பயனர் பேச்சு:பா.ஜம்புலிங்கம்/தொகுப்பு 1வாருங்கள்!வாருங்கள், பா.ஜம்புலிங்கம், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்! உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள். தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்! நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும். பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
--✍ mohamed ijazz ☪® (பேச்சு) 08:10, 25 மே 2014 (UTC) விக்கிப்பீடியா கொள்கைகள்வணக்கம் ஜம்புலிங்கம், நீங்கள் விக்கிப்பீடியாவில் உங்களைப்பற்றிய கட்டுரையை உருவாக்கியுள்ளீர்கள். இது விக்கிப்பீடியா கொள்கைகளுக்கு எதிரானது. உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் கொடுக்கலாம். உங்கள் கட்டுரைய நீக்குவதற்காக உரையாடல் இங்கு நடக்கிறது. உங்கள் கருத்துகளை நீங்கள் பதியலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:11, 26 மே 2014 (UTC)
வணக்கம். புதிய முயற்சியில் ஊக்குவித்து கருத்துக்கள் கூறிய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. ஆய்வு தொடர்பான செய்தியை மேம்படுத்த புதுதில்லியில் உள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்திற்கு அளிக்கப்பட்ட அறிக்கையின் விவரத்தை அடிக்குறிப்பாக (மேற்படி அருங்காட்சியக பக்கத்திலிருந்து) இணைத்துள்ளேன். -பா.ஜம்புலிங்கம் வணக்கம், பெளத்தம் கட்டுரையில் தமிழரும் பெளத்தமும் பகுதியில் தங்களின் வலைப்பூவிற்கான இணைப்பைக் கொடுத்துள்ளீர்கள். தமிழ் விக்கியின் விதிகளின் படி தனது வலைப்பூவிற்கான இணைப்பை அதே பயனர் வழங்கக்கூடாது. எனவே அதை நீக்கியிருக்கேறேன். நன்றி. --ஆர்.பாலா (பேச்சு) 06:25, 3 சூன் 2014 (UTC) இனி கவனமாக இருப்பேன். தகவலுக்கு நன்றி. ஜம்புலிங்கம் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி வணக்கம், பா.ஜம்புலிங்கம்/தொகுப்பு 1! தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:
ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி. --✍ mohamed ijazz ☪ ® (பேச்சு) 07:39, 3 சூன் 2014 (UTC) கவனிக்கவும்வணக்கம் நண்பரே, பௌத்தம் குறித்து தாங்கள் விக்கியில் எழுத முனைந்தமைக்கு நன்றி .தாங்கள் முன்வந்தது போல தங்களின் நண்பர்களுக்கு ஆர்வம் இருப்பின் அவர்களையும் விக்கிக்கு அழைத்து வர வேண்டுகிறேன்.தாங்கள் கையெழுத்தினை பேச்சுப் பக்கத்தில் இடுவதற்கு --~~ ~ ~ ![]() என்ற குறியீட்டினை இனைதால் விக்கிப்பீடியா தங்களுடைய கையெழுத்தினை இணைத்துவிடும் காண்க விக்கிப்பீடியா:கையெழுத்து. உடன் தங்களுக்கு நேரமிருக்கும் பொழுது விக்கிப்பீடியா:உதவி பக்கத்திலுள்ள கட்டுரைகளை ஒரு முறை படித்துப்பாருங்கள், விக்கியில் மிக எளிமையாக பங்களிக்க இவை உதவும்--✍ mohamed ijazz ☪ ® (பேச்சு) 07:43, 3 சூன் 2014 (UTC) ஐராவதேஸ்வரர் கோயில் என்ற தலைப்பின்கீழ் அந்நூலைப் பற்றிய குறிப்பினைத் தந்து எனது வலைப்பூவில் வந்த விமர்சனத்தை இணைப்பாகத் தந்துள்ளேன். https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D. வலைப்பூ எனதாயினும் நூல் மற்றொருவருடையது. தேவையாயின் ஏற்கவேண்டுகிறேன். இல்லாவிடில் அன்புகூர்ந்து நீக்கவேண்டுகிறேன்.--பா.ஜம்புலிங்கம் 12:15, 10 சூன் 2014 (UTC) சொந்த ஆய்வுவணக்கம், உங்கள் சொந்த ஆய்வையோ அல்லது அந்த ஆய்வுக்கான இணைப்பையோ கட்டுரைகளில் தருவதைத் தவிர்க்கவும்.--Kanags \உரையாடுக 09:10, 6 சூன் 2014 (UTC) வணக்கம். சொந்த நூலாக இருப்பினும் அப்பொருண்மையில் தமிழில் வந்த நூல் என்பதால் தரப்பட்டது. பதிப்பகத்தின் மேற்கோள் அவ்விணைப்பில் தரப்பட்டிருந்தது. தாங்களோ, பிறரோ படிக்கம் நூலை மேற்கோளாகத் தர வாய்ப்பிருன் தர வேண்டுகிறேன். படியாக்கம் தொடர்பாக சுமார் 8 ஆண்டுகள் பத்திரிக்கைகளிலும் பிற இதழ்களிலும் வந்த செய்திகள் தொகுக்கப்பட்டு, தமிழில் அனைவருக்கும் சென்றடையவேண்டும் என்ற நன்னோக்கில் எழுதப்பட்டது அந்நூல். அப்பொருண்மையில் உள்ள அத்தலைப்பில் இதுவரை எந்த தமிழ் நூலும் மேற்கோளாகத் தரப்படவில்லை என்பதையும், இது வாசகர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். அன்புக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் 10:14, 6 சூன் 2014 (UTC) வணக்கம். ஐராவதேஸ்வரர் கோயில் என்ற தலைப்பின்கீழ் அந்நூலைப் பற்றிய குறிப்பினைத் தந்து எனது வலைப்பூவில் வந்த விமர்சனத்தை இணைப்பாகத் தந்துள்ளேன். https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D. வலைப்பூ எனதாயினும் நூல் மற்றொருவருடையது. தேவையாயின் ஏற்கவேண்டுகிறேன். இல்லாவிடில் அன்புகூர்ந்து நீக்கவேண்டுகிறேன்.--பா.ஜம்புலிங்கம் 12:21, 10 சூன் 2014 (UTC) கும்பகோணத்திலுள்ள கோயில்கள்கும்பகோணத்திலுள்ள கோயில்கள் தொடர்பில் 10 குறும்பட்டியல்கள் உருவாக்கியுள்ளீர்கள். இவை விரிவாக்கம் செய்யப்படாதவிடத்து நீக்கப்படும். அல்லது கும்பகோணம் கட்டுரையில் சேர்க்கப்பட வேண்டும். --AntonTalk 03:40, 9 சூலை 2014 (UTC) கும்பகோணம் கோவில் நகரம் என்ற நிலையில் அந்நகருடன் தொடர்புடைய முக்கியமான கோயில்கள் கட்டுரைக்குத் தேவையாக இருக்கும் என எண்ணி சேர்த்தேன். தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். --பா.ஜம்புலிங்கம் 17:51, 9 சூலை 2014 (UTC)
கும்பகோணம் கோயில்கள் தொடர்பாக தந்த செய்திகளை தாங்கள் கூறியபடி வார்ப்புரு தயாரிக்க முயன்றேன். பதிவு செய்தபின் பத்தி முழுமையடையாமல் உள்ளது. --பா.ஜம்புலிங்கம் 17:09, 21 சூலை 2014 (UTC)
கும்பகோணம் என்று தற்போது தெரியும் இடத்தில் கும்பகோணம் கோயில்கள் என்றிருக்க வேண்டும். தொகுப்பில் சென்று பார்க்கும்போது மாற்றத்தக்க அளவில் முன்னர் பதிந்த முழுப்பதிவுகளையும் காணமுடியவில்லை. அடைப்புக்குறிக்குள் கும்பகோணம் என்று மட்டுமே தொகுப்பு விவரத்தில் காணமுடிகிறது. அதனை எவ்வாறு மாற்றுவது எனத் தெரியவில்லை. அன்புகூர்ந்து மாற்றி உதவுக.--பா.ஜம்புலிங்கம் 13:48, 25 சூலை 2014 (UTC)
தாங்கள் வெளியிட்டுள்ளதைப் போலத்தான் நான் எதிர்பார்த்தேன். நான் எதிர்பார்த்தபடியே தற்போது தாங்கள் சரிசெய்துள்ளீர்கள். நன்றி. தொடர்ந்து கட்டுரைகளை மேம்படுத்துவேன். --பா.ஜம்புலிங்கம் 05:05, 26 சூலை 2014 (UTC) கும்பகோணத்திலுள்ள வைணவக் கோயில்களில் ஒன்று சார்ங்கபாணி கோயில். பலர் இக்கோயிலின் பெயரை சாரங்கபாணி கோயில் என்று கூறிவருகின்றனர். சார்ங்கபாணி என்பது சரி என்ற நிலையில் சார்ங்கபாணி கோயிலிலிருந்து சாரங்கபாணி கோயிலுக்கு வழிமாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். நன்றி. --பா.ஜம்புலிங்கம் 08:13, 28 சூலை 2014 (UTC) மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்வணக்கம், பா.ஜம்புலிங்கம்/தொகுப்பு 1! ![]() நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :) குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:59, 2 ஆகத்து 2014 (UTC) தங்களின் வாழ்த்துக்கு நன்றி. தொடர்ந்து எழுத முயற்சிப்பேன். --பா.ஜம்புலிங்கம் 11:56, 2 ஆகத்து 2014 (UTC)
தங்களின் அன்பான வருகைக்கு நன்றி. முடிந்தவரை அவ்வப்போது எழுதிவருகிறேன். தொழில்நுட்ப நிலையில் சிலவற்றைப் புரிந்துகொள்ள தாமதமாகிறது. பேச்சு)--பா.ஜம்புலிங்கம் 10:50, 4 ஆகத்து 2014 (UTC)
பதக்கம்
தங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் 14:59, 5 ஆகத்து 2014 (UTC)
இயலும்வரையில் தொழில்நுட்பத்தைப்புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். அன்புக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் 06:29, 10 ஆகத்து 2014 (UTC)
வணக்கம். தங்களின் வாழ்த்துக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:20, 11 ஆகத்து 2014 (UTC) ஒரு வேண்டுகோள்வணக்கம் திரு ஜம்புலிங்கம் முடியுமானால் தாதுகோபம் எனும் இந்தக் கட்டுரையை விரிவாக்கி தரத்தை மேம்படுத்த உதவுங்கள்.-- mohamed ijazz(பேச்சு) 08:45, 5 ஆகத்து 2014 (UTC) வணக்கம். ஸ்தூபி தொடர்பான கட்டுமானம் தமிழ்நாட்டில் இல்லாத நிலையிலும், களப்பணியின்போது நான் எவ்விடத்திலும் அதனைப் பார்க்காத நிலையிலும், அது தொடர்பாக படிக்காத நிலையிலும் இத்னை விரிவாக்குவது சிரமம் என நினைக்கிறேன். இருப்பினும் இத்தலைப்பு பற்றி மனதில் இருத்திவைத்துக்கொண்டேன். இதுதொடர்பாக படிக்க ஒரு வாய்ப்பு தங்களால் அமைந்துள்ளமையறிந்து மகிழ்கின்றேன். அவ்வப்போது செய்திகளைப் படித்து, பின் மேம்படுத்துவேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் 15:07, 5 ஆகத்து 2014 (UTC) --பா.ஜம்புலிங்கம் 06:37, 10 ஆகத்து 2014 (UTC) வேண்டுகோள்வணக்கம்.
வணக்கம்.
என்று இணைத்துள்ளேன். அவ்வாறு இணைப்பது சரியா அல்லது தாங்கள் கூறியுள்ளது போல் {{reflist}} என்று இணைக்கவேண்டுமா? இவ்வாறு இணைப்பதற்கான காரணம் என்ன? எனக்குப் புரியவில்லை. அன்புகூர்ந்து தெளிவிக்கவேண்டுகிறேன்.
தமிழ்க்குரிசில், இவரது கையொப்பம் நீலஇணைப்பாகத் தோன்றாமல் இருப்பது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. இவருக்கு இவ்விஷயத்தில் உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 12:52, 10 ஆகத்து 2014 (UTC)
வணக்கம். தாங்கள் இருவர் கூறிய கருத்துகளையும் ஏற்றுக்கொள்கிறேன். தற்போது டிக் தெரிகிறது. சரியாகிவிடும் என நினைக்கிறேன். கருத்துரைகளுக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:45, 11 ஆகத்து 2014 (UTC)
வணக்கம். தாங்கள் கூறியபடி பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்) கட்டுரையில் இணைப்பேன். அவ்வாறாக ஒரு கட்டுரை இல்லை என நினைத்துத் துவங்கிவிட்டேன். பொறுத்துக்கொள்க. இனி, தலைப்பிடும்போது சொற்களுக்கிடையில் இடைவெளி விடுவேன். வழிகாட்டலுக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:19, 17 ஆகத்து 2014 (UTC) ஆவூர் (கும்பகோணம்)வணக்கம்! ஆவூர் (கும்பகோணம்) என்பதும் ஆவூர் என்பதும் ஒன்றா என சரி பாருங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:53, 18 ஆகத்து 2014 (UTC)
அதை வைத்து நோக்கும்போது அது ஆவூர் (கும்பகோணம்) என்று உறுதியாகக் கூறமுடியவில்லை. ஆதலால்தான் ஆவூர்(கும்பகோணம்) என்ற தலைப்பில் உருவாக்கினேன். அதே சமயம் ஆவூர் கட்டுரையின் இணைப்பாக தரப்பட்டுள்ள முதல் கட்டுரை பற்றியதான இணைப்பு ஆவூர்(கும்பகோணம்) பசுபதீஸ்வரர் கோயில் பற்றியதேயாகும். இன்னும் சில நூல்களைப் பார்த்துவிட்டு உறுதி செய்கிறேன். அன்புக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:59, 18 ஆகத்து 2014 (UTC)
ஒரு வாசகனாக உரை திருத்தம் செய்துள்ளேன். உங்களின் கருத்தினைப் பகிருங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:15, 18 ஆகத்து 2014 (UTC)
கட்டுரையின் தொடக்கத்தில் ஒரு முன்னுரை தருவது விக்கி வழக்கம். இதைத்தான் ஆவூர் (கும்பகோணம்) எனும் கட்டுரையில் செய்துள்ளேன். இதனை அனைத்துக் கட்டுரைகளிலும் நடைமுறைப்படுத்தினால், சிறப்பு! நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:39, 18 ஆகத்து 2014 (UTC)
வணக்கம்; சப்தஸ்தானம் என்றால் என்பதனை என்னுடைய அறிதலுக்காக விளக்க வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:15, 19 ஆகத்து 2014 (UTC)
![]() தங்களிடம் கோரிக்கை வைக்கலாம் என நினைத்திருந்தேன்; சப்தஸ்தானம் எனும் தனிக் கட்டுரையை நீங்களே துவக்கிவிட்டீர்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:09, 20 ஆகத்து 2014 (UTC) வணக்கம். நீங்கள் சப்தஸ்தானம் பற்றி கேட்டவுடனே எனக்கு அதைப் பற்றி எழுத எண்ணம் வந்தது. தாமதிக்காமல் எழுதிவிட்டேன். தொடர்ந்து கூடுதல் விவரங்களைச் சேர்ப்பேன். தங்களின் நன்றி அறிந்து மகிழ்ச்சி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:01, 20 ஆகத்து 2014 (UTC) பேட்டவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் கோயில்...இந்தக் கட்டுரை, கோயிலைப் பற்றி முதன்மையாக சொல்லக்கூடியதாக இருப்பதால், முன்னுரையில் மாற்றம் செய்துள்ளேன். படிப்பவர்களுக்கு சீராகவும், இனிமையாகவும் இருக்கும்; கவனியுங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:20, 20 ஆகத்து 2014 (UTC) பதக்கம்
தங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:44, 22 ஆகத்து 2014 (UTC)
தங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களுடன் தொடர்ந்து பங்களிப்பேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:41, 23 ஆகத்து 2014 (UTC)
அன்பான வாழ்த்துக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:00, 23 ஆகத்து 2014 (UTC) சிறப்புப் பதக்கம்
வணக்கம். தங்களின் வாழ்த்து என்னை மென்மேலும் எழுதவைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. தொடர்ந்து எழுதுவேன். அன்புக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:27, 27 ஆகத்து 2014 (UTC)
தமிழக பௌத்தக் கோயில்கள்ஐயாவுக்கு வணக்கம். தமிழ்நாட்டில் சமணர் கோயில்கள் கட்டுரை இருப்பது போல் தமிழ்நாட்டில் பௌத்த கோயில்கள் கட்டுரையைத் தொடங்கி அதில் சில முக்கியக் கோயில்களை பற்றி சில குறிப்புகளை மேற்கோள்களோடு சேர்த்து எழுத வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:17, 27 ஆகத்து 2014 (UTC) வணக்கம். எனக்கு இவ்வாறு எழுதவேண்டும் என்ற விருப்பம் உள்ளது. சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் நான் முனைவர் (Ph.D.,) பட்டம் பெற்றுள்ளேன். விக்கிபீடியாவில் (அனுபவமில்லாத நிலையில்) ஒரு முறை இத்தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி அக்கட்டுரை திரும்ப வந்துவிட்டது. அப்பொழுது விக்கிபீடியாவில் எனக்கு அதிக பரிட்சயம் இல்லை. தாங்கள் கூறுவது தொடர்பாக எழுதத் தொடங்கும் நிலையில் எனக்கு ஒரு சிக்கல் இருப்பதாகத் தோன்றுகிறது. சோழ நாட்டில் சுமார் 100க்கும் மேற்பட்ட இடங்களுக்குச் சென்று 60க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளை நேரில் நான் பார்த்துள்ளேன். புதிய சமணர் சிலைகளையும் கண்டுபிடித்துள்ளேன். பல முறை என் நண்பர்களும் ஆய்வாளர்களும், அறிஞர்களும் துணையாக இருந்துள்ளனர்/இருந்து வருகின்றனர். தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் புத்தர் சிலைகளைப் பார்த்தவன் என்று என்னைப் பல அறிஞர்கள் பாராட்டுகின்றனர். இருப்பினும் விக்கிபீடியாவில் ஒருவர் தன் கட்டுரையை/நூலை/வலைப்பூவை சான்றாதாரமாகக் காட்டக்கூடாது என்று விதி இருப்பதாக அறிந்தேன். அதனால் என்னால் மேற்கோள் காட்ட இயலாத நிலையில் எழுதத் தயங்குகின்றேன். பல சிலைகளுக்கு அடிக்குறிப்பு (முதன் முதல்) கண்டுபிடித்தவர் என்ற நிலையில் என் பெயரோ, ஆய்வோ அமைகின்றது. தங்களின் கடிதம் என்னை தமிழ்நாட்டில் பௌத்த கோயில்கள் என்ற தலைப்பில் எழுத ஆர்வத்தைத் தூண்டிவிட்டது. விரைவில் தங்களின் ஆவலை (என் ஆவலும்கூட) பூர்த்தி செய்வேன். இது தொடர்பாக தங்களின் கருத்தையும் விக்கிபீடியாவில் உள்ள பிற நண்பர்களின் கருத்தையும் அறிய ஆவலோடு உள்ளேன். அன்புக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:30, 28 ஆகத்து 2014 (UTC) ஆம். நான் உங்கள் ஆய்வுகளைப் பற்றி அறிவேன். நீங்கள் முதலில் கண்டுபிடித்ததால் உங்கள் ஆய்வு முதலாம் நிலை மூலம் என்பதின் கீழ் வரும். ஆனால் உங்களது கட்டுரை பற்றி வரலாறு.காம் தளத்தில் சக மீள்பார்வை (Peer Review) பதிவு ஒன்றை பார்த்ததாக நினைவு. அதை இரண்டாம் நிலை மூலம் எனக்கொள்வோம். அதனால் நீங்கள் எழுதும் கட்டுரையில் இரண்டாம் நிலை மூலம் என்பதைச் சான்றாக வைத்து எழுதலாம். அதாவது உங்கள் முதலாம் நிலை ஆய்வு முடிவுகளை ஏற்று வெளியிடப்பட்ட சக மீள்பார்வை பெற்ற இரண்டாம் நிலை விமர்சனக் கட்டுரையிலும் இருந்து எழுதுவதில் தடை இல்லை. அதே போல் ஆவணம் இதழில் நீங்கள் கட்டுரை வெளியிட்டிருந்தாலும் அதையும் மேற்கோளாகத் தரலாம். நீங்கள் எழுதும் ஆய்வு நூல்களை மேற்கோளாகத் தரலாம் என்றாலும் அது அதிகளவு சக மீள்பார்வை பெற்று ஏற்கப்படுமாயின் அதுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுத முடியும். மாற்றுக்கருத்துள்ள உங்கள் ஆய்வு நூல் கருத்துகள் மீள்பார்வை பெறாதது எனில் அதை சில வரிகளில் மட்டும் அந்த கட்டுரையின் கடைசியில் குறிப்பிட இயலும். தமிழ்நாட்டில் பௌத்த கோயில்கள் என்பது பட்டியல் கட்டுரை என்பதால் அதில் இந்த சிக்கல்கள் அதிகம் வராது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:07, 28 ஆகத்து 2014 (UTC) தலைப்பு சற்றுச் சிரமம்தான். இருப்பினும் தாங்கள் கூறியனவற்றை அறிந்தேன். இதோ, ஆரம்பித்துவிட்டேன். தொடர்ந்து எழுதுவேன். உரிய மேற்கோள்களைத் தருவேன். எழுதும்போது விதிகளைப் பிறழும் நிலை அறியாமல் ஏற்பட்டால் நெறிப்படுத்தி உதவ வேண்டுகிறேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:27, 28 ஆகத்து 2014 (UTC)
இதுபோன்ற சிக்கல்கள் நான் எதிர்பார்த்ததுதான். செய்தித்தாள் ஆதாரம் மட்டுமே இருக்கும்போது அதனைத் தருகிறேன். ஏதாவது ஒரு இடத்தில் புத்தர் சிலையின் அமைப்பினைப் பற்றி விவாதிப்பேன். தாங்கள் கூறியதை கவனத்தில் கொள்வேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 17:04, 28 ஆகத்து 2014 (UTC) வணக்கம் ஐயா, தமிழ்நாட்டில் சமணர் கோயில்கள் என்ற கட்டுரையில் குமரி மாவட்டத்திலுள்ள சிதறால் மலைக் கோவில் என்பதையும் இணைக்கலாமா? மேலும் நாகர்கோயிலில் அமைந்துள்ள நாகராஜா கோவிலும் சமணக் கோயில் என்றே கேள்விப்பட்டுள்ளேன். நன்றி.--இரா.பாலா (பேச்சு) 05:20, 30 ஆகத்து 2014 (UTC) வணக்கம். சிதறால் மலைக் கோவில் என்ற தலைப்பிலான கோயிலை இணைக்கலாம். பல கோயில்கள் சமணக்கோயில்கள் என்றும் புத்தர் கோயில்கள் என்றும் கூறப்பட்டுவருகின்றன. அந்நிலையில் கூறப்படுவதை வைத்து பட்டியலில் சேர்ப்பது என்பதானது நாம் தவறாகச் செய்தியைத் தந்ததுபோல் ஆகிவிடும் என நினைக்கிறேன். எனவே நாகராஜா கோவில் இணைப்பு பற்றி சற்றுச் சிந்திக்கவேண்டுகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:30, 30 ஆகத்து 2014 (UTC)
விக்கி காமன்சில் படிமம் (நீங்கள் எடுத்த படிமங்கள்) பதிவேற்றவணக்கம். அண்மையில் நீங்கள் படிமங்களைக் கட்டுரைகளில் இணைத்து வருவது பாராட்டுக்குரியது. அதில் ஒரு சிறு வேண்டுகோள். அருமையான புகைப்பட ஆவணங்களான அவற்றை தமிழ் விக்கியில் பதிவேற்றினால் அவற்றை தமிழ் விக்கியில் மட்டுமே பயன்படுத்த முடியும். மாறாக அவை விக்கி பொதுவகத்தில் பதிவேற்றப்பட்டால் அனைத்துமொழி விக்கிப்பீடியாக்களிலும் அவற்றைப் பயன்படுத்த இயலும். இனிமேல் பதிவேற்றும் படிமங்களை விக்கிப் பொதுவகத்தில் பதிவேற்றுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அங்கு பதிவேற்றத் தேவையான வழிக்குறிப்புகளை கீழே தந்துள்ளேன். முயற்சி செய்து பாருங்கள். மேலும் உதவி தேவைப்பட்டால் கேட்கவும். நன்றி. --Booradleyp1 (பேச்சு) 04:23, 12 செப்டம்பர் 2014 (UTC)
தங்களின் கருத்திற்கு நன்றி. தாங்கள் கூறியமுறையை செயல்படுத்த முயற்சிப்பேன். உதவி தேவையாயின் தொடர்புகொள்வேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:16, 12 செப்டம்பர் 2014 (UTC) தாங்கள் கூறியபடி முதன்முதலாக இன்று தஞ்சாவூர் வெள்ளைபிள்ளையார்கோயில் தொடர்பான புகைப்படங்களை இணைத்துவிட்டேன். கீழே இவ்வாறு வருகிறது. Creating User:பா.ஜம்புலிங்கம் Wikimedia Commons does not yet have a user page called பா.ஜம்புலிங்கம். To start the page, begin typing in the box below. When you're done, press the "Save page" button. Your changes should be visible immediately. If this page used to exist, it may have been deleted. Check for பா.ஜம்புலிங்கம் in the deletion log and/or in deletion requests. Search for பா.ஜம்புலிங்கம் in Commons. வணக்கம். விக்கி காமன்சில் User:பா.ஜம்புலிங்கம் உருவாக்கவேண்டுமா? (தமிழ் விக்கிபீடியாவில் உள்ளவாறே விக்கி காமன்சில் log in செய்துள்ளேன்). தற்போது விக்கி காமன்சில் User:பா.ஜம்புலிங்கம் என்ற தலைப்பின்கீழ் என்னைப் பற்றிய குறிப்பினை இடலாமா? ஐயத்தைத் தெளிவிக்கவேண்டுகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:11, 16 செப்டம்பர் 2014 (UTC)
Wikipaedia (English)இல் அண்மையில் User ஆக பதிவு செய்துள்ளேன். அதில் உள்ள என்னைப் பற்றிய குறிப்பினை ஆங்கிலத்தில் சில மாற்றங்களுடன் விக்கி காமன்சில் தந்துவிட்டேன். தகவலுக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:14, 17 செப்டம்பர் 2014 (UTC)
வேண்டுகோள்பேச்சு:மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் இங்கு உங்கள் கருத்தினைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:57, 12 செப்டம்பர் 2014 (UTC) தாங்கள் கூறியபடி என் கருத்தை அப்பக்கத்தில் இட்டுள்ளேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:06, 12 செப்டம்பர் 2014 (UTC)
வணக்கம். தற்போது தாங்கள் விரும்பியபடி அழகரந்தாதி கட்டுரையில் ஒரு பாடலை, பொருளுடன் இணைத்துள்ளேன். நான் கேள்விப்பட்ட வரையில் பெருங்களூர் உருமநாதர் கோயில் இறைவன் அய்யானார்தான். இருப்பினும் நான் செல்லவுள்ள களப்பணிப்பட்டியலில் இக்கோயிலைச் சேர்த்துள்ளேன். நேரில் செல்லவுள்ளேன். பார்த்தபின் மேலும் செய்திகளைச் சேர்ப்பேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:42, 28 செப்டம்பர் 2014 (UTC) பதக்கம்
பதக்கம் வழங்கிய User:Mohamed ijazz அவர்களுக்கும், வாழ்த்து தெரிவித்துள்ள ஸ்ரீகர்சன் மற்றும் மணியன் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி. தங்களுடைய ஒத்துழைப்புகளுடன் தொடர்ந்து எழுதுவேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:19, 3 அக்டோபர் 2014 (UTC)
பாராட்டிற்கு அன்பான நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:30, 3 அக்டோபர் 2014 (UTC)
உங்களுக்குத் தெரியுமா? திட்டம்
ஆதுர சாலை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் வெளியானதை அறிந்து மகிழ்ந்தேன். செய்தியைத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:06, 29 அக்டோபர் 2014 (UTC) அண்மையில்தான் அறிந்தேன். தெரியப்படுத்தியமைக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:44, 19 சூலை 2015 (UTC) படிமம்:Dhenuga.jpg எங்கிருந்து பெறப்பட்டது?![]() படிமம்:Dhenuga.jpg படிமத்தை பதிவேற்றம் செய்ததற்கு நன்றி. இக்கோப்பு எங்கிருந்து எடுக்கப்பட்த்து என்றத் தகவல் இணைக்கப்படவில்லை. காப்புரிமைப் பற்றி சரிபார்க்க மூலம் தரப்படுதல் முக்கியமாகும்.தாங்கள் தகுந்த காப்புரிமை வார்ப்புருவையும் மூலத்தையும் படிம விளக்கப் பக்கத்தில் சேர்க்க வேண்டும் என வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். நீங்கள் வேறு ஏதேனும் கோப்புகள் பதிவேற்றிருப்பின், அவற்றையும் ஒருமுறை சரிபார்க்கவும். ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:38, 23 அக்டோபர் 2014 (UTC) படிமம்:Dhenuga.jpg இன் பதிப்புரிமை என்ன?![]() படிமம்:Dhenuga.jpg படிமத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான பதிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா பதிப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. பதிப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்ற தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகுவிரைவில் நீக்கப்படும். உங்களுக்கு இத்தகவல்கள் தெரிந்திருப்பின் பதிப்புரிமை வார்ப்புரு ஒன்றைப் படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும். இது தொடர்பான வினாக்கள் இருப்பின் பதிப்புரிமை வினாக்கள் பக்கத்தில் கேட்கவும். ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:38, 23 அக்டோபர் 2014 (UTC) படிமம்:Dhenuga.jpg படிமம் என்னால் மின்னஞ்சல் வழியாகப் பெறப்பட்டது. அவருடைய நூல்கள் பற்றிய விவரங்கள் தெளிவிற்காக கேட்கப்பட்டபோது அவரிடமிருந்து இப்படம் பெறப்பட்டது. இப்படம் என்னால் எடுக்கப்படவில்லை (This photograph was not taken by me). மேற்கொண்டு நான் செய்யவேண்டியவற்றைக் கூறவேண்டுகிறேன். தங்களின் வழிகாட்டலுக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:12, 24 அக்டோபர் 2014 (UTC)
திருப்பேர் நகர் அல்லது கோவிலடி புதிய புகைப்படம்அண்மையில் திருச்சிக்கு அருகில் லால்குடியிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள 6ஆவது திவ்யதேசமான திருப்பேர் நகர் எனப்படும் கோவிலடி என்னுமிடத்திலுள்ள அப்பக்குடத்தான் கோயிலுக்குச் சென்றிருந்தேன். அப்போது எடுத்த புகைப்படத்தினை கோவிலடி தலைப்பிலும் பஞ்சரங்க தலங்கள் தலைப்பிலும் இணைத்துள்ளேன் என்பதைத் தகவலுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். இக்கட்டுரைகளிலிருந்த பழைய கருப்பு வெள்ளை படத்திற்குப் பதிலாக இதனைச் சேர்த்தேன். இவ்வாறு சேர்த்தது சரியா என்பதை உறுதி செய்ய வேண்டுகிறேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:08, 13 நவம்பர் 2014 (UTC)
விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு![]() வணக்கம் பா.ஜம்புலிங்கம்/தொகுப்பு 1! என் பெயரையும் இத்திட்டத்தில் இணைத்துள்ளேன். முடியுமா என்ற எண்ணம் எழுந்தபோதிலும் முயற்சித்து சாதிப்போம் என்ற நிலையில் களம் இறங்கியுள்ளேன். உங்கள் அனைவரின் அன்பையும் ஒத்துழைப்பையும் அன்புடன் எதிர்நோக்குகிறேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:04, 31 திசம்பர் 2014 (UTC)
உங்கள் கவனத்திற்குமணப்பாறை மாடு கட்டுரையில் "மணப்பாறை மாடு கட்டி" பாடல் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியாக தரப்பட்டிருந்தது. ஆனால் அப் பாடலை எழுதியவர் மருதகாசி என்பதால் மாற்றியிருக்கிறேன். ஒரேயொரு ஆதாரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கட்டுரைகளை உருவாக்கும்போது இவ்வாறு நேர்வதுண்டு. முடிந்தவரை ஒன்றுக்கு மேற்பட்ட சான்றுகளைக் கொண்டு விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:04, 1 சனவரி 2015 (UTC)
ஐயா, இந்தக் கட்டுரையின் உள்ளடக்கங்கள் குறித்து எனக்கு இரண்டு ஐயங்கள் உள்ளன.
வணக்கம். (1) ஒரே சமயம் கிட்டத்தட்ட ஒரே பொருண்மையிலான இரு தொடர்புடையனவற்றை எழுதும்போது இந்த சிக்கல். தாங்கள் கூறியபடி நீக்கிவிட்டேன். (2) நூல் அறிமுகத்தில் மேற்கோள்கள் இருக்கவேண்டும் எனக் கூறப்படுவதன் அடிப்படையில் தேடியபோது எனக்குக் கிடைத்தத் தகவலை மேற்கோளுக்காகச் சேர்த்தேன். நூல்களில் மேற்கோள் சேர்க்க அதிகம் சிரமப்படவேண்டியுள்ளது. எழுதும் வேகத்தை அது குறைத்துவிடுகிறது. தங்கள் கண்ணோட்டத்தில் நோக்கும்போது இச்சொற்றொடர் தனிப்பட்ட நிலையில் அமைவதை உணர்ந்தேன். இதுபோன்ற பல பெருமைகள் சங்குக்கு உண்டு, இருப்பினும் அதையும் தற்போது நீக்கிவிட்டேன். கிடைக்கும் நேரத்தில் எழுதவேண்டும் என்ற ஆர்வமும், அவசரமும் இவ்வாறான நிலைக்கு ஆட்படுத்துகின்றன. தொடர்ந்து பிற பதிவுகளை எழுதவுள்ளேன். அவ்வப்போது நெறிப்படுத்த வேண்டுகிறேன். அன்புக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:42, 2 சனவரி 2015 (UTC) நூல் குறித்த கட்டுரைகளுக்கான உதவிக் குறிப்புகள்...ஐயா, வணக்கம். நூல் பற்றியக் கட்டுரைகளில் உரிய மேற்கோள் சேர்ப்பது குறித்தான எனது கருத்தினையும், உதவிக் குறிப்பினையும் தங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்:-
தமிழர் பண்பாட்டில் சங்கு, நாகபட்டினம் (நூல்) ஆகிய கட்டுரைகளையும் இதே மாதிரி மேம்படுத்த கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:10, 3 சனவரி 2015 (UTC)
ஐயா, தங்களை மீண்டும் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும்.
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:15, 3 சனவரி 2015 (UTC)
ஐயா,
வணக்கம். ஆலமரத்தடியில் நூல்களின் குறிப்பிடத்தக்கமை தொடர்பில் ஒரு குறிப்பு இட்டிருக்கிறேன். அதனை உங்களது பங்களிப்புகள் மீதான தனிப்பட்ட விமர்சனமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன். நூல்களின் குறிப்பிடத்தக்கமை தொடர்பில் தெளிவான கொள்கை இல்லாமையைச் சுட்டிக்காட்டுவதே நோக்கமாகும். உங்கள் சிறப்பான பங்களிப்புக்கு எனது பாராட்டுக்களும் நன்றிகளும். கோபி (பேச்சு) 13:38, 7 சனவரி 2015 (UTC)
ஐயா, தளராத தங்களின் உள்ளத்திற்கு எனது நன்றி! கோபி தெரிவித்துள்ள கருத்து, நூல்களின் குறிப்பிடத்தக்கமை பற்றியது. மற்றபடி, நூல்கள் குறித்த தங்களின் தற்போதைய நடை மேம்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:13, 8 சனவரி 2015 (UTC)
வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள், ஜம்புலிங்கம், தற்போது நீங்களும் இலக்கை அடைந்த பயனர்களுள் ஒருவர். பண்குகொண்டமைக்கு நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 06:31, 3 சனவரி 2015 (UTC)
அன்னை சாயிமாதா சிவபிருந்தாதேவி பொற்கிழி விருதுவணக்கம். அன்னை சாயிமாதா சிவபிருந்தாதேவி பொற்கிழி விருது என்ற தலைப்பில் உள்ள பதிவினை அன்னை சாயிமாதா சிவ பிருந்தாதேவி என்ற தலைப்பைக் கொண்டோ, அவர் உருவாக்கிய திலகவதியார் திருவருள் ஆதீனம் என்ற தலைப்பைக் கொண்டோ புதிய தலைப்பாக மாற்ற ஆவன செய்யவேண்டுகிறேன். என்னால் இயன்றவரை இக்கட்டுரையினை விக்கிப்படுத்த முயன்றுள்ளேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 03:02, 30 சனவரி 2015 (UTC) மேற்கண்ட கடிதம் அனுப்பியபின் தற்போது விக்கிபீடியாவில் சிவ பிருந்தாதேவி என்ற தலைப்பில் ஒரு கட்டுரையினைக் கண்டேன். சிவ பிருந்தாதேவி கட்டுரையோடு அன்னை சாயிமாதா சிவபிருந்தாதேவி பொற்கிழி விருது என்ற தலைப்பிலான கட்டுரையினை இணைக்க ஆவன செய்யவேண்டுகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 03:14, 30 சனவரி 2015 (UTC) உங்கள் கவனத்திற்குவணக்கம். நாளிதழ் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு கட்டுரைகளை (சுந்தரராஜத் தேவர்) உருவாக்கும்போது அச் செய்திகளை வாக்கியம், வார்த்தை மாறாமல் கட்டுரையில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அவ்வாறு பயன்படுத்துவது பதிப்புரிமை மீறலாகக் கருதப்படும். கருத்துகளை நமது சொந்த வாக்கியங்களில் கலைக்களஞ்சிய நடையில் தருதல் அவசியமாகும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:42, 22 பெப்ரவரி 2015 (UTC) வணக்கம். இவ்வாறான செய்திகளை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கும்போது இனி சொந்த வாக்கியங்களில் தருவேன். கருத்திற்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:32, 22 பெப்ரவரி 2015 (UTC) கும்பகோணம் கன்னிகா பரமேசுவரி கோயில் இருக்குமிடம்வணக்கம். கும்பகோணம் கன்னிகா பரமேசுவரி கோயில் என்ற தலைப்பில் இன்று ஒரு பதிவு துவங்கியுள்ளேன். இக்கோயில் சோலையப்ப முதலித்தெருவில் (இப்போது சோலையப்பன் தெரு) இருப்பதாக புலவர் கோ.மு.முத்துசாமிப்பிள்ளை தன் நூலில் கூறியுள்ளார். நான் மேற்கோளாக அந்நூலைத் தந்துள்ளேன். இக்கோயில் அந்தத் தெருவில் இல்லை. நன்கு தேடிப்பார்த்துவிட்டேன், விசாரித்தும்விட்டேன். மூர்த்திச்செட்டித்தெருவில் உள்ளது. இந்த விவரத்தை தெளிவிற்காக நான் இக்கட்டுரையில் தந்துள்ளேன். இதில் தவறு எதுவும் இருப்பதாகக் கருதினால் தெரிவிக்கவேண்டுகிறேன். தமிழ் விக்கிபீடியா கட்டுரைகளுக்காக இதுவரை 50க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு நேரில் சென்று வந்துள்ளேன். நேற்றைய ஒரு நாள் களப்பணியில் 30 கோயில்களுக்குச் சென்றேன். மகாமகம் விழா தொடர்பாக திருப்பணி நடைபெறுவதால் புகைப்படம் எடுப்பதிலும், விவரங்கள் எடுப்பதிலும் சற்று தொய்வு ஏற்படுகிறது.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:19, 1 மார்ச் 2015 (UTC) பயனர் பக்கத்தில் பகுப்புக்கள்ஐயா, தங்களைப் பற்றி விக்கிக் கட்டுரை ஒன்றும் அங்கே உரிய பகுப்புக்களும் உள்ளது. ஆகவே பயனர் பக்கத்திலும் கட்டுரைப் பகுப்புக்கள் தேவையில்லை. நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 09:43, 2 மார்ச் 2015 (UTC)
பதிவில் நாள் தவறாக பதிந்தமை தொடர்பாகவணக்கம். இன்று இளைய மகாமகம் 2015 தலைப்பில் மகாமகம் தேர் தொடர்பான ஐந்து புகைப்படங்களையும், தீர்த்தவாரி தொடர்பான ஒரு புகைப்படத்தையும் பொதுவகத்தில் இணைத்தேன். ஐந்து புகைப்படங்களுக்கும் Created: 30 நவம்பர் 1899 என்ற தேதி வந்துள்ளது. தீர்த்தவாரி தொடர்பான புகைப்படத்திற்கு இன்றைய தேதிக்குப் பதிலாக 3.3.2015 என்று வந்துள்ளது. அனைத்தையும் நீக்கிவிட்டு புதிதாக பொதுவகத்தில் மறுபடியும் தற்போது சேர்க்கலாமா? என்பது குறித்து தெளிவிக்கவேண்டுகிறேன். ஆனால் File Listஇல் 4 March 2015 என்ற தேதி தெரிகிறது.தொல்லைக்குப் பொறுத்துக்கொள்க.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:20, 4 மார்ச் 2015 (UTC) கடிதத்தை எழுதியபிறகு நானே தற்போது தேதியை சரிசெய்துவிட்டேன். சரியாக பதிவு செய்துள்ளேனா என்பதை உறுதி செய்ய வேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:32, 4 மார்ச் 2015 (UTC) Translating the interface in your language, we need your helpHello பா.ஜம்புலிங்கம், thanks for working on this wiki in your language. We updated the list of priority translations and I write you to let you know. The language used by this wiki (or by you in your preferences) needs about 100 translations or less in the priority list. You're almost done!
![]() Please register on translatewiki.net if you didn't yet and then help complete priority translations (make sure to select your language in the language selector). With a couple hours' work or less, you can make sure that nearly all visitors see the wiki interface fully translated. Nemo 14:07, 26 ஏப்ரல் 2015 (UTC) தானியங்கி வரவேற்புவணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:49, 7 மே 2015 (UTC) புத்தர் சிலைகள்பௌத்த ஆய்வு, புத்தர் சிலைகள் பற்றிய உங்கள் ஆர்வத்தினை உங்கள் பயனர் பக்கத்தில் காணக்கூடியதாகவிருந்தது. en:International Buddhist Museum இங்கு உங்களுக்குப் பல சுவாரசியமான தகவல்கள் கிடைக்கலாம். 17 நாடுகளைச் சேர்ந்த சிலைகளும், பொருட்களும் இங்கு உள்ளன. ஒரு முறை இங்கு சென்றுள்ளேன். ஔிப்படம் எடுக்கத்த தடை என்பதால் அழகிய கலைப்படைப்புக்களை பார்க்க மட்டுமே முடிந்தது. ஔிப்பட அனுதிக்காக முயற்சிக்கிறேன். கிடைத்தால் அவற்றைப் படமாக்கிவிடுவேன். --AntanO 07:05, 13 சூன் 2015 (UTC)
உங்கள் கவனத்திற்குஅறிவுக்களஞ்சியம் ஞானாலயா ஆய்வு நூலகம் (நூல்) கட்டுரையில் ஒரு சிக்கல். கட்டுரையின் உள்ளடக்கம் தமிழர் வீரம் நூலாக உள்ளது. ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 04:53, 2 சூலை 2015 (UTC)
மதனாகரன், உங்கள் வேகத்திற்கும் சுறுசுறுப்புக்கும் பாராட்டுகள். கட்டுரையில் நீக்கல் வார்ப்புரு இட்டபின், பேச்சுப் பக்கத்திலும் செய்தியிட்டுவிட்டு கட்டுரையைப் பார்த்தால் காணோம், நீக்கப்பட்டுவிட்டது. என்னவொரு வேகம். நன்றி மதன்.--Booradleyp1 (பேச்சு) 16:03, 2 சூலை 2015 (UTC) விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு![]() வணக்கம்! சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்! தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:22, 7 சூலை 2015 (UTC) இல்லத்தில் இருந்தபடிவணக்கம். முன்னரே எனது இசைவினைத் தெரிவித்துவிட்டேன். இல்லத்தில் இருந்தபடியே முடிந்தவரை அதிக எண்ணிக்கையில் பதிவினைப் பதிய முயற்சி மேற்கொள்வேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:12, 12 சூலை 2015 (UTC) தேதி குறியீடுவணக்கம். நாள்-மாதம்-ஆண்டு என்ற வரிசையில் குறிப்படுவது வழமைதான். ஆனாலும் சில இடங்களில் மாதம்-தேதி-ஆண்டு என்ற முறைமையும் பயன்படுத்தப்படுகிறது. அதானால் 6.7.2015 என்பதற்குப் பதில் ஜூலை 6, 2015 எனக் குறிப்பிட்டால் குழப்பம் நேர வழியில்லை என்பதால் மாதத்தை எழுத்து மூலம் குறிப்பதைப் பரிந்துரைக்கிறேன் (இது எனது தனிப்பட்டக் கருத்தே. விக்கியின் கொள்கை என்ன என்பது தெரியவில்லை). உங்கள் பேச்சுப் பக்கம் நீண்டுவிட்டதாகத் தோன்றினால் பரணேற்றி, தொகுப்புப் பெட்டிக்குள் சேமிக்கலாம். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:42, 16 சூலை 2015 (UTC)
படிம அளவுவணக்கம், நீங்கள் பதிவேற்றும் நியாயப் பயன்பாட்டுப் படிமங்கள் (எ.கா: நூல் அட்டை) குறைந்த அளவினைக் கொண்டிருக்க வேண்டும். நூல் அட்டைகள் 250 × 400 அளவு உள்ளதாக இருக்க வேண்டுமென்ற பரிந்துரை உள்ளது (பார்க்க: en:Wikipedia:Non-free content). ஆனால், நீங்கள் பதிவேற்றும் நியாயப் பயன்பாட்டுப் படிமங்கள் அதிக அளவுள்ளதாகக் காணப்படுகிறது. எ.கா: இது 1,500 × 2,260 அளவினைக் கொண்டுள்ளது. இது நியாயப் பயன்பாடாகாது. எனவே இவ்வாறான படிமங்களின் அளவைக் குறைத்து மீள் பதிவேற்றுங்கள். முன்னைய படிமங்களை நீக்கி விடுகிறேன். நன்றி. --AntanO 17:22, 24 செப்டம்பர் 2015 (UTC) படிம அளவைக் குறைக்கும் முறை வேண்டல்வணக்கம், AntanO. முந்தைய கடிதத்தைப் புகுபதிகை செய்யாமல் உள்ளே வந்து எழுதிவிட்டேன். மறுபடியும் அக்கடிதத்தை அனுப்புகிறேன். படிமங்களின் அளவைக் குறைக்கும் முறை குறித்துத் தெரிவிக்கவேண்டுகிறேன். நீக்குவதற்குப் பதிலாக ஒவ்வொன்றாக படிமங்களின் அளவைக் குறைப்பதே நன்று என நினைக்கிறேன். அவ்வாறான உத்தியும், நெறியும் அறியாததால் இதுவரை அவ்வாறு செய்துவிட்டேன். நீக்குவது பற்றிக் கருதிப் பார்க்கவேண்டுகிறேன். தங்களது மறுமொழியினைத் தொடர்ந்து இவ்வகையில் 250 × 400 அளவிலான வகையில் புகைப்படம் அமையும் வகையில் பார்த்துக்கொள்வேன். தங்களது கருத்துரைகள் பதிவுகளை மேம்படுத்த மிகவும் உதவியாக உள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:26, 25 செப்டம்பர் 2015 (UTC)
வணக்கம், AntanO. தங்களின் கருத்து உதவியாக உள்ளது. தாங்கள் கூறியபடி முயன்று வருகிறேன். இவ்வாறான இனி இந்த அளவிலேயே புகைப்படக்ளைப் பதிவிறக்கம் செய்வேன். ஐயமிருப்பின் தொடர்பு கொள்வேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:11, 29 செப்டம்பர் 2015 (UTC)
நூல்கள் குறித்த கட்டுரைகள்வணக்கம், நூல்கள் குறித்த கட்டுரைகள் பற்றி ஏற்கனவே உங்களுடன் உரையாடியுள்ளோம். குறிப்பாக, குறிப்பிடத்தக்க நூல்கள் குறித்தான கோபியின் பின்னூட்டங்களின் தொடர்ச்சியாக, விக்கிப்பீடியாவில் எவ்வகையான நூல்களைப் பற்றி எழுதலாம் என்பதற்கான சில வரைமுறைகள் ஆங்கில விக்கியில் எழுதப்பட்டுள்ளன. அதன் சுருக்கத்தை விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (நூல்கள்) என்ற கொள்கை விளக்கப் பக்கத்தில் சேர்த்திருக்கிறேன். அதனைக் கவனத்தில் எடுக்க வேண்டுகிறேன். எடுத்துக்காட்டாக, நீங்கள் அண்மையில் எழுதிய திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோயில் (நூல்) என்ற கட்டுரை என்னைப் பொறுத்தவரையில் குறிப்பிடத்தக்கதாகக் கொள்ள முடியவில்லை. அக்கட்டுரைக்கு வார்ப்புரு இட்டுள்ளேன். நன்றி.--Kanags \உரையாடுக 00:50, 4 அக்டோபர் 2015 (UTC)
வணக்கம், Kanags. நூல் பற்றிய ஒரு பத்தியை திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்கட்டுரையில் நூலட்டையுடன் சேர்த்துள்ளேன். ஏதேனும் மாற்றம் செய்வதாயின் செய்யவேண்டுகிறேன். நன்றி. முதற்பக்க அறிமுகம் வேண்டல்வணக்கம் பா. ஜம்புலிங்கம். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/பா. ஜம்புலிங்கம் என்ற பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் என்ற பக்கத்திலுள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஒருவேளை, உங்கள் தனிப்பட்ட தகவலையோ ஒளிப்படத்தையோ பகிர விரும்பாவிட்டாலும் உங்கள் விக்கிப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தவும் காட்சிப்படுத்தவும் இது உதவும். நன்றி. --மதனாகரன் (பேச்சு) 15:28, 16 அக்டோபர் 2015 (UTC)
தங்களைப் பற்றிய அறிமுகம் அடுத்த இரு வாரங்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியா முகப்பில் இடம் பெறும். விடா முயற்சி, கள உழைப்பு கொண்ட உங்கள் பங்களிப்பு முன்மாதிரியானது. தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 13:59, 1 நவம்பர் 2015 (UTC)
வாழ்த்துகள்!முதற் பக்கத்தில் தங்களின் அறிமுகம் கண்டு பெரிதும் மகிழ்கின்றேன். கல்வித்துறையில் மிகுந்த அனுபவமும், ஆய்வுத்துறையில் நுண்ணறிவும் கொண்டிருந்தாலும்., பிற பயனர்களின் பரிந்துரைகளை நேர்முறையாக எடுத்துக்கொண்டு விக்கி நடைமுறைக்கு ஏற்ப செயலாற்றும் தங்களை எண்ணிப் பெருமைப்படுகிறேன்! --;;::மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:28, 1 நவம்பர் 2015 (UTC)
வணக்கம், Booradleyp1. நேற்றுகூட கும்பகோணம் சோமேஸ்வரர் கோயில் குடமுழுக்கில் கலந்துகொண்டு வந்துபின் புகைப்படங்களை நேற்றே பதிவேற்றம் செய்தேன். நேரத்திற்கு ஏற்றபடி முடிந்தவரை களத்தில் சென்று பார்த்து, பதிவிடுவதை ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளேன். நேரில் பார்க்கும்போது பல கூடுதல் செய்திகள் கிடைக்கின்றன. வாழ்த்துக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:48, 3 நவம்பர் 2015 (UTC)
வணக்கம்,Antan, சக்திகுமார் லெட்சுமணன்,Kanags. உங்களைப் போன்ற நண்பர்களால்தான் இது சாத்தியமாயிற்று. நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:48, 3 நவம்பர் 2015 (UTC) கட்டுரைகளை ஒன்றிணைத்தல்கட்டுரைகளை ஒன்றிணைக்க இந்த முறையைப் பயன்படுத்துங்கள். எ.கா: பொன்செய் நற்றுணையப்பர் ஆலயம் --AntanO 09:49, 19 திசம்பர் 2015 (UTC) விக்கிமூலத்திற்கு வருக!https://ta.wikisource.org/s/4l8 என்பதில் உங்களின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன்.--த♥உழவன் (உரை) 04:18, 17 சனவரி 2016 (UTC) உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்
நன்றிதகவலுக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:09, 20 சனவரி 2016 (UTC) படிமம்கட்டுரைகளில் அளவுக்கதிகமாக படங்களை இணைக்க வேண்டாம். அவை கட்டுரையில் இருந்து நீக்கப்படலாம். பார்க்க: en:Wikipedia:Image use policy பொதுவகத்திற்கு இணைப்புக் கொடுத்தால் போதுமானது. எ.கா: டெசட் ஈகிள் கட்டுரைக்கு படங்களை இணைக்காமல், பொதுவகத்திற்கு இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. படிமம்:Mahamaham 2016 Logo.jpg இப்படிமத்தை Attribution 3.0 இன் கீழ் பதிவேற்றியுள்ளீர்கள். வேறு ஒருவருடைய வேலையை அனுமதியின்றி எவ்வாறு CC BY 3.0 இன் கீழ் பதிவேற்ற முடியும்? சுருக்கமாகக் குறிப்பிடுவதாயின் ஒருவர் தனக்கு என உருவாக்கிய ஒன்றை அனுமதியின்றி யாவரும் பயன்படுத்தலாம் என்கிறது உங்களுடைய பதிவேற்றம். இவ்வாறு செய்வது காப்புரிமை மீறலாகும். இது மாற்றப்படாவிட்டால், இப்படிமம் நீக்கப்படும். --AntanO 14:42, 27 பெப்ரவரி 2016 (UTC) வணக்கம், AntanO. கட்டுரையின் முக்கியத்துவம் கருதி முடிந்தவரை படங்களின் எண்ணிக்கையைக் குறைத்துத் தந்துள்ளேன். தாங்கள் கூறிய கருத்தை ஏற்கிறேன். (அதிகபட்சம்) எத்தனை படங்களை இணைக்கலாம் என்று தெரிவித்தால் நான் முக்கியத்துவத்தின் தன்மைக்கு ஏற்றாற்போல குறைக்க முயற்சிப்பேன். தங்களது கருத்துகள் எனது கட்டுரைகளை செழுமைப்படுத்த உதவியாக உள்ளன.அதற்கு என் நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:29, 28 பெப்ரவரி 2016 (UTC) மகாமகம் 2016 லோகோவணக்கம், AntanO. மகாமகம் 2016க்கான லோகோ எனப்படும் அடையாளச்சின்னத்தை புகைப்படப்பதிப்புரிமையில் எந்த வகையில் சேர்ப்பது என எனக்குத் தெரியாததால் அட்ரீபியூசன் 3 என்ற நிலையில் சேர்த்துள்ளேன், இது சரியா என்று எனக்குத் தெரியவில்லை, இதனை சரிசெய்துதர வேண்டுகிறேன் என்று கேட்டு கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் இந்த லோகோவைப் பதிவு செய்த நாளில் வினா எழுப்பியிருந்தேன். இக்கட்டுரையில் இது இருக்கவேண்டும் என்ற நிலையில் இதனைச் சேர்த்தேன் என்றும் கூறியிருந்தேன். காப்புரிமை மீறலின்றி இந்த லோகோ கட்டுரையில் அமைய ஆவன செய்ய வேண்டுகிறேன். 12 வருடத்திற்கொரு முறை நிகழும் இந்நிகழ்வுக்கு இந்த முறை இந்த லோகோ அறிமுகப்படுத்தப்பட்டது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:20, 28 பெப்ரவரி 2016 (UTC) நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவுதமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு தொடங்கியுள்ளது. பெயரைப் பதியவும் கூடுதல் விவரங்களுக்கும் இங்கு வாருங்கள். பெயரைப் பதிவு செய்ய இன்னும் ஒரு நாளே உள்ளது..--இரவி (பேச்சு) 13:05, 27 மார்ச் 2016 (UTC) அழைப்புக்கு நன்றி, இரவி. அலுவலகத்தில் ஏப்ரல்,மே தேர்வுப்பணிகள் காரணமாக கல்ந்துகொள்ள இயலா நிலையில் உள்ளேன். பயிற்சிப்பட்டறை சிறப்பாக அமைய வாழ்த்துகள்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:59, 28 மார்ச் 2016 (UTC) விக்கிக்கோப்பைவிக்கிக்கோப்பையில் பங்குபற்றியமைக்கு மிக்க நன்றிகள். புள்ளிகளை கணக்கிடுவதற்காக நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை பயனர் நிலவரம் என்பதில் சேர்த்துவிட வேண்டுகிறோம் ஏற்கனவே சேர்ந்திருந்தால் இவ்வறிவிப்பை கவனிக்கத்தேவையில்லை.-- மாதவன் ( பேச்சு ) 07:16, 3 ஏப்ரல் 2016 (UTC) வணக்கம். உருவாக்கிய கட்டுரைகள் மற்றும் மேம்படுத்திய கட்டுரைகளைப் பற்றிய விவரங்களை எப்படி எடுப்பது என்ற முறை எனக்குத் தெரியவில்லை. தவிரவும் பணிச்சுமை காரணமாக இப்போது இப்பணியில் முயற்சி செய்ய இயலா நிலையில் உள்ளேன். விக்கிக்கோப்பையில் பங்குகொண்டு இயன்றவரை எழுதியதை நிறைவாகக் கருதுகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:48, 5 ஏப்ரல் 2016 (UTC) குறிப்பிடத்தக்கமை, நூல்கள்வணக்கம். நூல்கள் குறிப்பிடத்தக்கமையைக் கொண்டிராவிட்டால் நீக்கப்படும். பார்க்கவும் விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (நூல்கள்) --AntanO 02:28, 23 சூன் 2016 (UTC) வணக்கம, Antan. செய்தியறிந்தேன். தாங்கள் கூறியபடி பார்ப்பேன். தங்களது எழுத்து என் பதிவுகளை மேம்படுத்த மிகவும் உதவியாக இருக்கிறது. என்னைப் போன்றோருக்குத் தாங்கள் தருகின்ற ஊக்கத்திற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:31, 23 சூன் 2016 (UTC)
வணக்கம், சகோதரன் ஜெகதீஸ்வரன். நூல்களைப் பற்றிய பதிவுகள் தொடர்பான தங்களின் கருத்தினை அறிந்தேன். இனி உரிய முறையில் செயல்படுவேன். தங்களின் கருத்திற்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:48, 26 சூன் 2016 (UTC) சில குறிப்புக்கள்கட்டுரைகளை இணைக்க பேச்சுப்பக்கத்தில் கருத்திடுவதோடு, கட்டுரையில் {{Merge}} போன்ற வார்ப்புருக்களையும் சேர்த்தால் நிருவாகிகளினால் கவனிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பேச்சுப்பக்கத்தில் மட்டும் கருத்திடுவதால் கவனிக்கமல் விடப்படலாம். மேலதிக விபரங்களுக்கு: விக்கிப்பீடியா:கட்டுரைகளை ஒன்றிணைத்தல்#பயனுள்ள வார்ப்புரு வே. உமாமகேசுவரன் கட்டுரையில் இணைத்துள்ள படிமம் நியாயப்பயன்பாட்டு நியாயப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. பார்க்க en:Wikipedia:Use_rationale_examples#Book_cover_in_the_article_about_that_book. எனவே இவ்வாறான பதிவேற்றங்களைத் தவிர்க்கலாம். நன்றி. --AntanO 02:10, 14 சூலை 2016 (UTC) வணக்கம், AntanO இனி இவ்வாறாக கட்டுரைகளை இணைக்க குறிப்புவைக்கும்போது {{Merge}} போன்ற வார்ப்புருக்களை இணைப்பேன். (வார்ப்புரு அமைக்கும்போது தவறு ஏற்பட்டுவிடுமோ என்ற ஐயத்தில் வார்ப்புரு இடுவதைத் தவிர்த்துவந்தேன்). உமாமகேசுவரன் கட்டுரையில் அவரைப் பற்றிய நூல் என்ற நிலையில் இணைத்தேன். தாங்கள் கூறியபடி இப்படிமம் நியாயப்பயன்பாட்டு நியாயப்பாட்டை கொண்டிருக்கவில்லையாயின் மேற்கொண்டு ஆவன செய்யவேண்டுகிறேன். இவ்வாறான பதிவேற்றங்களை இனி முழுமையாகத் தவிர்ப்பேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:34, 14 சூலை 2016 (UTC)
இனி அவ்வாறே செய்வேன், நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:27, 15 சூலை 2016 (UTC) விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்![]() விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்! தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன. 3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக மேலதிக விபரங்களை இங்கே காணலாம். MediaWiki message delivery (பேச்சு) 16:13, 20 சூலை 2016 (UTC) வணக்கம், வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துகள். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:06, 21 சூலை 2016 (UTC) |
Portal di Ensiklopedia Dunia