பல்கு
பல்கு (/bɑːlx/; பஷ்டோ, Persian: بلخ, பல்கு; பண்டைக் கிரேக்கம்: Βάκτρα, பக்ட்ரா; பாக்திரியம்: Βάχλο, பாக்லோ) என்பது ஆப்கானித்தானின் பல்கு மாகாணத்தில் உள்ள ஒரு பட்டணம் ஆகும். பல்கு மாகாணத் தலைநகர் மசார் ஈ சரீப் நகரம் ஆகும். பல்கு நகரம் மசார் ஈ சரீப் நகரத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும், உஸ்பெகிஸ்தான் எல்லை மற்றும் ஆமூ தாரியா ஆற்றுக்குத் தெற்கில் சுமார் 74 km (46 mi) தொலைவிலும் இது அமைந்துள்ளது. இது வரலாற்றில் பௌத்தம்,சொராட்டிரிய நெறி மற்றும் இசுலாம் ஆகியவற்றின் பண்டைய மையமாக இருந்துள்ளது. குராசான் பகுதியின் ஒரு முக்கியமான நகரமாக ஆரம்ப காலத்தில் இருந்தே இது இருந்திருக்கிறது. முதன்முதலில் பல்கு நகரம் குறித்து இந்து சமய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமாக மகாபாரதத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. பாக்லீகர்கள் மக்கள் இப்பகுதியை ஆண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் ஆட்சியாளர்கள் குருச்சேத்திரப் போரில் பங்கு பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia