பறக்கும் பாம்பு
பறக்கும் பாம்பு(Chrysopelea ornata) அல்லது தங்க மரப் பாம்பு[1][2][3], அழகு பறக்கும் பாம்பு, தங்க பறக்கும் பாம்பு என்பது ஒரு நஞ்சில்லா பாம்பு ஆகும். இப்பாம்புகள் தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் காணப்படுகிறது. விளக்கம்இப்பாம்புகள் பொதுவாக பச்சை நிறம் கொண்டதாகவும், கருப்பு குறுக்கு கோடுகளும், மஞ்சள், சிவப்பு நிற பாகங்களும் கொண்டிருக்கும். இதன் உடல் மெலிந்து வழவழப்பான செதில்களுடன் இருக்கும். இதற்கு சுருங்கிய கழுத்தும், மழுங்கிய மூக்கும் பெரிய கண்களும், தட்டையான தலையும் கொண்டிருக்கும். [1] பறக்கும் பாம்பு 11.5 இல் இருந்து 130 செ.மீ (0.38 -4.27 அடி) நீளம்வரை உள்ளது.[4] முதிர்வு நீளம் சுமார் 1 மீ (3.3 அடி) ஆகும். [4] இதன் வால் மொத்த நீளத்தில் சுமார் நான்கில் ஒருபங்கு இருக்கும்.[1] நஞ்சுஇந்த வகைப் பாம்பன் வாயின் பின்புறத்தில் உள்ள நச்சுப்பற்களில் லேசான நஞ்சு கலந்த எச்சில் சுறப்பதால் தனது இரையைப் பிடித்து செயலிழக்க வைக்க வல்லதாக உள்ளது. இருந்தாலும் மருத்துவரீதியில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரியவில்லை. பிற மொழிகளில் பெயர்கள்
புவியியல் எல்லைஇந்தியா (வட வங்காளம்), வங்கதேசம், இலங்கை, மியான்மர், தாய்லாந்து, மேற்கு மலேசியா, லாவோஸ், கம்போடியா, வியட்நாம், சீனா ( ஹாங்காங், ஹைனன், யுன்னான் ), இந்தோனேசியா ( சுமத்ரா, ஜாவா, போர்னியோ, சுலாவெசி), பிலிப்பைன்ஸ் .போன்ற இடங்களில் காணப்படுகிறது. இந்தியாவில் இந்த பாம்புகள் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் உத்தரப் பிரதேசத்தின் மலைப்பகுதிகள் , வட பீகார் , வட , மேற்கு வங்கம் [1] கிழக்கில் அருணாச்சல பிரதேசம் .[5] அந்தமான் தீவுகளில் உள்ள காடுகளில் காணப்படுகிறது. .[1] பாதுகாப்புஇப்பாம்புக்கு உள்ள அச்சுருத்தல் பற்றி தெரியவில்லை. [6] கிளையினங்கள்இப்பாம்புகளில் உறுதிபடுத்தப்பட்ட மூன்று கிளையினங்கள் உள்ளன அவை:
நடத்தைஇப்பாம்புகள் பகலாடிகளாகும். உயரமான மரங்க்கிளையில் இருந்து கீழேகுதிக்கவல்லது. எளிதாக மரத்தைவிட்டு மரத்திற்கு தாவும் திறன் பெற்றது. இந்த பாம்புகள் சிறந்த மரமேறி ஆகும். மரத்தின் பட்டைகளில் உள்ள சொரசொரப்பை பயன்படுத்தி சிறப்பாக ஏறும். இவை தென்னை போன்ற செங்குத்தான மரத்தில்கூட தங்கள் உடலில் உள்ள செதில்களை பயன்படுத்தி வேகமாக ஏறும். இவற்றின் உணவு பல்லிகள், வெளவால்கள், சிறிய கொறிணிகள் ஆகும்.[7] இது பறவை முட்டைகள் மற்றும் பூச்சிகள் போன்றவற்றையும் உண்ணும். பறத்தல்இப்பாம்புகள் தன் எதிரிகளான விலங்குகளிடமிருந்து தப்பிக்க, அல்லது தன் இரையை பிடிக்க, அல்லது காட்டினுள் நகர மரத்தில் இருந்து மரம் தாவ கிளைடர் எனப்படும் சறுக்கு வானூர்தி போல காற்றில் மிதந்து செல்ல்கிறது. இது தன் விலா எலும்புகளால் தன் அடிப்பகுதி தசைகளை விரித்து தலைகீழ் u போல ஆக்கி காற்றில் உந்தி மிதந்து மரத்தில் இருந்து மரம் தாவ இயலுகிறது. சில நேரங்களில் மரத்தில் இருந்து தரையில் இறங்கவும் இவ்வுத்தியை பயன்படுத்துகின்றன. இவ்வாறு இப்பாம்புகள் 100 மீட்டர் வரை கடப்பதாக அறியப்படுகிறது.[6] இனப்பெருக்கம்இப்பாம்புகளின் இனப்பெருக்கம் பற்றி குறைவாகவே அறியப்படுகிறது. இவை முட்டை இட்டு இனப்பெருக்கம் செய்பவை. [5] இவை ஆறு முதல் பன்னிரண்டு முட்டைகள் வரை இடுகின்றன.[1] ஸ்மித் கூற்றின்படி, இனச்சேர்க்கை ஜூன் மாதம் நடைபெறுகிறது. இப்பாம்பு குட்டிகள், 114–152 மிமீ (41⁄2 to 6 அல்குளம்) நீளம் கொண்டவை. பெண்பாம்புகள் 1,093 மிமீ (3 அடி 7இன்ச்) நீளம் இருக்கும். [1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia