பாக்சா மாவட்டம்
பாக்சா மாவட்டம், இந்திய மாநிலமான அசாமில் உள்ளது. இதன் தலைமையகம் முசல்பூர் நகரில் உள்ளது. போடோலாந்து ஆட்சி மன்றத்திற்கு உட்பட்டது. 2004 ஆம் ஆண்டில் இருந்து இந்த மன்றத்தினால் நிர்வகிக்கப்படுகிறது.[1] இந்த மாவட்டத்தை பார்பேட்டா மாவட்டம், நல்பாரி மாவட்டம், காமரூப் மாவட்டம் ஆகியவற்றின் பகுதிகளை இணைத்து உருவாக்கியுள்ளனர்.[1] இதன் பரப்பளவு 2400 சதுர கிலோமீட்டர் ஆகும்.[2] பிரிவுகள்இந்த மாவட்டத்தை முசல்பூர், சல்பாரி, தமுல்பூர் என மூன்று வட்டங்களாகப் பிரித்துள்ளனர். வருவாய் அளவில் 13 வட்டங்களாகப் பிரித்துள்ளனர். அவை:
மக்கள் தொகை2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது 953,773 மக்கள் வாழ்ந்தனர்.[3] சராசரியாக சதுர கிலோமீட்டருக்கு 475 பேர் வாழ்கின்றனர்.[3] பால் விகித அடிப்படையில் 1000 ஆண்களுக்கு இணையாக 967 பெண்கள் இருக்கின்றனர்.[3]. இங்கு வாழ்வோரில் 70.53% கல்வியறிவு பெற்றுள்ளனர்.[3] சான்றுகள்
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia