பாம்புச் செதில்கள்

பச்சை பாம்பின் மேற்புறத்தில் உள்ள செதில்கள்

பாம்புகளின் உடலின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள செதில்கள் பாம்புச் செதில்கள் என்றழைக்கப்படுகின்றன[1]. இச்செதில்கள் பல்வேறு வடிவத்திலும், அளவிலும் வண்ணங்களிலும் ஒவ்வொரு சிற்றினத்திற்குத் தகுந்தாற்போல் காணப்படுகின்றன.இந்த செதில்கள் பாம்புகளின் உடலின் வெப்பநிலையை தக்க அளவில் வைத்துக்கொள்ளவும், உருமறையவும், ஊர்ந்து செல்லவும் உதவுகின்றன. மேலும் சில இனங்களில் இதில் உள்ள வண்ணங்களும் அதன் அமைப்புகளும் தன் எதிரியை பயமுறுத்தவும் பயன்படுகின்றன.

கட்டுவிரியனின் முதுகெலும்புச்சிரை - பெரிதாக்கப்பட்டுள்ளது


வகைப்படுத்த உதவுதல்

பாம்பின் தலையின் மேற்பகுதியில் உள்ள செதில்களின் பெயரிடல்முறைமை
பாம்பின் தலையின் அடிப்பகுதியில் உள்ள செதில்களின் பெயரிடல்முறைமை
பாம்பின் தலையில் உள்ள செதில்களின் பெயரிடல்முறைமை-பக்கவாட்டுத் தோற்றம்

இச்செதிகளில் பல்வேறு வடிவத்திலும், அளவிலும் மற்றும் வண்ணங்களிலும் ஒவ்வொரு சிற்றினத்திற்குத் தகுந்தாற்போல் காணப்படுவதால் ஒத்தபுறத்தோற்றத்தைக் கொண்ட சிற்றினங்களை வகைப்படுத்த இச்செதில்களின் எண்ணிக்கையும் அளவுகளும் பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்

  1. Boulenger, George A. 1890 The Fauna of British India. page 1
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya