பாசுகல் எகிரன்பிரிவுண்டு
பாசுகல் எகிரன்பிரிவுண்டு (Pascale Ehrenfreund) (பிறப்பு:1960, வியன்னா) ஓர் ஆசுத்திரிய வானியற்பியலாளர் ஆவார். இவர் வியன்னா பல்கலைக்கழகத்தில் இருந்து மூலக்கூற்று உயீரியலில் முதுவர் பட்டமும் வானியற்பியலிலும் வான்வேதியியலிலும் முனைவர் பட்டமும் பெற்றார். வெப்சுட்டர் இலெய்டனில் இருந்து மேலாண்மையியலிலும் தலைமையேற்பிலும் முதுவர் பட்டமும் பெற்றுள்ளார். விண்வெளிக்கொள்கையின் ஆராய்ச்சிப் பேராசிரியராகவும் ஜார்ஜ் வாழ்சிங்டன் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுச் செயல்பாடுகள் பதவியையும் ஏற்பதற்கு முன்பு நிய்மேகனில் இருந்த இராடுபோர்டு பல்கலைக்கழகத்திலும் இலெய்டன் பல்கலைக்கழகத்திலும் நெதர்லாந்து ஆம்சுட்டர்டாம் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக இருந்துள்ளார். இவர் ஆசுத்திரிய அறிவியல் நிதியின் முதல் பெண் தலைவராவார். இவர் 2015 இல்செருமானிய வான், விண்வெளி மையத்தின் முதன்மைச் செயல் அலுவலராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் தான் செருமனியின் மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனத்தைத் தலைமையேற்று நட்த்திய முதல் பெண்மணி ஆவார்.[1] 9826 எகிரன்பிரிவுண்டு எனும் முதன்மைப் பட்டை குறுங்கோள் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[2] வாழ்க்கைவிருதுகள்
கல்விக்கழகங்களிலும் குழுக்களிலும் வகித்த உறுப்பினர் தகைமைகள்
மேற்கோள்கள்
நூல்தொகை
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia