தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
வணக்கம் காந்தி. விக்கிப்பீடியாவுக்கு உங்களை வரவேற்பதில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் சில படங்களை அண்மையில் தரவேற்றியிருந்தீர்கள். அப்படங்கள் விக்கியில் உள்ள ஏதாவதொரு பொருத்தமான கட்டுரைக்கு இணைப்புக் கொடுக்கப்பட வேண்டும். அல்லது தரவேற்றிப் பயனில்லை. அனேகமான படங்கள் டி. என். தீர்த்தகிரி என்பவரைப் பற்றி உள்ளன. எனவே அவரைப் பற்றிய ஒரு கட்டுரையை எழுதிப் படங்களையும் இணையுங்கள். உதவி தேவைப்படின் கேளுங்கள். நன்றி.--Kanags\உரையாடுக21:52, 28 திசம்பர் 2010 (UTC)Reply
தீர்த்தகிரியார் பற்றிய கட்டுரைக்கு நன்றி. தலைப்பை பொது பெயரிடல் முறைப்படி டி. என். தீர்த்தரி என மாற்றியுள்ளேன். நீங்கள் பதிவேற்றிய படிமம்:Theerthagiriyar.jpg என்பதில் உள்ளவர் ஜீவானந்தமா அல்லது தீர்த்தகிரியாரா? படத்தில் உள்ளவர் ஜீவானந்தம் போல் தெரிகிறது. அதனாலேயே உறுதிப்படுத்தக் கேட்டேன்.--Kanags\உரையாடுக04:38, 29 திசம்பர் 2010 (UTC)Reply
அருமையான கட்டுரை. எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும். தீர்த்தகிரியார் உங்கள் உறவினரா? நீங்கள் இணைத்துள்ள அரிய ஆவணங்களின் ஒளிக்கோப்புகள் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன.--சோடாபாட்டில்09:00, 29 திசம்பர் 2010 (UTC)Reply
நன்றி நற்கீரன். தர்மபுரியில் இந்திய விடுதலை போரின்போது முக்கிய பங்காற்றியவர் இவர். இவரின் தியாகம் உலகறியவே இது என் சிறு முயற்சி. முடிந்தால் இன்னும் சில ஆவணங்களை இணையேற்றுகிறேன்.--TKB Gandhi09:21, 29 திசம்பர் 2010 (UTC)Reply
தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:04, 21 சூலை 2011 (UTC)Reply
சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக
மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்
September 2022
வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 03:42, 2 செப்டம்பர் 2022 (UTC)
"ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன" - Can you kindly point out what's he offence. Thanks very much TKB Gandhi (பேச்சு) 03:52, 2 செப்டம்பர் 2022 (UTC)
தயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். தங்களுக்கு உதவி தேவைப்படின், தயங்காது இங்கு கேட்கலாம். நன்றி. AntanO (பேச்சு) 12:55, 21 செப்டம்பர் 2022 (UTC)
தீர்த்தகிரியாரின் புகைப்படம் ஏன் நீக்கப்பது? இந்த புகைப்படம் எடுக்கப்பட்டு 70-80 வருடமிருக்கும், இதை அவர் குடும்பம் விக்கிபீடியாவிற்க்காக அளித்தது. TKB Gandhi (பேச்சு) 02:12, 22 செப்டம்பர் 2022 (UTC)