பாஞ்சராத்திரம்

தென்கலை திருமண்காப்பு

பாஞ்சராத்திரம் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் இரண்டு பிரிவுகளின் ஒன்று. ஐந்து இரவுகளில் திருமாலால் அருளப்பட்டதாகக் கருதப்படுவது பாஞ்சராத்திர நெறியாகும். இதனை வேதத்துக்கு இணையாக் கருதினார் இராமானுசர்.[1].[2].

வைகானச ஆகம விதிகள் வைகானச பிராமணர்களையே முக்கிய சடங்குகளில் அனுமதிக்கின்றன. பாஞ்சராத்திர ஆகம விதிகள் தீட்சை பெற்றுக் கொண்டவர்களையும் கோயில் பூசைகளில் அனுமதிக்கின்றன. திருவிலச்சினை முதலிய பஞ்ச சம்ஸ்கார தீட்சை பெற்ற பிராமணர் அல்லாதவர்களையும் சில கோயில் பணிகளில் ஈடுபட அனுமதிக்கிறது.[3]

கிராமப்புறப் பெருமாள் கோயில்களில் ஸ்ரீவைஷ்ண சம்பிரதாயத்தை கடைப்பிடிக்கும் இதர சமுகத்தை சேர்ந்தவர்கள் இன்றும் பூசைகள்செய்து வருகின்றனர்.

பாஞ்சராத்திர முறையில் மந்திரங்களுடன், தந்திரங்களும் முத்திரைகளும், கிரியை (சடங்கு)களில் முக்கிய இடம் பெறுகின்றன. வழிபாட்டின்போது தூப தீபங்கள் காட்டுவதிலும் வரிசை முறை வேறுபடுகின்றது.

திவ்வியப் பிரபந்தத்தில் வைணவ தீட்சையான திருவிலச்சினை வலியுறுத்தப்படுகிறது. நின் கோயிற் பொறியாலே ஒற்றுண்டு என்று பெரியாழ்வார் பாடக் காணலாம். ஆதலால் நாலாயிர திவ்வியப் பிரபந்தங்கள் பாஞ்சராத்திர நெறியினை ஏற்றுக்கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

இவற்றையும் காண்க

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya