பலபடி![]() ஒரே மாதிரியான கட்டமைப்பு அலகுகள், சங்கிலி போன்ற அமைப்பில், மீண்டும் மீண்டும் ஒழுங்கமைக்கப்படுவதால் உருவாகும் வேதிப்பொருட்கள் பலபடி அல்லது பல்பகுதியம் (Polymer) எனப்படும். பலபடிகளின் தனிச்சிறப்பான இயல்புகள் காரணமாக,[2] அவை நாளாந்த வாழ்க்கையில் இன்றியமையாத முக்கியத்துவம் கொண்டவையாகக் காணப்படுகின்றன.[3] இம்முக்கியத்துவம் நன்கு அறியப்பட்ட தொகுப்பு நெகிழி பயன்பாட்டிலிருந்து வாழ்வுக்குத் தேவையான இயற்கை உயிரிப் பலபடியாகிய கருவமிலம் (கருவியக்காடி) மற்றும் புரதம் வரை பரந்தது. பலபடிகளின் கட்டமைப்பு அலகுகளாக ஒருபகுதிய மூலக்கூறுகள் காணப்படுகின்றன. பல ஒற்றைப்படி மூலக்கூறுகள் மீண்டும் மீண்டும் இணைக்கப்படுவதால் பலபடிகள் தோன்றுகின்றன. இவை பகிர்பிணைப்பு (கோவேலன்ட் பிணைப்பு - Covalent bond) மூலம் இணைக்கப்பட்டுள்ளன. பெயர் வழிகிரேக்கச் சொல்லான πολύ- poly- பல- என்ற பொருளுடையது. μέρος - meros என்பது உறுப்புகள் அல்லது அலகுகள் என்ற பொருள் கொண்டது. இதிலிருந்து Polymer-பலபடி என்ற சொல்லை 1833 இல் யோன்சு யாக்கோபு பெர்சீலியசு (Jöns Jacob Berzelius), உருவாக்கினார். இது "பாலிமெரிக்" (Polymeric) என்பதிலிருந்து கட்டியெழுப்பப்பட்ட கருத்தாகும். வரலாறுபலபடி தொகுக்கப்படும் வரலாறு 1811 இல் தொடங்கியது. அதாவது கென்றி பிறகொனட் (Henri Braconnot) தொகுப்பு செலுலோசை உருவாக்கியதையே இதன் தொடக்கம் எனலாம். 19ஆம் நூற்றாண்டில் இயற்கை நெகிழியின் பயன்பாட்டுக் காலத்தை அதிகரிப்பதற்காக வல்க்கனைசுப்படுத்தல் (vulcanized) மேற்கொள்ளப்பட்டது. இது அரைத் தொகுப்புப் பல்பகுதியத்தின் முக்கியமானதொரு அடைவாகும்.1907 இல் லியோ பைக்கலான்ட் முதலாவது முழுமையான தொகுப்பு பலபடியான பக்கலைட்டை கண்டறிந்தார். இது பீனோலை போமல்டிகைட்டுடன் கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலை மற்றும் அமுக்கத்தில் தாக்கமுற வைத்து உருவாக்கினார். பக்கலைட்டு 1909ஆம் வருடம் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பலபடித் தொகுப்பு![]() பலபடி செயற்பாடு என்பது ஓருறுப்பு மூலக்கூறுகள் சகப்பிணைப்பு (கோவேலண்ட்) மூலம் தொடர்ந்து இணைவதால் உண்டாகும் ஒரு சங்கிலிக் கட்டமைப்பகும். இத்தகைய பலபடி செயற்பாட்டின் போது ஓருறுப்பிலுள்ள சில வேதியக்கூட்டங்கள் இழக்கப்படும், எடுத்துக்காட்டாக பொலியெசுட்டர் (பொலி எத்திலீன் டெராப்பதலீன்)தொகுப்பை நோக்கினால்: இதன் ஓருறுப்பு டெரெப்தாலிக் காடி (terephthalic acid) (HOOC-C6H4-COOH) மற்றும் எத்திலீன் கிளைக்கால் (HO-CH2-CH2-OH) ஆனால் மீண்டும் மீண்டும் வரும் அலகு -OC-C6H4-COO-CH2-CH2-O-, இங்கு இரண்டு ஓருறுப்புகளும் இணையும் போது இரண்டு நீர் மூலக்கூறுகள் இழக்கப்படுகின்றன. ஆய்வுகூடத் தொகுப்புகள்ஆய்வுகூடத் தொகுப்பு முறைகள் இரு வகைப்படும். அவை படி வளர்ச்சி பல்லுறுப்பாக்கம், சங்கிலி வளர்ச்சி பல்லுறுப்பாக்கம் என்பனவாகும்.[4] சங்கிலி வளர்ச்சி பல்லுறுப்பாக்கத்தில் ஓருறுப்புக்கள் சங்கிலியை ஆக்கும் போது ஒரு தடவையில் ஒரு சங்கிலி மட்டும் இணையும்[5] ஆனால் படி வளர்ச்சி பல்லுறுப்பாக்கத்தில் பல ஓருறுப்பு சங்கிலிகள் ஒன்றுடன் ஒன்று நேரடியாக இணையும்.[6] இருப்பினும்,பாய்ம பலபடி முதலான புதிய முறைகள் இவ்விரு வகைகளோடும் பொருந்தாது. உயிரியல் தொகுப்புகள்![]() மூன்று வகையான உயிரிப் பலபடிகள் காணப்படுகின்றன. அவை: பல்சக்கரைட்டுக்கள், பல்பெப்டைட்டுக்கள், பல்நியுக்கிளியோடைட்டுக்கள் ஆகும். ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia