பறவை நோக்கல்பறவை நோக்குதல் என்பது மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள குளம், குட்டை, ஏரி போன்ற நீர் நிலைகளில் காணப்படும் பறவைகளை கவனித்து பார்த்து, ஒலிகளைக் கேட்டு கற்றுக்கொள்ளுதல் மற்றும் அவற்றின் வாழிடங்களையும் உணவுமுறைகளையும் அறியும் ஒரு பொழுதுபோக்கு அம்சம். இருகண் நோக்கி, குறிப்பேடு, பறவைகள் பற்றிய அறிமுகக் கையேடுகளுடன் பறவைகளின் வாழிடம் அல்லது பறவைகள் சரணாலயம் சென்று பறவைகளை உற்று நோக்கி அறிவது பறவை நோக்குதல். ![]() பறவை நோக்குதல் நெறிமுறைகள்பறவை நோக்குதலுக்கு செல்ல வேண்டியவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய நெறிமுறைகள்:
![]() பறவைகளை இனங்காணுதல்பறவை நோக்குதலில் ஆர்வம் உடையவர்கள், பறவைகளின் வாழிடத்தைக் கண்டறிந்த பிறகு நோக்குதலுக்காக அதிகாலை நேரங்களில் செல்வதால் இரைதேட சுறுசுறுப்பாய் பறவைகள் இயங்கும். இந்நேரம் சிறந்ததாய் அமையும். இனங்காணும் முறைகள்உடல் மற்றும் சிறகுகள் (Body and Wings) & வண்ண அமைப்பு (Colour Pattern)ஒரு பறவையைப் பார்க்கும்பொழுது முதலில் அதன் வண்ணம் எவ்விடத்தில் எவ்வாறு அமைதுள்ளது, சிறகின் நிறம் அலகில் தலையின் நிறம், மார்பு, வயிறு போன்றவற்றின் நிறம் என்ன என்பதை முதலில் கவனிக்க வேண்டும். அளவு மற்றும் வடிவம் (Size and Shape)தெரிந்த பறவையை வைத்து இதனை முடிவு செய்யலாம். காக்கையை விட பெரியது, சிட்டுக்குருவியை விட பெரியது என்பது போன்று அடையாளம் காணுதல்.[2] அலகின் அமைப்பு (Beak / Bill Structure)![]() ஒவ்வொரு பறவைக்கும் அதன் வாழ்க்கை முறைக்கும் உணவு முறைக்கும் ஏற்ற வகையில் அதன் அலகு அமைந்திருக்கும்.
பறவைநோக்குதல் குறிப்பு
ஒரு புதிய பறவையைக் காணும்போது மேலே கூறிய ஐந்து கருதுகோள்களையும் நினைவில் கொண்டு தேதி, நேரம், பார்த்த இடம் ஆகியவற்றுடன் ஒரு சிறிய குறிப்பை எடுத்துக்கொள்வது புகைப்படம், இணையம் மற்றும் பறவைகள் பற்றிய புத்தகத்துடன் மேலும் பல தகவல்களை அப்பறவைகளைப் பற்றி குறிப்பெடுப்பது.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia