பழுவூர்

பழுவேட்டரையர்கள் எனும் சிற்றரசர்களின் தலைநகராகச் சோழர்கள் காலத்தில் இருந்த நகரம் பழுவூர் ஆகும். பழுவூர் மண்டலம் தற்காலத்தில் அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தில் உள்ள மேலப்பழூர், கீழையூர், கீழப்பழூர் என மூன்று சிற்றூர்களாக பிரிந்துள்ளது.[1] திருச்சி-ஜெயங்கொண்டம் சாலையில் திருச்சியிலிருந்து ஐம்பத்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் பழுவூர் மண்டலம் அமைந்துள்ளது.

சோழர் கால கல்வெட்டுகள்

இங்கு அமைந்துள்ள அருள்மிகு அருந்தவநாயகி உடனுறை ஆலந்துறையார் கோவிலில் இருபத்து மூன்று சோழர் கால கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. அதில் இரண்டுநாழி அரிசிக்கு இரண்டுமா நிலம் தரப்பட்டதாகவும், திருமஞ்சனத்திற்கு 50 காசு தானம் நிலக்கிரயம், விளக்குதானம், நித்திய படித்தானம், செப்புப் பத்திர தானம், விளக்குக்காக இரண்டு கழஞ்சு தானம் முதலியவை அளிக்கப்பட்டதாக குறிப்புள்ளது.

பொன்னியின் செல்வனில்

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்திலும் பழுவேட்டரையர்களின் தலைநகரமாக பழுவூர் இடம்பெறுகிறது. சின்ன பழுவேட்டரையர், பெரிய பழுவேட்டரையர் எனும் இரு கதாப்பாத்திரங்கள் இந்த சிற்றரசை ஆள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பழுவூர்க் கோயில்கள்

கீழப்பழுவூரில் வடமூலேசுவரர் கோயில், மேலப்பழுவூரில் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில், கீழையூரில் இரட்டைக்கோயில் என்ற நிலையில் மூன்று கோயில்கள் உள்ளன.[2][3]

மேற்கோள்கள்

  1. List of Villages in Arialur tauk
  2. பழுவூர் கோயில்கள்
  3. மேலப்பழுவூர் & கீழையூர்

இவற்றையும் பார்க்கவும்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya