தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
அதற்கு முன்பு எனது பக்கம் நீக்கப்பட்டதற்கு சரியான விளக்கம் வேண்டுகிறேன். தமிழ் இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் மற்றும் மொழிபெயர்ப்புகள் குறித்த அத்தனை தகவல்களையும் சான்றுடன் அளித்திருக்கிறேன். EditorGowtham25 (பேச்சு) 20:53, 11 சனவரி 2025 (UTC)Reply
ஜி. ஏ. கௌதம் என்கின்ற பக்கம் சரியான சான்றுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான மேற்கோள்களூம், வெளியிணைப்புகளும் சரியாக அளிக்கப்பட்டுள்ளது. எனவே, தயவுகூர்ந்து அழித்த பக்கத்தை மீட்டெடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். EditorGowtham25 (பேச்சு) 21:21, 11 சனவரி 2025 (UTC)Reply
விக்கி தளத்தில் என்னைப்பற்றி தனிப்பட்ட விபரம் என்பதும். பொதுத்தளத்தில் எனது அடையாளமும் வேறு வேறு. அடிப்படையில் நான் ஒரு படத்தொகுப்பாளர் மற்றும் எழுத்தாளர். அதனால் ’ஜி. ஏ. கௌதம்’ என்று உருவாக்கப்பட்ட பக்கத்தில் எனது மேலதிகத்தகவல்களை மட்டுமே இணைத்தேன். அதற்கும் என் பயனர் விபரங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அது என் பயனர் கணக்கின் மூலம் உருவாக்கப்பட்ட பக்கம் அல்ல. மேலதிகத்தகவல் மட்டுமே நான் சேர்த்தவை. EditorGowtham25 (பேச்சு) 18:18, 12 சனவரி 2025 (UTC)Reply
விக்கிப்பீடியா என்பது ஒரு கலைக்களஞ்சியத் தளம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒருவர் தனது அருமை பெருமைகளை உலகிற்கு காட்டுவதற்கான தளம் இதுவன்று. ஜி. ஏ. கௌதம் கட்டுரையைத் தொடங்கியவர் தனது பயனர் பெயர் வழியாக அக்கட்டுரையை ஆரம்பிக்கவில்லை. ஐ. பி. முகவரியில் எழுதப்பட்ட அக்கட்டுரையில், அடுத்த நாளே நீங்கள் தகவல்களைச் சேர்க்கிறீர்கள். உங்களின் பயனர் பக்கத்தை மிக அண்மையில்தான் நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ஐயம் ஏற்பட்டது. நிகழ்தகவாக நடந்திருக்குமா? என்பது ஆச்சரியமாக உள்ளது! அத்தோடு இக்கட்டுரை ஒரு இரசிகர் எழுதியது போன்று எழுதப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் தவிர்த்து, ஜி. ஏ. கௌதம் என்பவர் குறிப்பிடத்தக்கவரா என்பதனையும் அளக்க வேண்டியது உள்ளது.
கட்டுரைத் தலைப்பு தொடர்பானவரே கட்டுரையை விரிவாக்கம் செய்வதை தவிர்க்கவேண்டும். இந்த முரணுக்காக உங்களிடம் போராட எனக்கு நேரம் இல்லை. இங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் இன்னொரு பயனர் ஆராய்ந்து நல்ல முடிவினை எடுக்கட்டும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:48, 13 சனவரி 2025 (UTC)Reply
//ஒருவர் தனது அருமை பெருமைகளை உலகிற்கு காட்டுவதற்கான தளம் இதுவன்று.//
விக்கிப்பீடியா என்பது ஒரு கலைக்களஞ்சியத் தளம் என்பது எனக்கும் தெரியும். இதே விக்கிபீடியா தளத்தில் எழுத்தாளர்களின் பக்கங்கள் இருக்கின்றன. அதற்காக அவர்களின் அருமை பெருமைகளை உலகிற்கு காட்டுவது என்று எப்படி அர்த்தம் இல்லையோ எது போலவே, 'ஜி.ஏ. கௌதம்’ என்ற பக்கத்தில் அருமை பெருமை பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை. அவை ஒரு படத்தொகுப்பாளராகவும், ஒரு எழுத்தாளரகாகவும் நிகழ்த்திய என் செயல்பாடுகளும் என் அனுபவமும். மேலும், அதற்கான சான்றுகளும், போதிய இணைப்புகளும் அளிக்கப்ப்ட்டிருக்கின்றன. ஆதாரமின்றி புனைவாக எவ்வித தகவல்களும் சேர்க்கப்படவில்லை.
//ஜி. ஏ. கௌதம் கட்டுரையைத் தொடங்கியவர் தனது பயனர் பெயர் வழியாக அக்கட்டுரையை ஆரம்பிக்கவில்லை. ஐ. பி. முகவரியில் எழுதப்பட்ட அக்கட்டுரையில், அடுத்த நாளே நீங்கள் தகவல்களைச் சேர்க்கிறீர்கள்.//
ஜி. ஏ. கௌதம் என்பது நண்பர் ஒருவர் எனக்காக உருவாக்கிய பக்கம். உருவாக்கிய பின் பக்கத்திற்கான இணைப்பினை எனக்கு அளித்தார். அதில் சில தகவல்களும் இணைப்புகளும் விட்டுபோயிருந்ததால், அதை நானே சேர்த்துக்கொள்வதாக அவரிடம் தெரிவித்து அதை நானே சேர்த்தேன். படத்தொகுப்பாளர், எழுத்தாளர் என்பதைத்தாண்டி நான் ஒரு விக்கிபீடியாவின் பங்களிப்பாரும் கூட.
//அத்தோடு இக்கட்டுரை ஒரு இரசிகர் எழுதியது போன்று எழுதப்பட்டுள்ளது//
ஒருவரைப்பற்றி வேறு ஒருவர் எழுதுவது தானே கலைக்களஞ்சியம். அதில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய இடங்களில் அதை தெரிவிக்கலாம். அல்லது அதை தங்களிடன் குழுவினர் மூலம் செய்திருக்கலாம்.
//கட்டுரைத் தலைப்பு தொடர்பானவரே கட்டுரையை விரிவாக்கம் செய்வதை தவிர்க்கவேண்டும்.//
'தனது' என்பதனை கவனியுங்கள். கல்கி, சுஜாதா, பாலகுமாரன் ஆகிய எழுத்தாளர்கள் தானோ அல்லது தனது நண்பர்களை வைத்தோ தன் குறித்த கட்டுரையை எழுதவில்லை. உங்கள் குறித்த கட்டுரை உங்களின் நண்பரால் எழுதப்படும்போது, அங்கு ஆதாய முரண் (conflict of interest) வந்துவிட்டது.
புகழ்ச்சியுடன் கட்டுரை எழுதப்பட்டிருந்ததோடு கட்டுரையின் குறிப்பிடத்தக்கமையும் (notability) கேள்விக்குள்ளானது.
நடிகர் ரஜினிகாந்த் குறித்து அவரின் இரசிகரும் கட்டுரையை எழுதலாம், விரிவாக்கலாம். ஆனால், புகழ்ச்சியுடன் எழுதுவதற்கு கலைக்களஞ்சியக் கொள்கை அனுமதிப்பதில்லை.
விக்கிப்பீடியா பங்களிப்பாளர் என்பதற்காக சிறப்பு உரிமை யாருக்கும் தரப்படவில்லை.
//தனது' என்பதனை கவனியுங்கள். கல்கி, சுஜாதா, பாலகுமாரன் ஆகிய எழுத்தாளர்கள் தானோ அல்லது தனது நண்பர்களை வைத்தோ தன் குறித்த கட்டுரையை எழுதவில்லை. உங்கள் குறித்த கட்டுரை உங்களின் நண்பரால் எழுதப்படும்போது, அங்கு ஆதாய முரண் (conflict of interest) வந்துவிட்டது.//
.
சாரு நிவேதிதா, ஜெயமோகன் உள்ளிட்ட இதுவரை எழுதப்பட்ட தமிழ் எழுத்தாளர்களின் பெரும்பாலான கட்டுரைகள் அவர்களுக்கு நன்கு தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்களின் மூலம் மட்டுமே எழுதப்பட்டவை மற்றும் திருத்தப்பட்டவை. அவர்களைப்பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு மட்டுமே அவர்களின் அடுத்தகட்ட மேலதிகத்தகவல்கள் தெரியும். அப்படியென்றால் அவை அனைத்தையும் ஆதாய முரண் இருப்பதாக சொல்கிறீர்களா? அப்படி நீங்கள் சொல்லும் பட்சத்தில் பல எழுத்தாளர்களின் பக்கங்களை நீங்கள் நீக்க வேண்டி வரும்.
.
//புகழ்ச்சியுடன் கட்டுரை எழுதப்பட்டிருந்ததோடு கட்டுரையின் குறிப்பிடத்தக்கமையும் (notability) கேள்விக்குள்ளானது.//
.
எந்த வகையில் இது புகழ்ச்சியாகும்? ஏனெனில், ஆஸ்கார் விருது பெற்ற ஒரு இயக்குநர், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் என இது போன்ற கலைஞர்களை குறிப்பிடும் போது அவர்களின் சாதனைகளையும், அனுபவங்களையும் குறிப்பிடுவது இயல்பு. அதை புகழ்ச்சி என்ற கணக்கில் எடுத்துக்கொள்வதை விட சாதனைகள், பங்களிப்புகள் மற்றும் அனுபவங்கள் என்ற கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். உதாரணமாக, ”இவரது புனைவுகளில் மனித மனதின் அசாதாரணமான ஆழங்களும் நுட்பங்களும் வெளிப்படும்.இவர் தன்னை "இந்தியத் தமிழ் மரபை நவீன காலகட்டத்தின் அறத்திற்கு ஏற்ப மறுவரையறை செய்தவர் என அறியப்பட வேண்டும் என விரும்பினார்”. இது ஜெயமோகனின் பக்கத்தில் உள்ள அறிமுகம். இதற்காக புகழ்ச்சியுடன் எழுதுவதாக கணக்கீல் எடுத்துக்கொள்வீர்களா?
.
ஜி.ஏ. கௌதம் என்ற பக்கத்தை பொருத்தவரை சுயதம்பட்டம் அடித்துக்கொள்வதற்கு அதில் ஒன்றுமில்லை. கௌதம் என்பவரின் அனுபவங்களையும், அவரது பங்களிப்பையும் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.அதற்கும் மேல் அதில் புகழ்ச்சியுடன் எழுதப்பட்டிருப்பதாக நீனைத்தால், நீங்கள் நீக்க வேண்டியது அந்த வார்த்தைகளை மட்டுமே. மொத்த கட்டுரையை அல்ல.
.
//விக்கிப்பீடியா பங்களிப்பாளர் என்பதற்காக சிறப்பு உரிமை யாருக்கும் தரப்படவில்லை.//
.
நான் கேட்பது சிறப்பு உரிமையை அல்ல. எனக்கான அடிப்படை உரிமையை. விக்கிபீடியாவில் ஒரு பயனர் என்பதன் அடிப்படையில் விக்கிபீடியாவில் தொடர்பில்லாத எனது தனிப்பட்ட ஜி.ஏ. கௌதம் எனும் பக்கத்தை நீக்குவது என்பது என் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல். ஜி.ஏ.கௌதம் எனும் பக்கத்தில் இருக்கும் அனைத்து தகவல்களுக்கும் போதிய ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. ஜி.ஏ. கௌதம் பக்கத்தில் இருக்கும் ஒருவர் விக்கிபீடியாவில் தன்னால் இயன்ற பங்களிப்புக்களை செய்யக்கூடாது என்று ஏதும் இருக்கிறதா? ஆனால், அதில் இருக்கும் நபர் விக்கிபீடியாவில் இருக்கும் பட்சத்தில் அவர் குறித்த பக்கத்தை நீக்குவது என்பது முரணானது. ஜெயமோகன் ஒன்ற ஒரு எழுத்தாளர் விக்கிபீடியாவில் முன்பு நிறைய கட்டுரைகளை எழுதி வந்தார். அவருக்கும் விக்கீபிடியாவில் ஒரு தனி பக்கம் உள்ளது. அப்படியெனில் அவருக்கான விக்கிபீடியா பக்கம் இருக்கக்கூடாது என்று சொல்ல முடியுமா? அது போலத்தான் இதுவும்.
.
//முரண்கள் நிறைந்த கட்டுரையை தக்கவைக்கும் முயற்சிகள் தன்னார்வப் பங்களிப்பாளர்களுக்கு அவசியமற்றவை.//
.
தன்னைச்சுற்றி வீணாக சுமத்தப்படும் முரண்களை களைந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தெளிவுபடுத்துவது என்பது பங்களிப்பாளர்களுக்கு அவசியமானவை. தேவையான அளவில் ஆவணங்கள் சமர்ப்பித்தும், விதிகளின் படி எனது பக்கத்தை நானே திருத்தக்கூடாது என்று கூறிய பிறகு எனது திருத்தங்களை நீக்கும் படி கூறிய போது அதையும் நீக்காமல், உங்களுக்கு புகழ்ச்சி என்று நினைக்கும் இடங்களை திருத்தமும் செய்யாமல், உங்கள் தனிப்பட்ட முடிவில் மொத்த பக்கத்தையும் முடக்கியிருப்பதும் ஒரு பங்களிப்பாளராக உங்களுக்கும் அவசியமற்றவை. EditorGowtham25 (பேச்சு) 14:31, 13 சனவரி 2025 (UTC)Reply
வணக்கம், தாங்கள் உருவாக்கிய கட்டுரை, இயந்திர மொழிபெயர்ப்பு, பல பத்திகள் ஆங்கிலத்திலேயே இருக்கிற காரணத்தினால் வரைவு:முகம்மது அப்தெல் வஹாப் எனும் பக்கத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது. திருத்தங்கள் செய்த பிறகு முதன்மைப் பக்கத்திற்கு நகர்த்தலாம்.நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 07:02, 23 பெப்பிரவரி 2025 (UTC)
கமல்ஹாசன்
கமல்ஹாசன் கட்டுரையில் மொத்தம் 42 மேற்கோள்கள் இருந்தன. இப்போது எதற்காக 27 மேற்கோள்களாக குறைத்துள்ளீர்கள்?-- சா. அருணாசலம் (உரையாடல்) 08:45, 26 பெப்பிரவரி 2025 (UTC)
மேற்கோள்கள் மீண்டும் இணைக்கப்பட்டுவிட்டன. சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி. EditorGowtham25 (பேச்சு) 09:51, 26 பெப்பிரவரி 2025 (UTC)
தலைப்பு
ஒரு கட்டுரையின் தலைப்பை மாற்றும் செய்ய விரும்பினால், அந்த கட்டுரையின் பேச்சு பக்கத்தில் தலைப்பை மாற்றுவதற்கு பரிந்துரை செய்ய வேண்டும், பிறபயனர்களின் கருத்தை பொறுத்தே மற்றும் அவர்களின் ஒப்புதலோடு அதை மாற்றும் செய்ய வேண்டும். --கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 07:31, 20 மார்ச்சு 2025 (UTC)