பரிணாமம் (திரைப்படம்)
பரிணாமம் (Parinamam) என்னும் மலையாள மொழித் திரைப்படத்தை இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் தயாரித்தது. இதை பி. வேணு இயக்கினார்.[1] பணி ஓய்வுக்குப் பின்னரும், வயதான காலத்திலும் முதியோர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களையும் எதார்த்த கால சூழ்நிலைகளையும் களமாகக் கொண்ட திரைப்படம். நடித்தோர்
கதைதந்தையின் ஓய்வூதியப் பணத்தின் மூலம் வேலை பெறும் மகன், அதன் பின்னர் தந்தையை எவ்வாறு நடத்துகிறான் என்பதைக் கதைக்களமாகக் கொண்டு அதனிடையே பல சிறு சிறு சம்பவங்களையும் சேர்க்கிறார் இயக்குநர். வேலைக்குச் சேர்ந்த பின்னர், தனது பெற்றோரையும் சகோதரியையும் விட, தன் மனைவி, குழந்தை ஆகியோரின் மீது கவனம் திரும்புவதும், அதன் ஒரு பாகமாக தனது தந்தையின் பிரியமான வீட்டை விட்டு அனைவரும் குடிமாற அவன் செய்யும் ஏற்பாடுகளும் கதைக்களத்தில் இடம்பெறுகின்றன. அவனது வீடு மாற்றும் செயல்பாடுகள் நிறைவேறினவா இல்லையா என்பதுடன் திரைப்படத்தை முடித்திருக்கிறார். பணி ஓய்வுக்குப் பின்னர், தவறான தமது தீர்ப்புக்காக வருந்தி, அனைத்தையும் துறந்து தீர்த்த யாத்திரை செல்லும் ஒரு நீதிபதியைப் பற்றிய கதையும் இடம் பெறுகிறது. வீட்டில் மரியாதையைப் பெற, வேலை இல்லாத நிலையிலும் வேலையிருப்பதாகக் கூறி கடன் வாங்கி வீட்டில் தரும் முதியவரைப் பற்றிய கதையும் இடம் பெறுகிறது. தம் குழந்தைகளை வளர்க்க பிச்சையெடுத்த ஒரு தந்தை, தன் பிள்ளைகளாலேயே அவமானப்படுத்தப்படும் சம்பவமும் இடம் பெற்றுள்ளது. அங்கீகாரங்களும் விருதுகளும்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia