பாப்பாவினம்பாப்பாவினம் ஒரு பாட்டியல் இலக்கண நூல். இது பாக்களையும் பாவினங்களையும் பற்றிக் கூறுகிறது. இதனாலேயே இதற்குப் பாப்பாவினம் (பா + பாவினம்) என்னும் பெயர் ஏற்பட்டது. இதற்கு மாறன் பாப்பாவினம் என்ற பெயரும் வழங்குகிறது. மாறனலங்காரம் (அணி), மாறன் அகப்பொருள் (பொருள்) ஆகிய நூல்களை இயற்றிய திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரே இதனையும் இயற்றினார் என்பதே பெரும்பாலானோரின் கருத்து. எனினும் இதனைக் காரி இரத்தின கவிராயர் என்பவர் இயற்றினார் என்ற கருத்தும் நிலவுகின்றது[1]. நூலாசிரியரின் ஏனைய இரண்டு நூல்களைப் போலவே இதுவும் வைணவ ஆழ்வார்களில் ஒருவராகிய நம்மாழ்வார் மீது பாடப்பட்டது. இலக்கிய நூல்களை மட்டுமன்றி இலக்கண நூல்களையும் சமயப் பரப்புரைக்குப் பயன்படுத்த முடியும் என்பதற்கு, வைணவத்தின் பெருமை கூறும் இந்நூல் சான்றாக விளங்குகிறது. அமைப்புஇலக்கியத்திலிருந்து எடுத்துக்காட்டுகளைக் கொடுத்து அவற்றுக்கு இலக்கணம் கூறும் வகையில் அமைந்தது இந்நூல். என்னும் பாவகைகள் நான்கு,
குறிப்புகள்உசாத்துணைகள்
இவற்றையும் பார்க்கவும்வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia