பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இஸ்லாமபாத் ல் உள்ளது. வரலாறு1861 இல் ஆங்கிலேய அரசு ஒன்றினைந்த இந்தியாவில் பல்வேறு உயர்நீதிமன்றங்களை உருவாக்கியது.சென்னை, லாகூர், கல்கத்தா பம்பாய் போன்ற மாகாணங்களில் உருவாக்கியது. 1935 ஆம் ஆண்டில் இந்திய அரசின் சட்டம் அமல்படுத்தப்படும் வரை, பெடரல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது, இந்த புதிய உயர் நீதிமன்றங்கள் அனைத்து வழக்குகளுக்கும் மிக உயர்ந்த நீதிமன்றங்கள் விசாரிக்க அனுமதி வழங்கியது. 1947இல் பாகிஸ்தான் விடுதலை அடைந்த பிறகு பெடரல் நீதிமன்றம் இரண்டாக பிரிக்கப்பட்டு இந்திய உச்சநீதிமன்றம், பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் என செயல்படத் தொடங்கியது. ஆங்கிலேயச் சட்டம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் நீதிபதியின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக தொடர்ந்து போது, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் சிறப்பம்சம் 1956 மார்ச் 23 அன்று பாகிஸ்தான் அரசியலமைப்பின் மூலம் வெளியிடப்பட்டது. பாகிஸ்தானின் அரசியலமைப்பின் ஒப்புதல் பெறப்பட்டு 1956 ல் உச்ச நீதிமன்றத்தை மீண்டும் நிறுவியது, "பெடரல் நீதிமன்றம்" என்ற பெயருக்கு பதிலாக " உச்ச நீதிமன்றம்" என்று பெயரை மாற்றியது, இஸ்லாமபாத்தில் கட்டிடம் கட்டும் வரை லாகூர் உயர்நீதிமன்றத்தில் இயங்கி வந்தது. தற்போது இஸ்லாமபாத்தில் உள்ள நிரந்தர கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அரசியலமைப்பு அமைப்புநீதிமன்றத்தின் அரசியலமைப்புஇந்த நீதிமன்றம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி 1947இல் உருவாக்கப்பட்டு பின் 1956இல் மறு கட்டமைக்கப்பட்டது. பின் 1973 இல் பாகிச்தான் அரசியலமைப்பு படி மீண்டும் வடிவமைக்கப்பட்டது. பகுதி 8இன் படி தற்போது பாகிச்தான் மக்களுக்குக்காக செயல்படுகிறது. நீதிமன்ற அதிகாரங்கள் / பிரிவுகள்உச்சநீதிமன்றத்தின் அமைப்பு, விதிகள், மற்றும் பொறுப்புகள் போன்றவற்றை அரசியலமைப்பு பகுதி 7 ன் படி கட்டுரைகள் இருந்து வரம்புகள் 176 மூலம் 191 அதிகாரங்கள் கையாள்கிறது
பாகிஸ்தானின் அரசியலமைப்பின் பாகம்7 உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் ஆகியவற்றின் அமைப்பை மறுசீரமைத்தது, ஆனால் உச்சநீதிமன்றத்தில் பணியாற்ற நீதிபதிகள் எண்ணிக்கை பற்றி குறிப்பிடப்படவில்லை. 1947 ஆம் ஆண்டில் சிந்து, பஞ்சாப், NWFP, பலூசிஸ்தான், கிழக்கு வங்காளம் ஆகியவற்றிலிருந்து தலைமை நீதிபதி மற்றும் ஆறு மூத்த நீதிபதிகள் இருந்தனர். நீதிமன்றத்தின் வேலை மற்றும் வழக்குகள் அதிகப்படியாகச் சென்றன. இதனால் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிக்க பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டு உச்ச நீதிமன்றம் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப்பட்டன. கட்டடங்கள்உச்சநீதிமன்றக் கட்டிடம் அரசியலமைப்பு அவென்யூவில் அமைந்துள்ளது. பிரதமரின் தலைமை அலுவலகம் தெற்கு புறமும் மற்றும் குடியரசுத்தலைவரின் இல்லம் மற்றும் பாராளுமன்றம் வடக்கு புறமும் அமைந்திருக்கிறது. நீதி மன்ற வளாகம் நீதிபதி அறைகள் மற்றும் அலுவலக அறைகளை உள்ளடக்கியுள்ளது. மையக் கட்டிடத்தின் உயரம் 167 அடி. மையக்கட்டிடத்தை சுற்றி நீதிபதி அறைகள் மற்றும் அலுவலக அறைகள் உள்ளன. 11 நீதிமன்ற அறைகள் மையக் கட்டிடத்தில் உள்ளது. இதில் 5 நீதிமன்ற அறைகள் முக்கியத்துவம் அறைகளாக கருதப்படும்.முதல் அறை (ஒன்றாம் அறை) மிகப்பெரிய அறையாகும். இந்த அறை 160 பார்வையளர்கள் அமரக்கூடிய 20 நீதிபதிகள் அடங்கிய பென்ஞ் வசதி கொண்டது. தலைமை நீதிபதி அறை முதல் தளத்தில் இயங்குகிறது. மேலும் கட்டிடத்தின் அடித்தளத்தில் பல விசாலமான அறைகளுடன் 1000 பேர் அமரக் கூடிய ஒரு பெரிய அரங்கும் உள்ளது. இங்கு வழக்கறிஞர்குளுக்கான நூலகமும் இயங்கி வருகிறது. நீதிபதிகள்தலைமை நீதிபதிதற்போது தலைமை நீதிபதி திரு.சாஹிப் நிஸார் பொறுப்பேற்றுள்ளார். பிற நீதிபதிகள்
தகுதிகள்ஒரு வெளிநாட்டு குடிமகன் அல்லது ஒரு வெளிநாட்டவர்உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனம் நீதிபதிகள் தகுதி பெற்ற தகுதிகள், தனிப்பட்ட அறிவுப்புலமை மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் போன்ற அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு பிரதமரின் நிறைவேற்று தேர்வுகளில் இருந்து நீதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டு பரிந்துரைப்பார். பின்னர் ஜனாதிபதி நியமனத்தை உறுதிப்படுத்தி இறுதியில் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியையும் நீதிபதியையும் நியமிப்பார். பாகிஸ்தானின் குடிமகன்ஐந்தாண்டுகளுக்கு மேல் ஒரு உயர் நீதி மன்றத்தில் ஒரு நீதிபதியாக பண்யாற்றிய அனுபவம் அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு குறைவான கால இடைவெளிகளில் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞராக இருக்க வேண்டும். மேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia