பரம்பரம்(ஆங்கிலம்: PARAM) என்பது இந்தியாவில் உருவாக்கப்பட்ட மீத்திறன் கணினி, இது இந்தியாவிலுள்ள மத்திய அரசின் மத்திய உயர்கணிணி மேம்பாட்டு மையத்தால்(சிடாக்) வடிவமைத்து உருவாக்கப்பட்டது ஆகும். 'பரம்' என்ற வடமொழி சொல்லுக்கு ஒப்புயர்வற்ற, தனிமுதன்மையான என்று பொருள். பரம் என்ற பொதுப்பெயருடன் தொடர்ந்து பல மீத்திறன் கணினிகளை சிடாக் பல்வேறு காலகட்டங்களில் உருவாக்கி வருகிறது. இந்த வரிசையில் கடைசியாக உருவாக்கப்பட்டு சமீபத்தில் வந்த(பிப்ரவரி 8, 2013) மீத்திறன் கணினி பரம் யுவா II ஆகும்[1]. பரம் யுவா II 500 டெரா பிளாப்(tera flops) சக்தியுடன், 200 டெரா பைட்(tera byte) தேக்குத்திறனும் உடையது. வரலாறுஇந்தியாவின் மீது விதிக்கப்பட்டிருந்த ஆயுத தடையாணையின் காரணமாக மீத்திறன் கணினிகளை உருவாக்கிவந்த கிரே கம்ப்யூட்டர்ஸ்(Cray computers) அதன் தொழில்நுட்பங்களையும், மீத்திறன் கணினிகளையும் இந்தியாவிற்கு தரமறுத்தது. இதன் காரணமாக 1980-ல் இந்திய அரசு உள்நாட்டிலேயே மீத்திறன் கணினிகள் மற்றும் அதை உருவாக்கும் தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கான ஒரு திட்டத்தை கொண்டுவந்தது. இதை நிறைவேற்றவும், மீத்திறன் கணினித்துறையில் தன்னிறைவை அடையும் வகையிலும் 1988-ல் முனைவர். விஜய் பாட்கர்(Dr. Vijay Bhatkar) அவர்களை இயக்குனராகக்கொண்டு மத்திய உயர்கணிணி மேம்பாட்டு மையதை(சிடாக்) உருவாக்கியது[2]. 1990-ல் மூல முன்மாதிரி வடிவம் உருவாக்கப்பட்டு, சூரிச்-சில் நடந்த மீத்திறன் கணினி மாநாட்டில் காட்சிபடுத்தப்பட்டது. இறுதியாக 1991-ல் பரம் 8000 உருவாக்கப்பட்டது, இதுதான் இந்தியாவின் முதல் மீத்திறன் கணினியாகும். பரம் வரிசையில் பல்வேறு காலகட்டங்களில் வந்த மீத்திறன் கணினிகள்
உசாத்துணைகள்
|
Portal di Ensiklopedia Dunia