பல்ஜிந்தர் சிங்

பல்ஜிந்தர் சிங்
தனித் தகவல்கள்
தேசியம்இந்தியர்
பிறந்த நாள்18 செப்டம்பர் 1986 (1986-09-18) (அகவை 38)
பிறந்த இடம்தேரா பாசி, பஞ்சாப், இந்தியா
விளையாட்டு
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)20கி.மீ பந்தயநடை

'பல்ஜிந்தர் சிங் (Baljinder Singh) (பிறப்பு: 18 செப்டம்பர் 1986) ஓர் இந்திய தடகள வீரர் ஆவார். இவர் 20 கி.மீ பந்தய நடையில் போட்டியிடுகிறார். இவர் இலண்டனில் நடந்த 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் 1:25:39 நேரச் சாதனை படைத்தவர். இவரின் இதுவரையிலான சிறப்பான சாதனை 1:22:12 நேர அளவாகும்.[1]

இவர் இலண்டனில் நடந்த 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் 1:25:39 நேரச் சாதனை படைத்து ஆடவர் 20 கி.மீ பந்தயநடைப் போட்டியில் 43 ஆம் இடத்தைப் பிடித்தார்.

சொந்த வாழ்க்கை

இவர் பஞ்சாப் மாநில, மோகலி மாவட்டத்தில் சண்டிகார் நகருக்கு அருகமைந்த தேரா பாசியில் பிறந்தார். இவர் தன் விளையாட்டுப் பயிற்சியை பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மையத்தில் இராம கிருஷ்ணன் காந்தியிடம் பெற்றார்.[2][3]

மேற்கோள்கள்

  1. "Biography of Baljinder Singh". International Association of Athletics Federations (IAAF). Archived from the original on 24 ஆகஸ்ட் 2012. Retrieved 10 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "An introduction to Indian long distance walkers". The Hindu. Retrieved 9 July 2012.
  3. "The loneliness of the long-distance walkers". The Hindu. 7 July 2012 இம் மூலத்தில் இருந்து 4 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130204063607/http://www.thehindu.com/arts/magazine/article3613051.ece. 

வெளி இனைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya