பரத்பூர் சமஸ்தானம்
![]() ![]() ![]() ![]() ![]() ![]() பரத்பூர் இராச்சியம் அல்லது பரத்பூர் சுதேச சமஸ்தானம் (Bharatpur State), இந்தியா]]வின் மேற்கில் அமைந்த தற்போதைய இராஜஸ்தான் மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்த பழைய பரத்பூர் மாவட்டத்தின் நிலப்பரப்புகளை கொண்டது. ஜாட் இனத்தைச் சேர்ந்த பதான் சிங் என்பவர் பரத்பூர் இராச்சியத்தை 1755-ஆம் ஆண்டில் நிறுவினார். மன்னர் சூரஜ் மால் ஆட்சியின் (1755–1763) போது பரத்பூர் இராச்சியத்தின் ஆண்டு வருமானம் ரூபாய் 17,500,000 ஆக இருந்தது.[1] பரத்பூர் இராச்சியத்தின் மொத்தப் பரப்பளவு 5,123 சதுர மைல் ஆகும். 1931-இல் இதன் மக்கள் தொகை 4,86,954 அக இருந்தது. வரலாறு1755-ஆம் ஆண்டில் முகலயாப் பேரரசின் படைகளுக்கு எதிராக ஜாட் இன மக்கள் தலைவர் பதான் சிங் தலைமையில் தில்லி, ஆக்ரா மற்றும் மதுரா பகுதிகளில் நடைபெற்ற கிளர்ச்சிகள் மூலம் பரத்பூர் இராச்சியம் 1755-இல் நிறுவப்பட்டது. [2] 1895-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியா அரசு கொண்டு வந்த இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் பரத்பூர் இராச்சியம், பிரித்தானிய இந்தியா அரசுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது. [3][4][5] இது பிரித்தானிய இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியப் பகுதியில் இருந்த 565 சமஸ்தானங்களில் ஒன்றாகும். இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்த இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சியாக 6 ஏப்ரல் 1949 வரை இருந்தது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்த சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia