பரட்டாங்கு
பரட்டாங்கு (Baratang), அல்லது பரட்டாங்கு தீவு (Baratang Island), இந்தியாவின் அந்தமான் தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரு தீவு ஆகும். இதன் பரப்பளவு அண்ணளவாக 297.6 கி.மீ.². பெரும் அந்தமான் தீவுக்கூட்டத்தின் முக்கிய தீவுகளில் ஒன்றான இத்தீவின் வடக்கே நடு அந்தமான் தீவு, தெற்கே தெற்கு அந்தமான் தீவு ஆகிய அமைந்துள்ளன. ரிட்ச்சி தீவுக்கூட்டம் கிழக்கே 20 கி.மீ. தொலைவில் உள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேர் இத்தீவின் தெற்கே 100 கி.மீ. தொலைவில் உள்ளது. ![]() இந்தியாவிலேயே புதைசேற்று எரிமலைகள் இங்கு தான் உள்ளன. இந்த சேற்று எரிமலைகள் கடைசியாக 2005 ஆம் ஆண்டில் வெடித்தன. அதற்கு முன்னர் 2003 பெப்ரவரி 18 இல் வெடித்தது. உள்ளூரில் எவ்வெரிமலைகளை "ஜால்கி" என அழைக்கின்றனர். தெற்காசியாவில் உள்ள ஒரேயொரு செயல்முறை எரிமலையான பாரென் தீவு, மற்றும் நார்க்கொண்டம் ஆகிய எரிமலைகள் இங்குள்ளன. வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia