பாசித்திரள்![]() பாசித்திரள் அல்லது பாசிப்படர்ச்சி (algal bloom) என அறியப்படும் நிகழ்வானது பாசிகளால் (அ) அலைதாவரங்களால் நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய திடீர் சூழ்நிலை மாற்றமாகும். இது நீர்நிலைகளில் காணப்படும் பாசிகள் அல்லது தாவரங்கள் தனக்கு ஒத்தச் சூழ்நிலை வரும்போது இனப்பெருக்கம் திடீரென மிகுதியாகி நீர்நிலையின் மேற்பரப்பில் படர்ந்து (மொத்த நீர்நிலையே மூடிய வன்னம்) பாசிகளின் சேர்க்கையாக காட்சியளிக்கும். இதையே நாம் பாசிப்படர்ச்சி/பாசித்திரள் என விளிக்கின்றோம். பாசித்திரள் நன்னீரிலோ கடல் நீரிலோ தனக்கு ஏற்ற சூழ்நிலைகள் உருவாகும் வேளைகளில் தோன்றுகின்றன. பொதுவாக சில குறிப்பிட்ட இன அலைதாவரங்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட பாசியே இதற்குக் காரணமாகின்றது. சில பாசித்திரள்கள் எளிதில் அடையாளம் காணக்கூடியவாறு நீரின் மேற்பரப்பு நிறம் மாறிக் காணப்படும், இதற்கு பாசிகளில் உள்ள நிறமிகள் தான் காரணம். வழமையாக பாசித்திரள் பச்சை நிறத்தில் காணப்பட்டாலும் மஞ்சள், பழுப்பு, சிவப்பு போன்ற நிறங்களில் காணப்படலாம், இது பாசி இனத்தைப் பொறுத்து வேறுபடுகின்றது. வெண்பச்சை பாசித்திரள் நீலப்பச்சைப்பாசியால் ஏற்படுகின்றது. நீலப்பச்சைப் பாசிகளில் குறிப்பிடத்தக்கவனவாக அனபென்னா, ஆசிலடோரியா, நாசுடாக்கு மற்றும் மைக்ரோசிச்டிச் என்னும் பேரினங்கள் பாசிப்படர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன [1]. பாசித்திரளில் முக்கியமாகக் கருதவேண்டியது கெடுதியான/நச்சுமிகுந்த பாசித்திரள் ஆகும். இந்நிகழ்வில் பாசிகள் நச்சுப்பொருட்களை வெளிவிடுகின்றன. அலெக்சந்திரியம் (Alexandrium) மற்றும் கரெனியா என்னும் ஈர்கசைவாழி (Dinoflagellate) போன்ற அலைதாவர இனங்கள் இதற்கு எடுத்துக் காட்டாகும். இத்தகைய பாசித்திரள்கள் பழுப்பு அல்லது சிவப்பு நிறத்தில் கடற்கரைப்பகுதிகளில் தோன்றுவது செவ்வலைகள் (Red Tide) என்று அழைக்கப்படுகின்றது. நீலப்பச்சைப்பாசிகளில் குறிப்பிடத் தக்கவனவாக மைக்ரோசிச்டிச் மற்றும் நாடுலேரியா என்னும் பேரினங்கள் முறையே மைக்ரோசிச்டின் மற்றும் நாடுலாரின் என்னும் நச்சுக்களை வெளிவிடுகிறது. தமிழகத்தில்தமிழகத்தின் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பாசித்திரள் தோன்றுகிறன்றன. இதனை மீனவர்கள் பூங்கோரை என்றழைக்கின்றனர். இவை கடலில் படரும் போது கடல்நீர் பச்சை நிறத்தில் மாறிவிடும். அப்போது கடல் நீர்ரோட்டம், கடல் அலை, சூறைக்காற்று, போன்றவற்றின் காரணமாக இவை கடலின் பல்வோறு பகுதிகளுக்கு பிரிந்து சென்றுவிடுவதால் பெரும்பாலும் மீன்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. சில ஆண்டுகளில் கடல் நீர்ரோட்டம், கடல் அலை, கடுங்காற்று போன்றவை இல்லமல் போகும்போது இந்த பாசிகள் இடம்பெயராமல் குறிப்பிட்டப் பகுதியில் தேங்கிவிடுக்னிறன. அப்போது இந்த நுண்ணுயிர் கடற்பாசிகளை மீன்கள் சாப்பிடுவதால் மீன்களின் செதில்கள் அடைக்கப்பட்டு சுவாசிக்க முடியாமல் திணறி உயிரிழந்து கரை ஒதுங்குகின்றன.[2] தீமைகள்![]()
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia