுங்கட்டுரை விரிவாக்கம். நான் ஒருவரி என்ற காரணங்காட்டி பல கட்டுரைகளை நீக்கினேன். அந்தவகையில் குறுங்கட்டுரைகளை விரிவாக்குவதும் என்கடமையாகிறது. பைட்டு அளவுக்காக என்று அல்ல. ஒரு தலைப்பை சரியாக விளக்கும்போதே ஆயிரம் பைட்டுத் தாண்டிவிடுகிறது. பல குறுங்கட்டுரைகளில் தலைப்பை விளக்கும் பொதுவான அறிமுகங்கள், பிறவிக்கியிணைப்புக்கள் போன்றனகூட இல்லை. அவற்றை அடையாளங்கண்டு சற்றேனும் விரிவாக்கி வருகிறேன். அண்மைக்காலங்களில் உருவாகும்கட்டுரைகளில் 90% ஆனவை 2000 பைட்டு அளவைவிடப் பெரியவை. இது எல்லோருக்கும் மகிழ்ச்சியளிப்பதுதானே. முன்புபோல பங்களிக்க இப்பொழுது எனக்கு நேரம் கிடைப்பதில்லை என்பதற்காக வருந்துகிறேன். நன்றி. கோபி 14:24, 28 செப்டெம்பர் 2007 (UTC) தனிமங்கள்
--Natkeeran 22:20, 30 செப்டெம்பர் 2007 (UTC)
Wikipedia:சிறப்புக் கட்டுரைகள் நியமனம்--Natkeeran 01:09, 2 அக்டோபர் 2007 (UTC) தமிழ் 'பைட் அளவில் 50 ஆவது இடத்தில் (3 விக்கிகளுடன் பகிர்ந்து கொண்டு) உள்ளது
எண் மொழி 'பைட் (M) 1 en 2 de 3 ja 1700 4 fr 5 pl 6 it 7 es 8 ru 949 9 nl 835 10 pt 636 11 zh 446 12 sv 395 13 fi 342 14 he 331 15 no 277 16 cs 256 17 hu 254 18 sr 239 19 tr 219 20 ca 213 21 uk 213 22 bg 174 23 sk 171 24 eo 158 25 th 157 26 sl 153 27 ro 141 28 el 137 29 id 136 30 da 135 31 ar 126 32 vi 123 33 hr 108 34 ko 102 35 lt 102 36 et 78 37 fa 78 38 gl 77 39 vo 74 40 ms 66 41 bpy 63 42 lmo 60 43 ka 57 44 nn 54 45 new 51 46 sh 49 47 bs 48 48 is 43 49 ksh 43 50 ta 43 51 simple 41 52 lb 40 53 mk 39 54 bn 38 55 eu 35 56 br 32 57 sq 32 58 te 32 59 lv 29 60 af 27 61 ceb 27 62 io 27 63 la 26 64 ast 24 65 hi 24 66 an 23 67 nds 23 68 su 22 69 oc 21 70 cy 20 71 ur 20 72 az 19 மொழி"மனிதர்களின் கண்டுபிடிப்புகளிலேயே அற்புதமான கண்டுபிடிப்பு மொழி." உங்கள் அறிமுகம் நன்று. எனினும் இந்தக் கூற்று சற்று மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றுகின்றது. மீள்பரிசீலக்கவும். --Natkeeran 23:45, 5 அக்டோபர் 2007 (UTC) வாயில் எதிர் வலைவாயில்வலைவாயில் web portal என்பதற்கு ஏற்ற சொல். த.வி வெளியிலும் வழக்கத்தில் உள்ள சொல். எனவே அதைப் பயன்படுத்தலாமா? --Natkeeran 22:17, 6 அக்டோபர் 2007 (UTC)
நான் வலையில் பெற்ற தகவல்கள் சற்று முரண்படுகின்றன. எழுதுங்கள் பின்னர் பிற ஆதாரங்களோடு அலசி சரிபார்க்கலாம். நன்றி. --Natkeeran 14:01, 7 அக்டோபர் 2007 (UTC) சரி, செல்வா. நான் தகவல்களை நீக்கிவிடுகிறேன். இன்னுமொரு விடயம். நீங்கள் சுட்டிய நூலில் தரப்பட்ட விடயங்கள் சற்று பயம் தருகின்றது. இதன்படி தமிழ் எழுத்துக்களையும் இலக்கணத்தையும் அவர்களே முதலில் ஆக்கியது அல்லது சீரமைத்தது போன்றல்லவா தெரிகின்றது. --Natkeeran 14:16, 7 அக்டோபர் 2007 (UTC)
ஒரு முறை பாருங்கள். இதைப் பற்றி நிறைய சொல்லாம். இன்றும் Tamil Conference 2007 இது ஒரு சர்சையாக இருக்கின்றது. --Natkeeran 18:57, 7 அக்டோபர் 2007 (UTC) நான் சுட்ட முனைந்தது பார்வைகளின் வித்தியாசத்தையே. ஆங்கிலோ-சக்சன் தமிழியல், தமிழ் வழித் தமிழியல் என்று இரு முனைப்படுத்தி புலமையாளர்களின் பார்வைகள், தமிழியலில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் கருப்பொருள்கள், நோக்குகள் வேறுபடுத்தப்பட்டன. ஆங்கில கல்வியாளர்களிடம் தமிழியல் நோக்கி வித்தியாசமான அல்லது வேறுபட்ட பார்வை இருக்கும், அது இயல்பானதே. ஆனால் அது எப்பிடி வேறுபடுகின்றது, அந்த வேறுபாடு எப்படி எம்மை பாதிக்கின்றது, அவை எப்படி நம் மீதான எமது பார்வையை பாதிக்கின்றது போன்ற விடயங்களில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக ஆங்கிலோ-சக்சன் தமிழியல் ஆய்வாளர்கள் முக்கியப்படுத்தும் முனைகளின் நாமும் கவனம் செலுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுகின்றது. இதைப் பற்றி மேலும் அலச எனக்கு இத்துறையில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. இது ஒரு குறிப்புக்காக மட்டுமே. நன்றி.--Natkeeran 22:03, 7 அக்டோபர் 2007 (UTC)
--Natkeeran 16:07, 8 அக்டோபர் 2007 (UTC) தரமறிதல் முறைகள்செல்வா நீங்கள், கட்டுரைகளை தரப்படுத்த தொடங்கியிருப்பதுக் கண்டு மகிழ்ச்சி. நீங்கள் கையாழும் தரப்படுத்தல் முறையை விக்கியில் பதிவு செய்தால் ஏனையவருக்கும் இணங்கான வசதியாக இருக்கும். மேலும் புதிதாக வரும் பயனருக்கு கட்டுரைத் தரம் பற்றி தெரிந்துக்கொள்ள வசதியாக கட்டுரைப் பேச்சுப் பக்கத்தில் இணைப்பையும் கொடுக்க வேண்டும். இதனை ஒரு வார்புரு மூலம் செய்யலாம். வேண்டுமானால் ஒன்றை ஆக்கித் (ஆங்கில விக்கியில் இருந்து சுட்டுத்) தருகிறேன் :).--டெரன்ஸ் \பேச்சு 03:24, 12 அக்டோபர் 2007 (UTC)
தமிழ் வேதியியல் குறுப்புகள்மேலே குறிப்பிட்ட சித்தர் பாடல்களில் வேதியியல் குறிப்புகள் செறிந்து காணப்படுவதாக ஒரு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரைப் பற்றியும் தமிழர் வேதியியல் அல்லது அது தொடர்பான தேடல்கள் குறித்தும் ஒரு சிறு கட்டுரை வரைந்தால் நன்றாக இருக்கும் நன்றி. --Natkeeran 22:43, 14 அக்டோபர் 2007 (UTC) Końskowola - PolandCould you please write a stub http://ta.wikipedia.org/wiki/Ko%C5%84skowola - just a few sentences based on http://en.wikipedia.org/wiki/Ko%C5%84skowola ? Only 2-5 sentences enough. Please. P.S. If You do that, please put interwiki link into english version. 123owca321 16:42, 15 அக்டோபர் 2007 (UTC) தமிழ் டொமைன் பெயரீடுதாங்கள் ஆலமரத்தில் கருத்துக்களில் சில ஐயப்பாடுகள். நான் அலுவலகத்தில் உள்ள விண்டோஸ் எக்ஸ்பி சேவைப்ட்பொதி 2 உள்ள கணினியில் இண்டநெட் எக்ஸ்புளோளர் ஊடகப் பார்வையிட முயன்றபோது இயலவில்லை ஆயினும் பயர்பாக்ஸ் காட்டியது எனினும் முகவரியில் தமிழ் தெரியவில்லை (அதாவது முகவரியில் http://xn--zkc6cc5bi7f6e.xn--hlcj6aya9esc7a/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D) காட்டியது. நிற்க நீங்கள் எந்த இயங்குதளத்தில் (எடுத்துக்காட்டாக விஸ்டா, விண்டோஸ் எக்ஸ்பி) இருந்து (இயலுமென்றால் சேவைப்பொதி உட்பட) எந்தப்பதிப்பினைப் (இண்டநெட் எக்ஸ்புளோளர் 7 அல்லது 6) பாவிக்கின்றீர்கள் என்று குறிப்பிட்டால் உதவியாக இருக்கும். --Umapathy (உமாபதி) 08:02, 17 அக்டோபர் 2007 (UTC)
பங்களிப்பு தொடர்பாக - நன்றிதங்களின் அக்கறைக்கு மிகவும் நன்றி செல்வா! கூடிய விரைவில் சொந்தக் கணினி வாங்க எண்ணியுள்ளேன். அதன் பின் முழு வீச்சுடன் பங்களிக்க முடியும் என நம்புகிறேன். எனினும் விக்கி மாற்றங்களை அவதானித்துக் கொண்டே வருகிறேன்.--Sivakumar \பேச்சு 12:37, 18 அக்டோபர் 2007 (UTC) புத்த மதம்புத்த மதம் தொடர்பாக ஆங்கில விக்கீடியாவில் உள்ளது போல் ஒரு 'போர்ட்டல்' உருவாக்க ஆசைபடுகிறேன். மேலும் பௌத்தம் தொடர்பான கட்டுரைகளை உருவாக்க ஒரு 'ப்ராஜெக்டையும்' உருவாக்க எண்ணுகிறேன். தயவு செய்து எவ்வாறு இதை செயவது என்பது தெரியவில்லை. தயவு செய்து உதவவும். −முன்நிற்கும் கருத்து பயனர்:Vinodh.vinodh (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
தயவு செய்து தாங்கள் இயற்றிய புத்த மதம் தொடர்பான கட்டுரைகளின் விவரங்களை தரவும். நான் அவற்றை முழுமைப்படுத்துகிறேன். தங்களது உதவிக்கு நன்றி Vinodh.vinodh 11:50, 16 நவம்பர் 2007 (UTC)
பெயர் மாற்றம் நன்று. அத்துடன் தாங்கள் அவலோகிதருடைய தமிழ் தொடர்பை குறித்து எழுதினால் சிறப்பாக இருக்கும் இருக்கும் வினோத் 14:01, 17 நவம்பர் 2007 (UTC) பேச்சுப் பக்கத்தில் முனைவர் நா. கணேசனின் 15-பக்கக் கட்டுரை ஒன்றை குறிப்பிட்டுள்ளேன். பார்க்கவும். அவலோகிதர் வழிபாடு தமிழகத்தில் இருந்து பரவியதாக சிலர் நினைக்கின்றனர். பொதிய மலை தெக்கணமூர்த்தி , தட்சிணாமூர்த்தி, அவலோகிதராக புத்தமதத்தில் பரவியது என்பார்கள் சிலர். தமிழகம் பௌத்த மதத்தை ஒருகாலத்தில் வளர்த்தது உண்மை. *சென் மதத்தை நிறுவியவர் காஞ்சிபுரத்துத் தமிழர். --செல்வா 14:10, 17 நவம்பர் 2007 (UTC) அறிவேன். மஹாயான சித்தாந்தம் தோன்றியெதே தென்னிந்தியாவில் தானே. பௌத்தம் வளர்த்த தமிழகத்தில் பௌத்தம் காணக்கிடைக்காதது வருத்தத்திற்குரியது.மேலே கூறியது போல் அவலோதரின் தமிழ் தொடர்பையும் கட்டுரையுடன் சேர்க்கவும் வினோத் 14:15, 17 நவம்பர் 2007 (UTC) எனது செயலுக்கு மன்னிப்பு கோருகிறேன். உண்மையில் விக்கி மென்பொருளை பயன்படுத்துவதி எனக்கு அவ்வளவு அனுபவம் கிடையாது. அந்த குறுங்கட்டுரைகளை நிறைவு செய்ய வேண்டும் என்ற நோக்குடனே அவ்வாறு செய்தேன். தவறு நேர்ந்திருப்பீன் மீண்டும் மன்னித்தருள வேண்டுகிறேன் வினோத் 14:19, 17 நவம்பர் 2007 (UTC) செரித்தல்-சமிபாடுசெரித்தல், சமிபாடு இவற்றில் எது அதிகப் பொருத்தமானது? சமிபாட்டுத் தொகுதி என்ற பிரயோகம் ஈழத்துப் பாடநூல்களில் உள்ளது. செரித்தல் இயக்கம் என்பதற்குப் பதிலாகச் சமிபாட்டுத் தொகுதி என்பதைப் பயன்படுத்தலாமா? கோபி 04:59, 18 நவம்பர் 2007 (UTC)
இல்லை செல்வா. நான் அறிந்தவரையில் செரித்தல் என்னும் சொற்பயன்பாடு ஈழத் தமிழில் இல்லை. சமிபாடு, சமித்தல் (எழுதும்போது), செமிபாடு, செமித்தல் (பேச்சு வழக்கு) போன்ற சொற்களே பெரும்பாலும் பயன்படுகின்றன. Mayooranathan 17:15, 22 நவம்பர் 2007 (UTC) நேர் வேர்நேர்ச்சி தொடர்பில் உங்கள் விளக்கம் நன்று. இதையொத்த ஒரு உரையாடல் இங்கு நடைபெற்றது. இதில் நேருவதால்தான் நேரம் என்று குறித்தனரோ என்று நான் வியந்திருந்தேன். அது சரியா? இது சரியென்றால் அறிவியலாளர்களால் பெரிதும் போற்றப்படும் லெச்லீ லாம்போர்டின் லாஜிகல் கிளாக் என்ற கருத்துரு தமிழ் மொழியில் அடிப்படையிலேயே இருந்துள்ளது என்பது புலனாகும். :-) -- Sundar \பேச்சு 03:25, 22 நவம்பர் 2007 (UTC) நேரம், நேர் (நிகழ்) என்னும் சொற்களுக்கிடையிலான தொடர்புகள் பற்றி நானும் பல தடவைகளில் சிந்தித்திருக்கிறேன். சுந்தரின் கருத்துச் சரி என்றுதான் எனக்கும் படுகிறது. இது தவிர நேர்த்தி, நேர்மை, நேர் (straight) போன்ற சொற்களில் தொனிக்கும் linear என்னும் பொருளும் கூட இந்த நேரம் என்னும் கருத்துருவுடன் தொடர்பு உள்ளதுபோல் எனக்குத் தெரிகிறது. Mayooranathan 17:46, 22 நவம்பர் 2007 (UTC) சுந்தர், மயூரநாதன், இந்த நேரம் என்பது நேருவது, நிகழ்வது என்னும் அடிப்படையிலேயே உருவானது. அது லெஸ்லி லாம்போர்டின் கருத்துடன் ஒரு கோணத்தில் ஒத்ததே (அவர் போல் துல்லியமாய் நிறுவிக்கொண்டதாகக் கொள்ள இயலாதெனினும், அடிப்படைக் கருத்தில் ஒற்றுமை உண்டு. பார்க்கவும்: 'சூலை 1978 ஆம் ஆண்டு Communications of the ACM என்னும் ஆய்விதழில் லெஸ்லி லாம்போர்ட் எழுதிய "Time, Clocks, and the Ordering of Events in a Distributed System" என்னும் தலைப்பிட்ட கட்டுரையில் கூறுவது போல "However, we have taken the more pragmatic approach of only considering messages that actually are sent. We should be able to determine if a system performed correctly by knowing only those events which did occur, without knowing which events could have occurred.")) நேர்தல், நேர்வு, நேரல் என்னும் சொற்களுக்கு "உடன்பாடு" "எதிர்தல்" "கூடுதல் அல்லது கிட்டல், பொருந்துதல்" என்னும் பொருட்கள் நடுவானவை. "சம்பவித்தல்" என்பதும் குறிக்கப்படும் பொருள். எனவே நிகழ்தல். கூடுதல், கிட்டுதல், பொருந்துதல் என்பனவும் உடன்படுதல் என்னும் அடிக்கருத்தே. எதிர்தல் (=கிட்டுதல்). தமிழில் நேர்பு என்றால் ஒன்றிப்பு (ஒற்றுமை கொள்ளுதல், ஒன்றாதல்). இதுவும் "உடன்படுதல்" என்னும் அடிப்படை கொண்டதே. (நேர்பு என்பதை symmetry என்னும் சொல்லுக்கும் தமிழில் ஆளலாம் - இது பற்றி பின்னர் எழுதுகிறேன்). நேர் என்பதற்கு உண்மை என்று ஒரு பொருள் உண்டு - அதாவது மாறுபாடு இல்லாமல் "உள்ளதுடன்" ஒன்றி இருப்பதால் உண்மை. ஒற்றுமை இருப்பதால் உவமை என்னும் ஒரு பொருளும் உண்டு. இப்படியாக நேர் என்னும் சொல்லுக்குத் தமிழில் உள்ள 17 பொருட்களுக்கும் உள்ள அடிப்படை வேர்ப்பொருள் ஒற்றுமையை (நேர்மையைப்) உணரலாம். கழக அகராதி தரும் பொருள்களாவன: "உடன்பாடு, உண்மை, உவமை, ஒப்புரவு, கற்பு, சரி, செவ்வை, தகுதி, நீதி, நீளம், நுட்பம், நேரசை, நேரென்னேவல், பாதி, முன், மேல்வரிசை" பாதி என்னும் பொருள் எப்படி வந்ததென்றால், ஒரு சீரான பொருளை எப்படி வெட்டினால் இரு பகுதிகளும் ஒன்றாக இருக்கும் என்னும் கருத்தில் எழுந்தது. வட்டத்தை நடுவே வெட்டினால் இரு பகுதிகளும் ஒன்று போலவே இருப்பதால், பாதி என்னும் பொருள் பெற்றது. நேரம் என்பதற்கு பகலில் பாதி என்றும் ஒரு பொருள் உண்டு. அதில் இருந்தே, காலை நேரம், மாலை நேரம் என்னும் வழக்கும் வந்தது. காலை நேரம் என்பது morning time அல்ல, "first half of the the day". கால் என்றால் தொடக்கம் என்று பொருள். கால் கொள்ளுதல் என்றால் தொடங்குதல். நேர்க்கோடு (நேர்கோடு) என்பது முன் பகுதிக் கோட்டுடன் ஒன்றிய திசையிலேயே (ஒன்றிப்புடன்) விரியும் கோடு. நேர் என்பதற்கு நீளம் என்று ஒரு பொருள் உண்டு. இப் பொருள் நேரான திசையில் உள்ள இடைத் தொலைவு என்னும் பொருளும் கொள்ளும், வளைந்து உள்ள ஒரு வடிவின் நீளம் எனில், அந்த வளைந்த வடிவுடன் ஒன்றி இருந்து பெற்று, ஒரு நீட்ட அளவுடன் ஒப்பிட்டுப் பெற்றது என்பது பெறப்படும். நேர் என்பதை primary standard of comparison என்றும் கொள்ளலாம். நேர் என்னும் சொல்லின்வழி பிறந்த சொற்களையும், அது உணர்த்தும் பொருட்களையும், அச்சொற்கள் ஆளப்பெற்ற சொல்லாட்சிகளையும் விரித்தால் பெருகிவிடும். நேர்த்திக் குறிப்பு, நேர்சீர், நேர்த்திக்கடன், நேர்நிறை, நேர் சொல்லுதல் போன்ற சொற்களையும் அவற்றின் பொருட்களையும் கண்டு தேர்க. நேர்மை என்பது ஆங்கிலத்திலும் "straight forward" என்று குறிப்பிடப்படுவதையும் நோக்குக. நேர், நேர்த்தி, நேர்மை, நேர்ச்சி, நேர்வு, நேரல், நேர்தல், நேர்பு என பல சொற்கள் உள்ளன.--செல்வா 03:27, 26 நவம்பர் 2007 (UTC)
செல்வா, பௌத்தம் சார்ந்த கட்டுரைகளையும் ஒரு முறை முடிந்தால் Review செய்யுங்கள். பல புதுக்கட்டுரைகள் இயற்றப்பட்டுள்ளன. திட்டப்பக்கத்தை காணவும் வினோத் 15:17, 2 டிசம்பர் 2007 (UTC) மொழி மாற்றம்செல்வா, நீங்கள் மொழி மாற்றம் கட்டுரையில் செய்த திருத்தங்களுக்கு நன்றி. Mayooranathan 18:10, 2 டிசம்பர் 2007 (UTC)
Hi ProfProf Selva, you guys are just simply great, there's no doubt on that. Lemme make it clear, there was nothing wrong on ur replies or for that matter any one else's replies. You guys had your POV and I had mine. Seeing your(all the admins as a whole) Contributions in the Tamil Version of Wikipedia and me Virtually doing nothing around here compared to the volumes of your work, I felt as if I am provoking you guys with my petty comments and views. Frankly this is(ok, was) the thought I got in my mind. The Following Section is intended to be Comical:Not to be Taken Seriously Ok Ok Ok Ofcourse I also got a bit annoyed. Man, You just imagine my Plight, with virtually no one to support me, whatever I say you guys start a discussion it. Right from my Article on Manjusri to this Article on Kama Shastra. Its not fair u see ;-). May be you should start commenting when some more guys come around :-))(Atleasy I will have some support around) . Its just too boring to defend my postion again and again that too virtually on the same issue. So out of my Annoyance I changed the Article Topics(I should have not done that, Sorry I got too emotional a bit. May be you should ban me for a week or so. ), I suppose you dont mind reverting them back to their old forms. வினோத் 18:01, 8 டிசம்பர் 2007 (UTC)
EsotericEsoteric என்பதற்கு என்ன தமிழ்ச்சொல்லை நான் பயன்படுத்த வேண்டு. அந்தரங்கம் :-) என எனது ஆங்கில-தமிழ் அகராதி காட்டுகிறது. இதை பயன்படுத்த விருப்பமில்லை. இனி வஜ்ரயானம் சார்ந்த கட்டுரைகளை இயற்றப்போவதால் இந்தச் சொல் அடிக்கடி வரும். தயவு செய்து இதற்கு தகுந்த தமிழ்ச்சொல்லை தெரிவிக்கவும் வினோத் 17:44, 9 டிசம்பர் 2007 (UTC)
வரும் சில நாட்கள் பங்கு கொள்வது சற்று கடினம்முடிந்த பொழுது சிறிதளவாவது பங்கு கொள்கிறேன். வரும் 2-3 நாட்கள் பங்கு கொள்வது மிகவும் கடினமாக இருக்கும் என நினைக்கிறேன். --செல்வா 13:38, 10 டிசம்பர் 2007 (UTC) மயக்கத்தை தீர்க்க வேண்டுதல்செல்வா, நான் இது வரை இயற்றிய எல்லா கட்டுரைகளிலும் வடமொழிப்பெயர்களை தமிழாக்கும் போது 'அர்' விகுதியுடனே மொழிப்பெயர்த்தேன். இந்த முறை தவறோ என எனக்கு ஒரு மயக்கம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் மரபுப்படி 'அன்' விக்தி சேர்ப்பதே வழக்கம். எ.டு இந்திரன்,யமன்,சிவன்,வருணன்,பிரம்மன் போன்றவற்றைக் குறிப்பிடலாம். யாரும் இதை இந்திரர்,யமர்,சிவர்,வருணர் என பாவிப்பது இல்லை. எனவே போதிசத்துவர்களை புத்தர்களையும் யிதங்களையும் மொழிப்பெயர்க்கும் போது அர் விகுதி சேர்த்து மரபுப் பிழை செய்து விட்டேனோ என எனக்கு ஒரு எண்ணம் எழுந்துள்ளது. எனவே எனது இந்த ஐயத்தை தீர்க்குமாறு வேண்டுகிறேன் வினோத் 06:57, 16 டிசம்பர் 2007 (UTC)
பேச்சுப் பக்கத்தில் உரையாடல் கோணம்செல்வா, நீங்கள் சுட்டிக்காட்டியதை நானும் உணர்ந்தேன். பயனுள்ளதாகச் செய்யவெனப் பல பணிகள் இருக்க அவற்றைத் திசைதிருப்புவதாக அமைந்த உரையாடலென்பதால் முட்டாள்த்தனமென்று குறிப்பிட்டேன். ஆயினும் அதனை நான் எழுதியது அதிகப்பிரசங்கித்தனமானதும் பொருத்தமற்றதும்தான். நன்றி. கோபி 23:13, 17 டிசம்பர் 2007 (UTC) 2007 ஆண்டு அறிக்கையும் கருத்து வேண்டுதலும்செல்வா, உங்களின் தொடர்ச்சியான, ஆர்வலான, செழுமையான பங்களிப் த.வி ஒரு பெரிய பலம். அப்பணியை நீங்கள் இயலுமானவரை தொடர்ந்து நல்வீர்கள் என்பது அனைவரதும் எதிர்பார்ப்பு. இவ்வருட ஆண்டறிக்கையிலும் உங்கள் தற்சமயத்தில் த.வி. நோக்கிய உங்கள் பார்வையையும், ஒரு வேலைத்திட்ட பரிந்துரையையும் பகிர்ந்தால் நன்று. நன்றி. கடந்த இரு ஆண்டுகளாக ஆண்டு இறுதியில் அந்த ஆண்டுச் செயற்பாடுகள் நோக்கிய ஒரு அலசலைச் செய்து தமிழ் விக்கிபீடியாவை மேலும் மேம்படுத்த பருந்துரைகள் செய்வது வழக்கம். இவ்வருட ஆண்டு அறிக்கை கீழே: த.வி பற்றிய உங்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் அதன் பேச்சுப் பக்கத்தில் தந்தால் எமது பணிகளை ஒருங்கிணைக்கவும், மேம்படுத்தவும், மேலும் சிறப்பாக வளர்க்கவும் அவை உதவும். நன்றி. --Natkeeran 00:47, 20 டிசம்பர் 2007 (UTC) சங்கம் மருவிய காலம், களப்பிரர் காலம், பல்வர் காலம்0 - 500 ஆண்டுகள் வரை தமிழ் அறிஞர்கள் பற்றிய சில தகவல்களை சேகரித்து பகிர முடியுமா. இதைத் தொடர்ந்து வரும் பக்தி காலம், சோழர் காலம், அதன் பின் வரும் இஸ்லாமிய, ஐரோப்பிய பங்களிப்புகள், மறுமலர்ச்சி காலமாக கருதப்படக்கூடிய 1800 நூற்றாண்டு, வளர்ச்சிக்காலமாக கூறக்கூடிய 1900 நூற்றாண்டு ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள் கிடைக்கப்படுகின்றன. ஆனால் 0 - 500 என்ன நடந்தது...சற்று மயக்கமாகவே இருக்கின்றது. அறிய ஆவல். நன்றி. --Natkeeran 02:18, 22 டிசம்பர் 2007 (UTC)
பிணைப்புச் சங்கிலி--Natkeeran 02:50, 23 டிசம்பர் 2007 (UTC) நன்றிஉங்கள் பாராட்டுக்கு நன்றிகள். வெகு விரைவில் இங்கு எனது பணிகளை மீள தொடங்க முயற்சிக்கிறேன். --டெரன்ஸ் \பேச்சு 03:17, 25 டிசம்பர் 2007 (UTC) மொழிபெயர்ப்பு உதவி தேவைமதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களே,தங்கள் பாராட்டிற்கு நன்றி. மேலும் உங்களிடமிருந்து சில உதவி தேவை. ஐயா எனக்கு தமிழ் தட்டச்சு தெரியாது. பல ஆங்கில இணையதளங்களில் உள்ள ஹாசன் பற்றிய செய்திகளை சேகரித்த பின் நான் கூகுளின் இந்திய எழுத்து மாற்றியை பயன்படுத்தி இக்கட்டுரையை எழுதியுள்ளேன். தாங்கள் இக்கட்டுரையில்லுள்ள பிழைகளை திருத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறேன். Rnarendr 04:25, 2 ஜனவரி 2008 (UTC) உதவிசெல்வா, எனக்கு ஒரு ஐயம்(அப்பப்ப Doubt கேக்கறன்னு கோச்சிக்காதீங்க:-)). அருகன் என்பது அர்ஹதன் என்ற சொல்லின் தமிழ் வழக்கா ? அல்லது இரண்டும் வெவ்வேறு பொருளை குறித்த சொற்களா. அருகன் என்ற சொல்லாட்சி திடீரென்று நினைவுக்கு வந்தது (தமிழில் எப்போதோ அருக தேவனை குறித்த பாடலை படித்ததாக நினைவு. எனினும் இங்கு அருகதேவன் என்பது மகாவீரரை குறிக்கின்றது என கருதிகிறேன்). இரண்டு ஒலிப்பியல் முறையில் ஒற்றுமை உடையவனாக உள்ளன. என்வே இரண்டும் ஒரே சொல்லா என ஐயம் எழுந்தது. இரண்டு ஒரே சொல்லெனில் தானியங்கி மூலம் அர்ஹத என்பதை அருக என மாற்று விடுகிறேன் ஐம்பெருங்காப்பியங்களில் இரண்டு பௌத்தத்தை சார்ந்தவை என்ற நிலையில் பண்டைய பௌத்த தமிழ் இலக்கியங்களில் நிச்சயமாக பௌத்த சமய கலைச்சொற்கள் தமிழ் வடிவில் நிறைய இருக்கும். அவற்றை சுட்டிக்காட்டினால், கட்டுரைகளில் அவற்றை மாற்றிவிடலாம்.
வினோத் 06:10, 3 ஜனவரி 2008 (UTC)
காலநிலையா அல்லது வாநிலையா?வானிலை என்பதில் தினமும் மற்றம் இருக்கும் ஆனால் காலநிலையில் இவ்வாறு மற்றங்கள் எதுவும் ஏற்ப்படது. இன்னும் சொல்லப்பொனல் காலநிலையில்(Climate) பருவங்கல்(Seasons) அடங்கும், பருவங்களுக்கு (Seasons) ஏற்றவாரு வாநிலை (Weather) மாறும். அதனால் இக்கட்டுரைக்கு இந்தியாவின் காலநிலை என்ற தலைப்பே சரியாக அமையும். --Rnarendr 04:49, 4 ஜனவரி 2008 (UTC) మీకు నా హృదయ పూర్వ ధన్యవాదలుసెల్వాగారూ మీకు నా కృతజ్ఞతలు. ఎన్నో సారి మీతొ ఎంతో అతి ఉగ్రంగా మీ మాటలకు ఎదురుగా చర్చ చేసినా కూడా అవి అంత చూడకుండా నన్ను ఇంత ఎన్కరేజ్ చేసినందుకు చాలా సంతోషంగా ఉంది. నిజం చెప్పాలంటే, మొతటి సారి మంజుశ్రీ లేఖలో జరిగిన చర్చలో మీ ముందు నేను నేరుగా కనిపడితే నన్ను తన్నెస్తారో ఎంవో అని అనుకున్నాను :-). ఎందుకంటే మీ మాటలను బట్టి మీ వయసు 23-25 వరకు ఉంటుందని నేను అనుకున్నాను. తర్వాతే కోపి నా పేజ్లో చెప్పగానే మీరు ప్రఫస్సర్ అని ననకు తెలుసింది.(తర్వాతే మీ యూసర్ పేజిని చూసాను, అంత వరకు నేను చేడలేదు). మంజుశ్రీ చంచ జరిగినప్పుడు ఇక తమిళ వికిపీడియా వైపే రాకూడుదు అని అనుకున్నాను. రవి నన్ను ప్రశాంతం చెసిన తర్వాతే నా తప్పు నాకు తెలిసింది. మీకు ప్రఫసర్ అని తెలుసిన తర్వాత, రెండవ సారి కామ శాస్త్రం లేఖలో చర్చ జరిగినప్పుడు మీకు నేను అనావసరమైన కష్టాలు ఇస్తున్నానని అనుకున్నాను. రెండవ కామ శాస్త్ర చర్చలో నేను మీకు కష్టం ఇస్తున్నాని నేను అనుకుంటు, ఆ సారి కూడా తమిళ వికిపీడియా వైపు రావడానికి వీల్లేదని అనుకున్నాను. ఇవ నేను తప్పుగా నా కల్పన వల్ల అనుకున్నవి అని నాకు తర్వాతే ఆలోచన వచ్చింది.(సుందర్ జరిగిన చర్చను ఇందులో నేను చేర్చ లేదు వివరాలకు చూడండి ఇజనమి టాక్ పేజిని. :-) ఇది కూడా నేను పొరప్పాటపడి పిచ్చితనంగా తీసిన నిర్ణయం. ఈ సారి నేను ప్రశాంతం అయినందుకు కారణం కోపి. కోపి పాపం నాకోసమే ప్రత్యేకంగా జి-మెయిల్ టాక్ లో నాతో మాట్లాడి నన్ను ప్రశాంతం చేసారు.) ఏంవో మీతో ఈ మాటలు చెప్పాలని అనుకున్నాను. చెప్పాను. నా మీద ఏ రకమైన కోప పడకుండా, నెను చేసిన తప్పులన్ని క్షమించి నా పిచ్చి మాటలన్ను నిర్లక్ష్యం చేసందుకు నా దన్యవాదాలు. నేను మనసులో అనుకున్నది అట్లాగే ఏ విదమైన మార్పు లేకుండా మీతో చెప్పాలని అనుకున్నాను, అందుకె తెలుగులొ రాసాను. తప్పుగా అనుకొ వద్దు. మికు తెలుగు తెలుసు అని ముందు ఒక సారి ఎక్కడో చెప్పినట్టు నాకు గుర్తు. తిరిగి ఇంకో సారి మీకు నా హృదయ పూర్వ ధన్యవాదలు
வினோத் 18:18, 5 ஜனவரி 2008 (UTC)
மீண்டும் நானும் என் ஹ்ருதய பூர்வ தன்யவாதத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு தெலுங்கில் மறுமொழி இடத் தெரியாது, எனவே மன்னிக்கவும். --செல்வா 20:06, 5 ஜனவரி 2008 (UTC) நான் தெலுங்கில் எழுதியது உங்களுக்கு இடர்ப்பாடாக இருந்திருப்பின் வருந்துகிறேன். மனதார தோன்றியதை தோன்றிய விதமாகவே எழுத வேண்டும் என கருதியே அவ்வாறு எழுதினேன். தமிழில் எழுதினால் என்னுடைய எண்ணம் மொழிமாற்றத்துக்கு உள்ளாகும் என்பதால் நான் எழுதவில்லை. உங்களுக்கு தேவையில்லாமல் இடர்ப்பாடுகள் தந்தற்கு நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்
வினோத் 08:55, 6 ஜனவரி 2008 (UTC) வினோத், நீங்கள் தெலுங்கில் எழுதியது எனக்கு மகிழ்ச்சியே, ஒரு சிறிதும் வருத்தம் இல்லை! எனக்கு தெலுங்கு சரளமாக பேச, எழுத, புரிந்துகொள்ளப் படிக்கத் தெரியும் என்று நினைக்க வேண்டாம் என்று தெரிவிக்கவே நான் என் நிலைமையைக் கூறினேன். தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி ஓரளவிற்கு அறிமுகம் உண்டு (~60%), (சில நேரங்களில் அது 80% ஆகவும் இருக்கலாம்) ஆனால் சரளமாக பேச எழுத, படிக்க, புரிந்துகொள்ளத் தெரியாது. அதுவும் நான் தெலுங்கு ஓரளவிற்குப் பயின்றது 30 ஆண்டுகளுக்கு முன்னர் (ஆந்திராவில் அமலாபுரம் தாலுக்காவில் இருந்த அருள்திரு பாலயோகீசுவரரைக் காணச் செல்லும் முன் பயின்றது). நீங்கள் என்னிடம் உரையாடும்பொழுது தெலுங்கில் எழுத நினைத்தால் எழுதுங்கள், நான் புரிந்துகொண்டதை வைத்துக்கொண்டு தங்களுக்கு தமிழில் மறுமொழி இடுகிறேன். நான் தவறாகப் புரிந்து கொண்டு மறுமொழி தந்தால் தயங்காது திருத்துங்கள். --செல்வா 13:26, 6 ஜனவரி 2008 (UTC) இந்திய மொழி எழுத்துக்களைப் படிக்க இனியன் உதவலாம்--ரவி 17:27, 6 ஜனவரி 2008 (UTC) இந்தியக் காலநிலைநீங்கள் சொன்னதுபோல நான் இக்கட்டுரையை தொடருகிறேன். தயவுகூர்த்து நான் எழுதும் ஆங்கில வார்த்தைகளை அதற்கு இணையான தமிழ் வார்த்தைகளாக மாற்றி விடவும் --Rnarendr 02:49, 8 ஜனவரி 2008 (UTC) மேலும் கிழே குறிப்பிட்டுள்ளவை சரியாகுள்ளதா என்று பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் Alpine climate - ஆல்பைன் காலநிலை பரிந்துரைAlpine climate - ஆல்ப்மலய காலனிலையா வானிலையாஉங்கள் கருத்துக்களை பார்த்தேன், நானும் இங்குள்ள பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் புவியில் புத்தகங்களை புரட்டிப்பார்த்தேன். அதில் ஒருபுறம் காலநிளைக்கேர்றவாறு தட்பவெப்பநிலை மற்றும் வானில மாறும் என்றும் மற்றொருபுறம் தட்பவெப்பநிலை என்னும் சொல்லை காலநிலை என்ற சொல்லுக்கு பதிலாக பயன் படுத்தப்பட்டுள்ளது. எனக்கு தெரிந்த தமிழ் மற்றும் புவியில் ஆசிரியர்களிடம் விசாரித்ததில் என்னால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. When I see this topic in broad and generalised view I come to an conclusion that Temperature (தட்பவெப்பம்), Weather (வானிலை), Seasons (பருவ காலம்) are the phenomena under the main topic Climate (காலநிலை). We might need some help from our friends in Wiki to have more suggestion regarding this topic. --Rnarendr 03:54, 8 ஜனவரி 2008 (UTC)
ஐயா.. என்னை தவறாக நினைக்க வேண்டாம். இங்கு நான் நம்புகிறேன், நான் நம்பவில்லை என்ற கருத்திற்கே இடம் இல்லை.My main aim is to deliver a standrad article about Indian Climate in Tamil. எனக்கு தெரிந்த சில தமிழ் மற்றும் புவியியல் பேராசிரியர்களின் உதவியுடன் நான் இக்கட்டுரையை எழுதி வருகிறேன். நீங்கள் கூறுவதை போல நான் கூகிள் தேடலை நம்பியதில்லை. ஆங்கிலத்தைபோல தமிழிலும் ஒருசொல் பலபொருள் கொண்டுள்ளது. கிளிமடே என்பதற்கு தட்பவெப்பத்தை தவிர வேறு ஏதேனும் சொல்லுள்ளதா என்று கூறுங்களேன்--Rnarendr 11:55, 21 ஜனவரி 2008 (UTC) செல்வா Vanakam :)Eppidi sugam? I've been trying to figure out how to request help here. I would like to know if you could help me translate a version of two or three sentences of this article for the Tamil Wikipedia? The initial two or three sentences would be more than enough since a short stub-translation could later provide the basis for future development. Happy 2008! ;) -Angayarkarasi 04:52, 8 ஜனவரி 2008 (UTC) தமிழாக்கம்
என்பவற்றின் தமிழாக்கம் என்ன? --டெரன்ஸ் \பேச்சு 08:02, 8 ஜனவரி 2008 (UTC) தமிழ்எனக்கு ஒரு ஐயம், சமசுகிருதத்தின் தாக்கம் தமிழில் உள்ளதா? அல்லது ஆரியர்களின் வருகையால் சில எழுத்துக்கள் தமிழில் வந்ததா?--Rnarendr 12:09, 21 ஜனவரி 2008 (UTC) விக்சனரிசெல்வா, புரவுக்காடு போன்ற பலருக்கும் புதிய சொற்களை கட்டுரைகளில் ஆளும்போது, அச்சொற்களுக்கான விளக்கங்களை விக்சனரியில் சேர்த்து விட்டு கட்டுரையில் இருந்து தொடுப்பு தந்தால் உதவும் என்று கேட்டுக் கொள்கிறேன். --ரவி 11:08, 2 பெப்ரவரி 2008 (UTC)
No Image LicenseImage:Egret all sky gamma ray map from CGRO spacecraft.gifக்கு காப்புரிமை நிலை தெரிவிக்கப்படவில்லை![]() Image:Egret all sky gamma ray map from CGRO spacecraft.gifஐ பதிவேற்றம் செய்ததற்கு நன்றிகள். இருப்பினும் இந்த கோப்பின் விபரண பக்கத்தில் இதை கோப்பை இயற்றிவரை குறித்த தகுந்த காப்புரிமை வார்ப்புரு காணப்படவில்லை, எனவே இந்த கோப்பின் காப்புரிமை நிலைமை தெளிவற்றதாக உள்ளது. தாங்கள் இந்த கோப்பை இயற்றவில்லை எனில், தாங்கள் தகுந்த காப்புரிமை வார்ப்புருவை சேர்க்க வேண்டும். தாங்கள் ஏதேனும் வலைத்தளங்களில் இருந்து பெற்றிருப்பின், அந்த வலைத்தளத்தின் முகவரியோடு, வலைத்தளத்தின் பயன்பாட்டு அதிகாரத்தையும்(Terms of Use)ஐயும் சேர்த்து அளிக்க வேண்டும். ஒருவேளை, அந்த படத்தின் காப்புரிமை வேறு எவரிடமோ இருந்தால், அதற்குறிய தகுந்த வார்ப்புருவை சேர்த்து விடவும். எச்சரிக்கை, பெரும்பாலான வலைத்தளங்களில் இருந்து பெறப்படும் படமங்கள் காப்புரிமை கொண்டதாக இருக்கலாம். எனவே தகுந்த திறவுமூல அல்லது கட்டற்ற வலைத்தளங்களில் இருந்து படிமங்களை பதிவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்
Image:Moon gamma rays egret instrument cgro.jpgக்கு காப்புரிமை நிலை தெரிவிக்கப்படவில்லை![]() Image:Moon gamma rays egret instrument cgro.jpgஐ பதிவேற்றம் செய்ததற்கு நன்றிகள். இருப்பினும் இந்த கோப்பின் விபரண பக்கத்தில் இதை கோப்பை இயற்றிவரை குறித்த தகுந்த காப்புரிமை வார்ப்புரு காணப்படவில்லை, எனவே இந்த கோப்பின் காப்புரிமை நிலைமை தெளிவற்றதாக உள்ளது. தாங்கள் இந்த கோப்பை இயற்றவில்லை எனில், தாங்கள் தகுந்த காப்புரிமை வார்ப்புருவை சேர்க்க வேண்டும். தாங்கள் ஏதேனும் வலைத்தளங்களில் இருந்து பெற்றிருப்பின், அந்த வலைத்தளத்தின் முகவரியோடு, வலைத்தளத்தின் பயன்பாட்டு அதிகாரத்தையும்(Terms of Use)ஐயும் சேர்த்து அளிக்க வேண்டும். ஒருவேளை, அந்த படத்தின் காப்புரிமை வேறு எவரிடமோ இருந்தால், அதற்குறிய தகுந்த வார்ப்புருவை சேர்த்து விடவும். எச்சரிக்கை, பெரும்பாலான வலைத்தளங்களில் இருந்து பெறப்படும் படமங்கள் காப்புரிமை கொண்டதாக இருக்கலாம். எனவே தகுந்த திறவுமூல அல்லது கட்டற்ற வலைத்தளங்களில் இருந்து படிமங்களை பதிவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்
:படிமம்:Gnb.jpg இன் காப்புரிமை என்ன?![]() படிமம்:Gnb.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும். இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேவிகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 16:33, 18 பெப்ரவரி 2008 (UTC) உதவுகInformation Literacy என்பதைத் தகவற் பகுத்தறிவு எனத் தமிழில் பயன்படுத்தலாமா? Information Competency, Information Fluency போன்ற சொற்களாலும் Information Literacy குறிப்பிடப்படுவதுண்டு. நல்ல தமிழாக்கத்தைப் பரிந்துரைக்க வேண்டுகிறேன். கோபி 01:39, 1 மார்ச் 2008 (UTC)
:படிமம்:Heat Content of Zn(c,l,g).PNG இன் காப்புரிமை என்ன?![]() படிமம்:Heat Content of Zn(c,l,g).PNG படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும். இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 07:07, 3 மார்ச் 2008 (UTC)
கலைச்சொல்செல்வா, Native People, Native Plants போன்றவற்றில் வரும் Native என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல் என்ன? நான் சில இடங்களில் Native People என்பதற்குத் தொல்குடி என்று பயன்படுத்தியுள்ளேன். ஒரு மானிடவியல் நூலில் திணைக்குடி என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். திணை என்னும் சொல்லுக்கு place, region போன்ற பொருள்களும் சென்னைப் பல்கலைக்கழக அகராதியில் தரப்பட்டுள்ளன. மயூரநாதன் 12:06, 14 மார்ச் 2008 (UTC)
புதிய பகுதிபுதிய பகுதி - புதியப் பகுதி. இவற்றில் எது சரியானது? கோபி 04:15, 26 மார்ச் 2008 (UTC) புதிய பகுதி தான் சரி. தொடர்புடைய மீடியாவிக்கி பக்கத்தை மாற்றி இருக்கிறேன். புதியப் பகுதி என்று வந்தது மீடியாவிக்கித் தமிழாக்கத்தில் நேர்ந்த பிழையாக இருக்கலாம்--ரவி 12:57, 26 மார்ச் 2008 (UTC) படம் மொழிபெயர்ப்பு![]() செல்வா, வலதுபுறம் உள்ள படத்தை இன்க்குசுகேப்பு கருவிகொண்டு மொழிபெயர்த்து வருகிறேன். உங்கள் பரிந்துரைகளை தந்தால் உதவியாக இருக்கும். -- சுந்தர் \பேச்சு 15:19, 31 மார்ச் 2008 (UTC)
படத்தில் கொடுத்துள்ள பறவைகளின் அலகுகளுக்கான சொற்கள் பற்றி நீங்கள் என் பயனர் பக்கத்தில் ஒரு வேண்டுதல் விடுத்திருந்தீர்கள். அவற்றிற்கான ஈடு இணையான சொற்களை பரிந்துரைத்து கீழே பட்டியலிட்டிருக்கின்றேன். ஒரு சிறிது இங்கு (அல்லது சொல் தேர்வு பக்கத்தில்) அலசிய பின்னர் நீங்கள் இன்க்˘ச்கேப் ஐப் பயன்படுத்தி மாற்றிவிடுங்கள். பறவைகளின் உறுப்புகள் பற்றிச் சில சிறப்புச் சொற்கள் தமிழில் உண்டு. அவற்றில் ஏதேனும் இங்கு பயன்படக்கூடிய சொற்கள் பி. எல். சாமி அவர்களின் புத்தகத்தில் கொடுத்துள்ளதா என்று ஒரு பார்வை இடுகின்றேன். சற்று பொறுத்து இருங்கள். நன்றி. --செல்வா 16:46, 31 மார்ச் 2008 (UTC)
--செல்வா 16:46, 31 மார்ச் 2008 (UTC) பெரும்பாலான மொழிபெயர்ப்புக்கள் மிகவும் நன்றாக உள்ளன. ஆனால் filter feeding என்பதற்கு ஈடான பொருள் சேறு அளை என்பதில் கிடைப்பதாகத் தெரியவில்லை. மயூரநாதன் 19:32, 31 மார்ச் 2008 (UTC) நன்றி.
படத்தில் "ஒப்பளவு வரைவு இல்லை" என்னும் தொடரைக் கீழே இடப்புறமாக இடாமல் நடுவே இட்டுப், பின்னர் படத்தின் இட-வலப் பக்கங்களில் எழுத்துக்களைத்தாண்டி இருக்கும் வெற்றுப் பகுதிகளை நறுக்கி விட்டீர்கள் என்றால் படம் சற்று பெரிதாக எடுப்பாக (மூலப் படத்தில் உள்ளது போல) இருக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று நினைக்கிறேன்.--செல்வா 14:28, 2 ஏப்ரல் 2008 (UTC) இன்க்˘ச்கேப்'இன்க்˘ச்கேப்' ஒலிபெயர்ப்பு தொடர்பில் உங்கள் எண்ணங்களையொத்தே என்னுடையதும் உள்ளன. இந்த பிறைக்குறியை எப்படி உள்ளீடு செய்கிறீர்கள்? தொகுத்தல் பக்கத்தில் உள்ளீடுக்கான உதவிப்பகுதியில் (கீழே உள்ளது) இந்தக்குறியையும் இணைக்க வேண்டும். எ˘ச்.வி.'சி. கோப்புகளிலுள்ள உரைகளை மட்டும் மொழிபெயர்க்க எந்த ஒரு உரை தொகுப்பு மென்பொருளையும் பயன்படுத்தலாம். படிமத்திலுள்ள உரைகள் எ˘ச்.வி.'சி. கோப்புகளில் உரைகளாகவே சேமிக்கப்பட்டுள்ளதால் எளிதில் மொழிபெயர்க்க வசதி. விக்கிமீடியா பொதுவில் பரிந்துரைக்கிறார்கள். படிமங்கள் தேடுபொறிகளில் சிக்கவும் தானியங்கி முறையில் மொழிபெயர்க்கப்படவும் வழியுண்டு. ஒரு கொசுறான தகவல். அந்தப் பறவைப்படம் உட்பட ஆ.வியில் உள்ள எண்ணற்ற பறவை வரைபடங்கள் சியாமள் என்பவர் வரைந்தவை. விக்கிக்கு வெளியிலும் என் நண்பராகிவிட்டார். அவர்தான் என்னை மூங்கில் அணத்தான் கட்டுரையை எழுத்தத் தூண்டினார். -- சுந்தர் \பேச்சு 06:46, 1 ஏப்ரல் 2008 (UTC) சியாமள் பங்களிப்பை அறிந்தும், உங்கள் தனிச்சிறப்பான மூங்கில் அணத்தான் கட்டுரையைக் கண்டும் (முன்னரே பார்த்து மகிழ்ந்தேன்) மகிழ்ந்தேன். இந்த breve என்னும் ஒலித்திரிபுக் குறியை கூகுள் மின்மடற்குழுக்களிலும் இட இயலும். மைக்ரோ ˘சா'வ்ட் வோர்டு போன்ற பயன் மென்பொருட்களில் (மென்பொருள் என்பதை மென்பி எனலாம் - எளிதாக மாற்றி அமைக்க வல்லதால் ) யூனிக்கோடு குறியெண் என்ன என்று அறிந்தால் அந்த எண்ணை இட்டு பின்னர் Alt + x என்று அழுத்தினால் அந்தக் குறி தென்படும். பிரீவ் (breve) என்னும் நிலாவின் கலை (பிறை) போல் உள்ள குறியின் யூனிக்கோடு என் 0306 என்பதாகும். இங்கே பாருங்கள். மைக்ரோ ˘சா'வ்ட் தளத்தில் இப்படி அறியத் தருகிறார்கள் "If you know the character code, you can enter the code in your document and then press ALT+X to convert it into a character. For example, press 002A and then press ALT+X to produce *. The reverse also works. To display the Unicode character code for a character that is already in your document, place the insertion point directly after the character and press ALT+X." எனவே ஒரு குறியை படி எடுத்து இட்டபின் ஆல்ட் எக்˘ச் ஐ அழுத்தினால் (வோர்டு இல்) அதன் யூனிக்கோடு குறியெண் கிட்டும். எழுத்துரு உருவாக்க உதவும் பக்கம் பல்வேறு வகையான கணித மற்றும் பிற குறிகளுக்கான யூனிக்கோடு குறியெண்கள் நாளை வரை உடனே மறுமொழி இட இயலாது, மன்னிக்கவும். --செல்வா 15:20, 1 ஏப்ரல் 2008 (UTC) initialinitial என்பதை விலாசம் / முதல் எழுத்து / தலை எழுத்து என்றெல்லாம் பரவலாகப் பேச்சு வழக்கில் குறிப்பதாக நினைக்கிறேன். இவற்றில் பெருவழக்கு, வேறு வழக்குகள் உண்டா? பேச்சு வழக்கில் தலைப்பு எழுத்து என்று கூற மாட்டார்கள் தானே? அப்புறம், நீங்கள் அன்றாடம் வந்து பங்களித்து, வழிகாட்டி உதவுவது பெரும் ஊக்கம் அளிக்கிறது. உங்களைப் போல் துறைக்கு ஒரு வழிகாட்டி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?--ரவி 22:18, 14 ஏப்ரல் 2008 (UTC)
இந்த இடுகையில் தலை எழுத்து என்பது பேச்சு வழக்கில் உள்ளது பதிவு செய்யப்பட்டிருந்தது. எனவே தான் அதைப் பயன்படுத்தினேன். எனக்குத் தெரிந்து பேச்சு வழக்கில் உள்ள வேறொரு சொல் விலாசம் மட்டுமே. அது தமிழ் இல்லையோ என்பதால் விட்டு விட்டேன். --ரவி 09:35, 15 ஏப்ரல் 2008 (UTC)
ஓ..அந்தத் தளம் தற்காலிகமாக முடங்கி இருக்கிறது. அடுத்த வாரம் வரும். தலையெழுத்து என்றால் விதி என்று தான் நானும் அறிந்திருந்தேன். ஆனால், மக்கள் பேச்சு வழக்கில் இந்த சொல் இருப்பதாக அந்த இடுகை மூலம் அறிந்திருந்ததால் அதற்கு முன்னுரிமை தரலாமே என்று பார்த்தேன் --ரவி 13:38, 15 ஏப்ரல் 2008 (UTC) 3 சொற்கள் - பரிந்துரைகள் வேண்டும், நன்றி.
--Natkeeran 03:33, 16 ஏப்ரல் 2008 (UTC) நற்கீரன், Wikipedia:கலைச்சொல் ஒத்தாசை பக்கத்தில் தந்துள்ளேன். பாருங்கள். Fashion என்பது பற்றி ஏற்கனவே ஒரு முறை உரையாடி இருக்கிறோம். பாருங்கள் இங்கே --செல்வா 03:49, 16 ஏப்ரல் 2008 (UTC)
நன்றிசெல்வா, அந்த 977 என்ற தகவலுக்கு நன்றிகள். தங்களைப் போன்றவர்களின் ஊக்கம் ஒன்றே போதும். இன்னும் நிறைய எழுதலாம். இந்தத் தகவலை எங்கிருந்து பெற்றீர்கள் என்பதைத் தெரிவிப்பீர்களா?.--Kanags \பேச்சு 21:19, 16 ஏப்ரல் 2008 (UTC)
help...என்னுடைய புதிய கட்டுரையை விண்டோஸ்_7 சரி பார்த்து தமிழாக்கம் செய்து கொடுங்கள். ஐபோட் கட்டுரையை தமிழாக்கம் செய்ததால் உங்களிடம் கேட்கிறேன். நன்றி. Mugunth Kumar 01:35, 26 ஏப்ரல் 2008 (UTC) நூலகத் திட்டம்நீங்கள் நூலகத் திட்டம் பற்றி அறிவீர்கள். அதில் தற்போது ஏறத்தாழ 1600 நூற்கள் பதிவேற்றப்பட்டுவிட்டன. அடுத்த கட்ட செயற்திட்டமும் (+1000) தொடங்கி விட்டது. இந்த நூற்களை பரந்த வாசிப்பு அறிமுகப்படுத்தும் நோக்கில் ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அவ்வப்பொழுது சில இடுக்கைகள் (5-10 வரிகள்) எழுதி பங்களித்தால் நன்றாக இருக்கும். எ.கா நீங்கள் படித்த நூற்களின் அறிமுகங்கள் தரலாம். ஈழத்து இலக்கியம் பற்றியும் இடுக்கைகள் தரலாம். செல்வா, உங்களூக்கு நோரச் சிரமம் இருப்பது அறிந்ததே. உங்கள் நேரத்தை செறிவு மிக்க கட்டுரைகளை படைப்பதில் செலவழிப்பதே தகும். இருப்பினும் உங்கள் இலக்கிய சமூக ஆர்வங்கள் பரந்ததே... உங்களின் ஈழ இலக்கிய அறிமுகம் எவ்வளவு என்று தெரியாது. உங்களிடன் ஏற்கனவே தொடர்பான ஆக்கங்கள் இருந்தால், அல்லது ஆக்கினாலும் நாம் நிச்சியம் பதிவேம். நன்றி. --Natkeeran 16:32, 3 மே 2008 (UTC) பறவைப் பெயர்கள்பாராட்டுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி, செல்வா. பி. எல். சாமி அவர்களின் தொகுப்பைக் கட்டாயம் பதிவேற்றுங்கள். தியடோர் பாசுகரனின் இன்னும் பிறக்காத தலைமுறைக்காக (கட்டுரைத் தொகுதி), கானுறை வேங்கை (மொழிபெயர்ப்பு) மற்றும் ச.முகமது அலி அவர்களின் இயற்கை: செய்திகள் சிந்தனைகள் ஆகிய நூல்கள் மற்றும் பின்னவர் முனைப்பெடுத்து வெளியிட்டுவரும் காட்டுயிர் இதழ்களையும் வாங்கிப் படித்து வருகிறேன். தகுந்த இடங்களில் சான்றாகப் பயன்படுத்த எண்ணியுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 15:02, 10 மே 2008 (UTC) நிர்வாக அணுக்கம்நீங்கள் ஏன் நிர்வாக அணுக்கம் பெறக்கூடாது? பிழையான தொகுப்புகளை நீங்கள் முன்னிலைப்படுத்துவதைக் கவனித்திருக்கிறேன். இது போன்ற நிர்வாகப் பணிகளைச் செய்ய உதவும்--ரவி 15:43, 19 மே 2008 (UTC)
நன்றி செல்வா, ரவி முறைப்படி அறிவிப்பார் என நம்புகிறேன்.--Kanags \பேச்சு 02:10, 20 மே 2008 (UTC) செல்வா, உங்களுக்கு இருக்கும் நேரத் தட்டுப்பாட்டில், நிர்வாகி ஆவதாலேயே நீங்கள் கூடுதலாகச் சிலப் பணிகளைச் செய்து தர வேண்டும் என்று எதிர்ப்பார்க்கவில்லை. அடிக்கடி வந்து போகும் நம்பகமான பயனர் எவருக்கும் நிர்வாகி அணுக்கம் தரலாம் என்பதே என் நிலைப்பாடு. பயனர்களின் தேவையில்லாத தொகுப்புகளை முன்னிலைப்படுத்துதல் (நிர்வாகியானால் இதைச் செய்வது இலகு), கண்ணில் படும் தேவையற்ற பக்கங்களை அழித்தல் ஆகிய இரு இலகுவான வேலைகளைச் செய்யலாம். --ரவி 06:11, 20 மே 2008 (UTC) நன்றி. உங்கள் ஏற்பை இங்கு தெரிவிக்கவும். --ரவி 13:59, 20 மே 2008 (UTC) நிருவாகியாகப் பரிந்துரைத்து, முன்மொழிந்த ரவிக்கும், வாக்களித்து ஊட்டுக்கால்தந்த (ஆதரவுதந்த) அனைவருக்கும் என் நன்றிகள்.--செல்வா 14:56, 27 மே 2008 (UTC) சிவமணியன்செல்வா, , விக்கிபீடியாவிற்கு புதிது என்பதால் சில அமைவுகளை மாற்றி விட்டேன், சுட்டிகாட்டியமைக்கு நன்றி . --பயனர்:சிவமணியன் 13:24, 20 மே 2008 (UTC) உங்கள் நிருவாக அணுக்கம் தொடர்பில்செல்வா, உங்கள் நிருவாக அணுக்கத்திற்கான வாக்கெடுப்பில் நான் இட்டிருந்த கருத்தை நீங்கள் தவறாகக் கொண்டிருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். முதல் நபராக வழிமொழிய வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் தெளிவற்ற உரையை இட்டுவிட்டேன். மற்றபடி உங்கள் பொறுப்புணர்வின்மீது எனக்கு எள்முனையளவும் ஐயமில்லை. மெய்யாலுமே உங்கள் விடுபாட்டாண்மைக்கு நிருவாக அணுக்கம் இடையூறாகும் வாய்ப்பை எண்ணிக்கூட மெலிதாக அச்சப்பட்டேனேயொழிய வேறு எதுவுமில்லை. -- சுந்தர் \பேச்சு 02:45, 21 மே 2008 (UTC)
அழுத்தம்செல்வா, அழுத்தம் பற்றிய உங்களது பக்கப்பட்டை விளக்கம் மிகவும் எளிமையாகவும் நன்றாகவும் இருக்கிறது. நன்றி. அப்படியே, உங்களது நிருவாக அணுக்கத்திற்கும் வாழ்த்துக்கள். --இரா.செல்வராசு 00:03, 22 மே 2008 (UTC)
இரண்டாண்டுகள் நிறைவுஇன்றோடு நான் தமிழ் விக்கிப்பீடியாவில் சேர்ந்து இரண்டாண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. மூன்றாவது ஆண்டின் தொடக்கம். இதுகாறும் 507 கட்டுரைகள் என் பெயரிலும், மற்றும் ஐ.பி முகவரிகளில் ஏறத்தாழ 7-10 கட்டுரைகளும் தொடங்கி எழுதியுள்ளேன். சொல் பற்றிய உரையாடல்களில் ஏறத்தாழ 100 குறிப்புகளாவது சிறிதும் பெரிதுமாக எழுதியுள்ளேன். இவை தவிர பல கட்டுரைகளை விரிவு படுத்தியுள்ளேன். இன்றுவரை மொத்தம் 8124 தொகுப்புகள் செய்துள்ளேன். தமிழ் விக்கிப்பீடியா இன்னும் விரைவாகவும் செறிவாகவும், அழகாகவும், எடுப்பாகவும் வளரவேண்டும் என்பது என் அவா. பல நல்ல புதுப்பயனர்கள் சேர்ந்துள்ளார்கள். நாம் எல்லோருமாகச் சேர்ந்து, முன்பினும் விறுவிறுப்புடன் உழைத்தால் இன்னும் நன்றாக வளர்வோம். என்னால் இயன்ற அளவு நான் வரும் ஆண்டுகளில் உழைக்க இருக்கின்றேன். --செல்வா 04:15, 24 மே 2008 (UTC)
எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் செல்வா, விக்கிபீடியாவில் தங்களின் ஊக்கமான பயனுள்ள கருத்துக்கள் என்றும் பயனுள்ளவையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அண்மையில் நீங்கள் மின்தமிழ் மடலாடும் குழுவிற்கு தமிழ் விக்கிப்பீடியா பற்றிய தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்திருந்தீர்கள். அது பல புதிய பயனர்களை ஈர்த்திருக்கும் என்பதில் ஐயமில்லை. எல்லோரும் சேர்ந்து உழைப்போம். மீண்டும் வாழ்த்துக்கள்.--Kanags \பேச்சு 04:50, 24 மே 2008 (UTC)
அன்புள்ள செல்வராசு, கனகு, சுந்தர், உங்கள் அன்பான வாழ்த்துக்கும் ஊக்கத்திற்கும் நன்றி. விக்கிப்பீடியா உண்மையிலேயே ஓர் அற்புதமான களம். இப்படி நூறாயிரக்கணக்கில், மில்லியன் கணக்கில் அருமையான படங்களுடன், பொதுச்சொத்தாக அறிவுக் களஞ்சியமாக உருவாக்க அமைத்துத் தந்த விக்கி நிறுவனத்திற்கு முதலில் நன்றி சொல்லுதல் வேண்டும். தமிழர்களில் இன்னும் பெரிய அளவிலே (ஆயிரக்கணக்கானோர் ஏன் வரலாகாது?!) பலரும் வந்து உண்மையான நல்லாக்கங்கள் தர வேண்டும். இன்றில்லையெனினும், கட்டாயம் ஒருநாள் அண்மையிலோ, சேய்மையிலோ வந்து நல்லாக்கம் தருவார்கள் என்று திண்ணமாய் நம்புகின்றேன். இங்கிருக்கும் நாம், நம்மால் இயன்றவாறு திறமுடனும், சுறுசுறுப்புடன் மிக மிகப் பயன்தருமாறு பல அரிய செய்திகளைத் தக்க சான்றுகோள்களுடன் சேர்த்துக்கொண்டே வந்தோமானால், விளையும் பயன் மிகப் பெரிதாம். பின்னர் வருவோருக்கும் இவ்வாக்கம் உண்மையான ஓர் ஊக்கம் தருவதாக அமையும். சுந்தர், நீங்கள் கூறுவதைக் கேட்டு உண்மையிலேயே சிரித்துவிட்டேன்! ஆனால் நீங்கள் கூறுவதில் ஓர் அடிப்படை உண்மை உண்டு. யாரொருவருக்கும், பிறந்த குழைந்தையாயினும், 80-90 அகவை நிறம்பியவராயினும், ஊக்கம் என்பது ஆற்றல் புதுக்கும் மருந்து. அதே நேரத்தில் வள்ளுவர் கூறியது போல ஊக்கம் உடைமை உடைமை என்றார்போலே அழியா நல் தன்னூக்கம் பெற்றிருத்தல் வேண்டும், அல்லவா? பெருமை கண்டு செருக்காமலும், சிறுமை கண்டு குறுகாமலும் இடையறாது ஊக்கம் உடைமை, உள் உடைமை, வேண்டும். அதுவே உடைமை. இங்கே விக்கிப்பீட்யாவிலே நாம் எல்லோருமாகச் சேர்ந்து "கலக்கலாம்", சுந்தர் :) --செல்வா 13:04, 24 மே 2008 (UTC)
வாழ்த்துகள் செல்வா. கடந்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அரும்பங்களிப்புகள் தந்துள்ளீர்கள். பல வகையிலும் பலருக்கு முன்மாதிரிப் பங்களிப்பாளராக இருக்கிறீர்கள். உங்களைப் போன்ற ஒருவர் வேலை நெருகடிக்கு இடையிலும் எப்படி இவ்வளவு பங்களிக்க இயல்கிறது என்று என்றும் வியப்பதுண்டு. எதிராளி எவ்வளவு தான் கடுமையாகப் பேசினாலும் பொறுமை இழக்காது, நன்னோக்கில் விளக்கிக் கோரும் உங்கள் பண்பை நானும் பெற்றுக் கொள்ள வேண்டும் ! விக்கிப்பீடியாவில் பங்களிப்பாளர்களுக்குப் போதிய ஊக்க மொழிகள், பாராட்டுகள் இல்லை என்று வலைப்பதிவுகளில் சில சமயம் சுட்டப்படுவதுண்டு. அந்தக் குறையை நீங்கள் போக்கி வருகிறீர்கள். உங்களைப் போன்றவர்களிடம் இருந்து பதக்கம் பெறுவதே ஒரு மகிழ்ச்சி தான் (ஆயிரவர் பதக்கம் எல்லாம் என்று வாங்குவேன் எனத் தெரியாது :( 100, 200 என்று குட்டிப் பதக்கங்கள் செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன் :) ) நாங்களும் இனி புதிய பங்களிப்பாளர்களை நிறையவும் பழகியவர்களை அவ்வப்போதும் ஊக்கப்படுத்த நினைவு கொள்ள வேண்டும். பல இடங்களில் நீங்கள் பொறுமையாக விளக்கிய பின்னும் தொடர் கேள்விகள் இருந்தாலன்றி பதில் நன்றி, ஆமாம் என்று சொல்லாமல் அடுத்த உரையாடலுக்கு நகர்ந்து விடுகிறேன். பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன். இருக்கிற எல்லா நேரத்தையும் அனைவரும் முழுத் திறத்துடன் பயன்படுத்தவே இப்படி செய்கிறேன். இன்னும் பல ஆண்டுகள் நீங்கள் முழு வீச்சில் பங்களிக்க வேண்டும். விரைவில் உங்களுக்குக் கிடைக்கும் நிருவாக அணுக்கமும் அதற்கு உதவும் என்று நம்புகிறேன். மஉங்களைப் போல் பல செல்வாக்கள் தமிழுலகுக்கு கிடைக்க வேண்டும். நன்றி--ரவி 18:02, 24 மே 2008 (UTC)
500 கட்டுரைகளா !! போச்சு, சொக்கா..எனக்கில்லை :) இப்ப 245 தான் இருக்கு !! --ரவி 09:07, 25 மே 2008 (UTC)
NILGAIசெல்வா Nilgai க்கு தமிழில் என்ன பெயர் தெரியுமா? அதை பற்றிய கட்டுரையை தொடங்க விரும்புகிறேன். இவ்விலங்கு முற்காலத்தில் தமிழகத்தில் காணப்பட்டது, சமீபமாக தமிகத்தில் இருந்து அழித்தொழிக்கப்பட்டது. --கார்த்திக் 15:43, 25 மே 2008 (UTC) http://en.wikipedia.org/wiki/Nilgai
நன்றி செல்வா --கார்த்திக் 17:39, 25 மே 2008 (UTC) WikitravelInterested in Wikitravel? tamil il wikitravel ai mozhipeyarppoma? http://wikitravel.org/en/Main_Page Please help Mugunth Kumar 15:37, 29 மே 2008 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia