பாப்பா நாடு சமீன்

பாப்பாநாடு சமீன் என்பது தமிழ்நாட்டின், பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த ஒரு சமீன் ஆகும்.

அமைவிடம்

பாப்பாநாடு சமீனானது தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சாலையில், பட்டுக்கோட்டைக்கு முன்னதாக 12 கிலோமீட்டர் தொலைவில் பாப்பாநாடு என்ற ஊரைத் தலைமை இடமாகக் கொண்ட சமீன் ஆகும். இது விஜய தேவர் என்ற பட்டம் பூண்ட கள்ளர் குலத்தினரால் ஆளப்பட்ட ஒரு சமீன். பாப்பாநாடுக்கு கிழக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெள்ளுவாடி என்ற ஊரில் இவர்களின் அரண்மணை இருந்தது. இவர்கள் இங்கிருந்து ஆண்டதால் இவர்கள் வளுவாடியார், வழுவாடியார் என அழைக்கப்பட்டனர். இதன் சமீந்தாராக கி.பி. 1736இல் இருந்த ராஜஸ்ரீ ராமலிங்கம் விசயாத்தேவர் என்பவர் காசியின் அன்னதானக்கட்டளைக்கு திருமாஞ்சோலை என்னும் ஒரு ஊரை கொடையாக அளித்து அதை செப்பேட்டில் பதித்துள்ளார்.[1] 1879 ஆண்டுவாக்கில் பாப்பாநாடு சமீனானது 36 கிராமங்களோடு 23412 ஏக்கர் பரப்பளவோடு இருந்தது.[2]

11.05.1757 ஆம் ஆண்டு செப்பேட்டில், நல்லவன் விஜயதேவர் அவர்கள் குமாரன் ராமலிங்க விஜயத்தேவர் அவர்கள் பாப்பாநாட்டவர்களுக்கு காணியாக இருக்கிற மன்னார்குடி ஜெயங்கொண்டநாதர் கோயிலுக்கு அர்த்தசாம பூசைக்கு 46 பொன் இராசகோபால சக்கரத்தை வழங்கியிருக்கிறார். இன்றும் அந்த கோயில் பாப்பாநாடு ஜமீன் சிற்பம் வாழிப்பாட்டில் இருந்துவருகிறது.[3]

மேற்கோள்கள்

  1. கே.என். சிவராமன் (அக்டோபர் 2018). "ஜமீன்களின் கதை, பாப்பாநாடு ஜமீன்". தினகரன், வசந்தம் இணைப்பு. 
  2. ந. மு. வேங்கடசாமி நாட்டார் (2006). கள்ளர் சரித்திரம். சென்னை: எனி இந்தியன் பதிப்பகம். p. 79.
  3. திருவாரூர் மாவட்ட கல்வெட்டுகள். 2000. pp. 81.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya