பாக்ஸ் ஆபிஸ் குண்டுதிரைப்படத் துறையில், பாக்ஸ் ஆபிஸ் குண்டு அல்லது பாக்ஸ் ஆபிஸ் பிளாப் என்பது திரைப்படம் ஒன்று வர்த்தக ரீதியாக தயாரிப்பு நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தினால் அல்லது வெளியிடப்பட்ட பின் வசூல் ரீதியாக மிகவும் தோல்வியுற்ற படம் என்பதை குறிக்கிறது. [1] [2] ஒரு படத்தின் வசூல், தனது தயாரிப்புக்கான செலவு மற்றும் விநியோகத்திற்கான செலவுகளை விட மிக குறைவாக இருந்தால் பாக்ஸ் ஆபிஸ் குண்டு எனப்படும், ஏனெனில் அப்படம் அதை தயாரித்த நிறுவனத்திற்கு மிகுந்த நஷ்டத்தை ஏற்படுத்துவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. [3] படங்களின் தோல்விக்கான காரணங்கள்எதிர்மறை வாய் வார்த்தைகள்1980 களில் வசூல் ரீதியாக மோசமான தொடக்க வாரங்களைக் கொண்டப் படங்களை திரையரங்குகளிலில் இருந்து நீக்கிவிடுவர். இதில் எதிர்மறை வாய் வார்த்தைகள் முக்கிய பங்கு வகிக்கும். [ சான்று தேவை ] உயர் உற்பத்தி செலவுகள்சில நேரங்களில் ஒரு படம் நியாயமான வசூலைக் கொடுக்கலாம், ஆனால் ஒரு பெரிய பட்ஜெட்டின் காரணமாக ஒரு பாக்ஸ் ஆபிஸ் குண்டு என்று கருதப்படும். ஹெவன்ஸ் கேட் எனும் திரைப்படம் மூன்று மாத காலம் திரையரங்குகளில் ஓடியது. 36 மில்லியன் டாலர் பட்ஜெட் வைத்து தயாரிக்கப்பட்ட இப்படம் 7.5 மில்லியன் டாலர் வசூலித்து தோல்வியான படமாக மாறியது.[4] சுதந்திர திரைப்படங்கள்2006ல் வெளிவந்த சுதந்திரப் படமான The 2006 சைசிக்சு ரோடு அமெரிக்காவில் வெறும் 30 டாலர் மட்டுமே வசூல் செய்தது. டாம் சைச்மோர் மற்றும் கேத்தரின் ஹேகில் நடித்த இப்படத்தின் பட்ஜெட் மட்டும் 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இப்படத்தை டாலஸில் ஒரே ஒரு திரையரங்கில் மட்டுமே வெளியிட்டனர். எனவே தான் இப்படம் 30 டாலர் எனும் மோசமான வசூலை எட்டியது.[5][6] 2011 இல், தி வோஸ்ட் மூவி எவர்! எனும் திரைப்படம் அமெரிக்காவில் வெறும் 11 டாலர் மட்டுமே வசூலித்தது. [7] மேலும் காண்ககுறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia