பாபநாசம் அணை
பாபநாசம் அணை, தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலியிலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ளது. இது திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு முக்கிய அணையாகும். இந்த அணையில் 143 அடிவரை நீரைத் தேக்க இயலும். அணையின் கொள்ளளவு 5,500 மில்லியன் கனஅடி. பாபநாசம் மலையில் ஆங்கிலேயர் காலத்தில் 1942 இல் இந்த அணை கட்டப்பட்டது. இவ்வணையிலிருந்து திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆறு பாய்கிறது. இதன் மூலம் இவ்விரு மாவட்டங்களும் பாசன வசதி பெறுகின்றன[1]. மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் விருதுநகர் ,தென்காசி மாவட்டங்களின் ஆண்டு முழுவதுக்குமான குடிநீர் தேவையை அணை தருகிறது. புனல்மின் உற்பத்தி நிலையம்பாபநாசம் அணையில் புனல் மின் நிலையம் செயல்பட்டுவருகிறது. இது 28 மெகாவாட் திறன் கொண்டது. இதில் நான்கு ஃபிரான்சிஸ் விசையாழி-மின்னாக்கிகள் உள்ளன. முதல் அலகு 1944 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் இயக்கப்படுகிறது.[2][3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia