பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, நாகர்கோவில்

பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, நாகர்கோவில்.
வகைசென்னை அண்ணா பல்கலைக்கழத்தின் கல்லூரி
சார்புஅண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றது
துறைத்தலைவர்வி. ஏ. நாகராஜன்[1]
அமைவிடம், ,
8°10′00″N 77°24′43″E / 8.1665804°N 77.4120585°E / 8.1665804; 77.4120585
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்http://www.ucen.ac.in

பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, நாகர்கோவில் (University College of Engineering, Nagercoil) (யுசிஇஎன்) என்பது அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி ஆகும். இது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலின், கோணம் பகுதியில், நாகர்கோயில் தொழிற் பேட்டை 629004 என்ற பகுதியில் அமைந்துள்ளது. இது தமிழக அரசால் 2009 இல் நிறுவப்பட்டது.

கல்வி

இந்தக் கல்லூரி பல்வேறு பொறியியல் துறைகளில் இளநிலைப் படிப்புகளை வழங்குகிறது. மேலும் பகுதிநேர படிப்புகளாக முதுநிலைப் பொறியியல் படிப்புகளை வழங்குகின்றது.

சேர்க்கை

பன்னிரண்டாம் வகுப்பு (உயர்நிலை பாடநெறி) தேர்வில் மாணவர் பெறும் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் இளநிலைப் பொறியியல் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். மாணவர் தரவரிசை மற்றும் சேர்க்கை வழிமுறைகள் அண்ணா பல்கலைக்கழகத்தால் செய்யப்படுகிறது.

முதுநிலைப் பொறியியல் படிப்புக்கான மாணவர்கள் பொதுவாக தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வின் (டான்செட்) தரவரிசைகளின் அடிப்படையில் சேர்க்கப்படுகின்றனர்.

துறைகள்

வழங்கப்படும் படிப்புகள்

இளநிலை முதுநிலை (பகுதி நேரம்)
குடிசார் பொறியியல் எம்பிஏ (அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மையம், சென்னை -25, வழியாக);
குடிசார் பொறியியல் (தமிழ் வழி)
கணினி அறிவியல் பொறியியல்
மின்னணு மற்றும் தொடர்புப் பொறியியல்
தகவல் தொழில்நுட்பம்
இயந்திர பொறியியல்
இயந்திர பொறியியல் (தமிழ் வழி)
மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல்

நூலகம்

இக்கல்லூரி நூலகத்தில் தேவையான புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளின் தொகுப்பு உள்ளது. ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்கு போதுமானதாக இணைய வசதி கொண்ட கணினிகளை நூலகம் கொண்டுள்ளது.

வேலைவாய்ப்பு

இக்கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பயிற்சியளிப்பதற்கும் கல்லூரியில் வேலைவாய்ப்புகளை நிர்வகிப்பதற்கும் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு பிரிவு உள்ளது. பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பிரிவானது கல்வி-தொழில் பயிற்சி மற்றும் ஆளுமை மேம்பாட்டு பயிற்சி ஆகியவற்றை வழங்குகிறது. பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலரின் மேற்பார்வையில் தன்னார்வ மாணவர் பிரதிநிதிகளால் இது நிர்வகிக்கப்படுகிறது.

தரவரிசை

அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த 497 தன்னாட்சி அல்லாத பொறியியல் நிறுவனங்களில் (கட்டடக்கலை கல்லூரிகள் அல்ல) இக்கல்லூரி 7 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. இத்தரவரிசையானது 2013 ஏப்ரல்-மே பல்கலைக்கழகத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விழுக்காட்டை அடிப்படையாகக் கொண்டது.[2]

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-14. Retrieved 2019-10-05.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2017-07-02. Retrieved 2019-10-05.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya