பயிரிடும்வகைப் பிரிவு![]() ![]() ![]() பயிரிடப்படும் பயிர்களைப் அல்லது தாவரங்களைப் பெயரிடும்போது, ஒரு குறிப்பிட்ட பெயரிடல் முறைமை (Nomenclature) பயன்படுத்தப்படும். பயிரிடப்படும் தாவரங்களுக்கான அனைத்துலக பெயரிடல் முறைமைக் குறியீட்டின்படி (ICNCP - International Code of Nomeclature for Cultivated Plants) உயிரியல் வகைப்பாட்டில், பயிரிடும்வகைப் பிரிவு என்பதும் ஒரு முறைசார் பகுப்பாக இருக்கின்றது. ICNCP Art. 3.1: "வரையறுக்கப்பட்ட ஒத்த தன்மையின் அடிப்படையில், பயிரிடும்வகைகள், தனித் தாவரங்கள் அல்லது தாவரத்தொகுதி தொகுக்கப்படும் ஒரு முறைசார் பகுப்பு"[1] 1995 ICNCP யில் Cultivar Group எனக் குறிப்பிடப்பட்டு இருந்ததை, 2004 ICNCP யில் Group (பெரிய G யை முதல் எழுத்தாகக் கொண்டு) என்று மாற்றியமைத்தனர். சில பொதுவான சிறப்பியல்புகளைக் கொண்ட தாவரங்கள் ஒரு பயிரிடும்வகைப் பிரிவினுள் இணைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக:
இந்த தலையுருப் பிரிவினுள் சிவப்பு முட்டைக்கோசு (Red cabbage), வெள்ளை முட்டைக்கோசு (White cabbage), சவொய் முட்டைக்கோசு (Savoy cabbage) என்பன அடங்கும். இவை யாவும் மிகவும் குறுகிய தண்டையும், அடர்த்தியாக அடுக்கப்பட்ட இலைகளை நடுவிலும் கொண்டிருப்பதனால் நடுவில் தலை போன்ற ஒரு அமைப்பைக் கொண்டிருக்கும்.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia